Sunday, October 07, 2007

3. ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

கர்நாடகத்தில் திடீர் திருப்பம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007

பெங்களூர்:

கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கட்சி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பாஜக நேற்று தீர்மானித்தது. இதையடுத்து துணை முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள், இன்று காலை மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக அளித்தனர்.

இதையடுத்து குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது. ஆனால் மக்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். ஆளுநரை சந்திக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்து விட்டுச் சென்ற சில மணி நேரங்களில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி செயலாளர் ரமேஷ்குமார் தலைமையிலான குழு ஆளுநரை சந்தித்தது.

அப்போது, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தார் ரமேஷ்குமார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு தரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நன்றிங்க

எப்படியோ இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்காவது தேர்தலை சந்திக்காம ஆட்சிய ஓட்டங்கப்பா!

No comments: