Sunday, October 07, 2007

2. கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி!

தோரியத்தை 'திருடி' அமெரிக்காவுக்கு விற்க காங். கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி!

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007

கோண்டா (உ.பி.):

ராமர் பாலப் பகுதியில் நிறைந்து கிடக்கும் தோரியத்தை திருட்டுத்தனமாக எடுத்து விற்கவே ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முயல்கிறது என்று சர்ச்சை சாமியார் வேதாந்தி கூறியுள்ளார்.

ராமர் குறித்துக் கருத்துக் கூறிய முதல்வர் கருணாநிதியின் தலைக்கும், நாக்குக்கும் விலை வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் வி.எச்.பி.யைச் சேர்ந்தவரும், முன்னாள் பாஜக எம்.பியுமான ராம் விலாஸ் வேதாந்தி.

வேதாந்தி தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா நகரில், ராமர் பால பாதுகாப்பு பாதயாத்திரை நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேதாந்தி பேசுகையில், ராமர் பாலம் உள்ள பகுதியில் பெருமளவில் தோரியம் கிடைக்கிறது. இந்த தோரியத்தை எடுத்து அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக விற்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரகசிய சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகத்தான் ராமர் பாலத்தை உடைக்க துடிக்கிறார்கள்.

இந்தக் கூட்டுச் சதியில் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.

கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளோடு தொடர்புடையது ராமர் பாலம்.

டெல்லியில் ராமேஸ்வரம் யாத்திரை நடக்கவுள்ளது. அதில் நாங்கள் பெரும் திரளாக பங்கேற்போம் என்றார் அவர்.

நன்றிங்க

// தோரியத்தை எடுத்து அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக விற்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரகசிய சதித் திட்டம் தீட்டியுள்ளது.//

ஆஹா...

இதுவரை உதிர்க்காத முத்துக்கள்.

இதுக்காக பேச்சு வார்த்தை நடத்தவே சோனியாவும் சமீபத்தில் அமெரிக்கா சென்றார் என்பதையும் சேர்த்து உதிர்க்கட்டும்.

No comments: