'ராமர்': கருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007
லக்னோ:
ராமர் பாலம் குறித்தும், ராமர் குறித்தும் விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாஜக முன்னாள் எம்பி ராம்விலாஸ் வேதாந்தி இன்று திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கருணாநிதிக்கு எதிராக பாத்வா விதித்ததில் தவறு கிடையாது. பகவத்கீதையில், யார் ஒருவர் உன்னுடைய கடவுளை பற்றி தவறாக பேசுகிறார்களோ அவரின் நாக்கை துண்டித்து விடு என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் நான் பாத்வா விதித்தேன். நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை.
ராமர் பற்றி தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் வரும் நவம்பர் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளன.
ராமர் குறித்து விவாதம் நடத்த கருணாநிதி தயார் என்கிறாரே. விவாதிக்க நான் தயார், அவர் தயாரா?.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களின் மனதை துன்புறுத்தினால், அவர்களின் ஆதரவு திமுக மற்றும் காங்கிரசுக்கு சுத்தமாக கிடைக்காது. மைனாரிட்டிகளின் ஓட்டை நம்பி தான் அவர்கள் காத்திருக்க வேண்டும்.
ராமரை, குடிகாரர் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியுள்ளதாக கருணாநிதி சொல்லி இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். ராமர் தனது வாழ்நாளில் பழங்களைத் தான் உணவாக உட்கொண்டார்.
நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.
ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் வேதாந்தி.
நன்றிங்க
என்னய்யா இது? முதலில் பத்வா கொடுத்துவிட்டு பிறகு இல்லை என்று பல்டி அடித்தார். இப்ப, ''நான் பத்வா விதித்ததில் தவறு கிடையாது'' என்று மீண்டும் மனுஷர் அந்தர் பல்டி அடித்திருக்கிறாரே...!?
வாழ்க, பத்வா!
3 comments:
சகிப்புத்தன்மை இல்லாத ஆளாக இருக்கிறாரே!
ஏற்றுக்கொள்ள முடியாது.
வடுவூர் குமார் உங்கள் வரவுக்கு நன்றி.
//பாத்வா விதித்ததில் தவறு கிடையாது. பகவத்கீதையில், யார் ஒருவர் உன்னுடைய கடவுளை பற்றி தவறாக பேசுகிறார்களோ அவரின் நாக்கை துண்டித்து விடு என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் நான் பாத்வா விதித்தேன்.//
மதத்தை எவன் நம்புகிறானோ அவனுக்கு இந்த சட்டமெல்லாம் செல்லுபடியாகும். இந்த சட்டங்களை எவனெவன் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவன் ஆகிறோனோ, அவனுக்கு மட்டும்தான் இது போன்ற விதிகள் பாயும்.
அதை விட்டுவிட்டு, தி.க. கொள்கையாளர்களை எந்த மதச்சட்டங்களும் கட்டுப்படுத்த முடியாது. எந்த மசுரையும் புடுங்கவும் முடியாது.
இவ்வளவு சொல்லும் வேதாந்தி, பாக்கிஸ்தானில், பங்களாதேசத்தில் சதா எப்போது பார்த்தாலும் இந்துக்களை கொடுமை செய்தும் கொன்றும் வருகிறார்களே, அவர்களுக்கு இவரின் பத்வாவை பாயச்சொல்லும்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கபோதிகளை பொது மேடைகளில் பேசவிட்டதே பெரிய தவறு.
மத நம்பிக்கை என்பது ஒருவருடைய, ஒரூ சமூகத்துடைய தனிப்பட்ட விசயம். இதை பொதுவாக அனைத்து மக்களுடைய கருத்தாக மாற்ற நினைக்க சூழ்ச்சி செய்வது அனைத்து சமுதாங்களையும் விபரீதமான சூழ்நிலைகளுக்கு கொண்டுசெல்லும்.
கலைஞர் இப்போது இந்த கனத்தில் மக்கள் பிரதிநிதியாக, தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் இவரை குறித்து வேறொரு மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண சாமியார் சாடி இருப்பது, சவாலுக்கு அழைத்திருப்பது, கொலை வெறியை தூண்டியிருப்பது அனைத்தும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டியது. கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
மதம் போதிக்கிறது என்பதற்காக, அதை பொதுக்கருத்தாக மாற்ற நினைப்பது மடத்தனம்.
ஒரு மாநில முதலமைச்சரின் ஆட்சியில் கீழ் இருந்தும் வாழ்ந்தும் வந்துகொண்டிருக்கும் அனைத்து மக்களும் அவர்கள் கொள்கை கருத்து வேறுபாடுகள் உடையவர்கள் ஆகினும் இது போன்ற கனங்களில் இவருக்கு தோள் கொடுத்து இவருக்காக குரல் கொடுத்து பக்கத்தில் இருந்து ஆதரவு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது ஒரு கடமை. ஏதோ ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரு சாமியார் முதல்வரை கொலை செய்ய சொல்லி பூச்சாண்டி காட்டிவருகிறார். இதை கண்டித்து அனைத்து தமிழக தலைவர்களும் அறிக்கை விடவேண்டியது அவசியம். இதை விட்டுவிட்டு, ஏதும் செய்யாமல், சும்மாவென இருப்பது, சாமியார் காட்டும் பூச்சாண்டிகளுக்கு துணைபோகும் செயல்கள் ஆகும். எனவே, தங்களது முதல்வரை கொலை செய்ய தூண்டியதை கண்டிக்காத அனைத்து தமிழக தலைவர்கள் மீதும், ஆபத்து காலங்களில் தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும், எதிரிகளின் கொலைவெறி தூண்டுதல்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் சதி செய்வதற்காகவும் போர்கால அடிப்படையில் வழக்கு போடவேண்டும்.
கட்சி கொள்கை பாகுபாடு பார்க்காமல் தமிழக முதல்வரை, அவரது உயிரை பாதுகாக்கவேண்டியது அனைத்து தமிழக மக்களின் கடமை. முதல்வரின் உயிர் மீது அக்கறை இல்லாதவர்கள் உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறுவது நல்லது. அல்லது சட்டப்படி வழக்குகள் பதிவு செய்து இவர்களை சிறையில் அடைக்கவேண்டும்.
என்னதான் எதிர்கட்சி அல்லது புதுக்கட்சி தலைவர்களாக இருந்தாலும் இப்போதைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞரின் ஆட்சியின் கீழ் இவர்கள் அனைத்து சுதந்திரத்தையும் அனுபவித்து உயிர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதை இவர்கள் ஒரு காலும் மறந்து விட கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் உயிரை பற்றி கவலை படாதவர்கள், தமிழக் பொது மக்களின் உயிரையும் மதிக்காதவர்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆகவே நேரம் வரும்போது பொது மக்களே இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து சமுதாயத்திலிருந்து தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைப்பார்கள். இது உறுதி!
Post a Comment