Saturday, October 27, 2007

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு-கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைகிறது

சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரப் போவதாக தேவெ கெளடா-குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் திடீரென அறிவித்துள்ளது.

20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று திடீரென குற்றம் சாட்டினார்.

இதையடுத்து காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் தனது மகனை தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார். இதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டார். ஆனால், அவரால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சோனியா காந்தி அவரை சந்திக்கவே மறுத்துவிட்டார்.

மேலும் கெளடா-குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள ஜனதா தள எம்எல்ஏக்களைக் கொண்டு கட்சியை உடைக்கவும், அவர்கள் உதவியோடு ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் முயன்றது.

இதற்காக ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அவருக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் கூறியது. இதையடுத்து அவர் கட்சியை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.

ஆனால், பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு (இவர்களது பெரும் ஆதரவு பாஜகவுக்கு உண்டு, பாஜக சார்பில் துணை முதல்வராக இருந்த எதியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்) கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமானார்.

பலமுறை டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்த பிரகாஷ் இன்றும் டெல்லியில் தான் உள்ளார்.

இந் நிலையில் அரசியல் பல்டிகளுக்குப் பேர் போன தேவெ கெளடா மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது கட்சியை உடைக்க முயன்ற காங்கிரசுக்கு பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு கெளடாவும் குமாரசாமியும் வந்துள்ளனர்.

இத் தகவலை குமாரசாமியே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இன்றே கவர்னர் ராமஷ்வர் தாக்கூரை சந்தித்து பாஜக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் தரவுள்ளோம்.

எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயன்றதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

முன்னதாக குமாரசாமி-கெளடாவின் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவர் தத்தா பாஜக முதல்வர் பதவிக்கான 'கேன்டிடேட்' எதியூரப்பாவை சந்தித்து அவரை முதல்வராக்க கெளடா முடிவு செய்துள்ளது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதில் கெளடாவின் ஆதரவைப் பெறுவது என்றும் ஆட்சியமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கெளடா தொலைபேசியில் பேசினார்.

அடுத்து கவர்னர் தாக்கூர் என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிங்க

என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தா....

இதான் சங்கதியா?

தன் கட்சிக்கு ஆபத்துன்ன உடனே தேவே கெளடா என்னமா பல்டி அடித்து விட்டார். இதுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகா விடம் முதலிலேயே கொடுத்திருந்தால் நல்ல கெளரவமாக இருந்திருக்கும்.

ம்ஹும்... பட்ட பிறகுதானே தெரியுதே.

No comments: