06.கணவனின் தம்பிக்கு 2ம் தாரமானதால் விதவை பெண் தற்கொலை முயற்சி
உசிலம்பட்டி: ஆண் வாரிசு வேண்டும் என்று கணவரின் தம்பிக்கு மறுமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த பெண், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது.
உசிலம்பட்டி அடுத்த அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். விபத்தில் பலியானார். இவரது மனைவி விஜயா(35). குழந்தைகள் ஜெயசூரியா, ஜெயசத்யாவுடன் வசித்து வந்தார். கணவரின் தம்பி பெயர் ராஜாராம். திருமணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக மற்றொருப் பெண்ணை மணம் முடிக்க விரும்பினார். விதவையாக இருந்த அண்ணன் மனைவியையே வற்புறுத்தி திருமணம் செய்துள்ளார்.
மனமுடைந்த விஜயா நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் ஓடிவந்தனர். தூக்கில் தொங்கியவரைக் காப்பாற்றினர். குழந்தைகளுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் ஜெயசூரியா இறந்தான். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றிங்க, தினமலர் 06/10/2007
விருப்பமில்லாத போது பலவந்தமாக அடைய எண்ணுவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது!
ஆண் வாரிசு வேண்டும் என்ற விருப்பமுள்ளவர் இரண்டாந்தாரமாக சம்மதிக்கும் பெண்ணையல்லவா தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்!
இப்போ, உயிர் பலியை யார் மீட்டுவது?
No comments:
Post a Comment