காதலிக்க மறுத்த மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007
நகரி:
தன்னை காதலிக்க மறுத்த மாணவியை ஆசிரியர் அடித்தே கொன்றுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இச் சம்பவம் நடந்தது.
ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள நாகுலபாலேனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு(29). இவர் பர்னூர் என்ற ஊரில் உள்ள ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தில்ஷாத் பேகம் (18) என்பவர் இதே ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தில்ஷாத் பேகத்தை, ஆசிரியர் ஆஞ்சநேயலு ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இதனால் கல்லூரி வளாகத்தில் அந்த மாணவியிடம் எந்த மாணவராவது பேசினால் அவர்களை அழைத்து அடித்து உதைத்துள்ளார் ஆஞ்சநேயலு.
ஆனால், தில்ஷாத் நான் உங்களை காதலிக்கவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று ஆஞ்சநேயலுவிடம் கூறியுள்ளார்.
இதனால் வெறுத்துப் போன ஆஞ்சநேயலு தில்ஷாத் பேகத்தை தனது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அங்கு வந்த தில்ஷாத்திடம் கடைசியாக கேட்கிறேன், நீ என்னை காதலிக்கிறாயா, இல்லையா என்று மிரட்டியுள்ளார்.
தில்ஷாத் இல்லை என்று கூறவே அங்கிருந்த உருட்டுக் கட்டையால் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து அங்கேயே பலியானார் தில்ஷாத்.
இதையடுத்து ஆஞ்சநேயலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றிங்க
எதுவும் தானாக கனிய வேண்டும்.
No comments:
Post a Comment