Thursday, October 25, 2007

01. இன்று "பெரிய நிலா' காணலாம்

01.வழக்கத்தை விட இன்று "பெரிய நிலா' காணலாம்

மும்பை: இந்தாண்டின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பிரகாசமான முழு நிலவை இன்றும், நாளையும் காணலாம்.

வானியல் மாற்றங்களை விரும்பிப் பார்க்கும் ஆர்வலர்களுக்கு இன்று விசேஷமான நாள். நிலவு பூமிக்கு வெகு அருகில் வருவதால் இன்று ஏற்படும் முழு நிலவு மிகப் பெரியதாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்று "நாசா' விஞ்ஞானி ஒருவர் கூறினார். வழக்கமான பவுர்ணமி நாட்களில் காணப்படும் முழு நிலவைக் காட்டிலும், இன்று வரும் முழு நிலவின் குறுக்களவானது 14 சதவீதம் அதிகமாக இருக்கும். நிலவொளியின் பிரகாசம் வழக்கத்தை விட 30 ச தவீதம் அதிகமாக இருக்கும்.இன்று வரும் முழு நிலவை டெலஸ்கோப்பில் மட்டுமே பார்க்க வேண்டும். வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கக் கூடாது.

அது கண்களைப் பாதிக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த அதிசய காட்சியை இன்றும், நாளையும் பார்க்கலாம்.இந்நிலையில் சீனா நிலவுக்கு அனுப்பியுள்ள "சாங்கி1' செயற்கைகோள், நிலவொளியின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கத் துவங்கியதும் நிலவின் முப்பரிமாண படங்களை அனுப்பும்."இந்தக் காலகட்டத்தில், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்திரன் நீள்வட்டப்பாதையில் பயணிக்கும் போது, பூமிக்கு அருகே 48 ஆயிரம் கி.மீ., தொலைவில் வருவதால் அதிக நெருக்கம் இருக்கும். அதனால், நம் பார்வைக்கு சந்திரன் வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதிக ஒளியுடன் கூடியதாகவும் இருக்கும்' என்று வானியல் அறிஞர் பாரத் அடூர் தெரிவித்தார்.

நன்றிங்க, தினமலர், 25/10/2007

அட..

ஆமா இன்னிக்கு நிலவு பெரிசாகவும் பிரகாசமாகவும் இருக்கு

No comments: