Saturday, October 27, 2007

நாடி வைத்தியம்.

03.நாடி பிடித்து பார்த்து 10 ரூபாய் வைத்தியம் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இந்த அவலம்

பெங்களூரு :பெங்களூரு நகரில், ஒரு பக்கம் சாப்ட்வேர் நிறுவனங்கள் தலைதுõக்கினாலும், இன்னொரு பக்கம், மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் போலி "டென்ட்' கிளினிக்குகள் அதிகரித்து வருகின்றன.

பெங்களூரு நகரில் முக்கிய சாலைகளில் இவர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால், ஹெப்பால், அடுகோடி உட்பட பகுதிகளில், சாலைகளில், கூடாரம் போட்டு, கிளினிக் நடத்துகின்றனர். இந்த கிளினிக்குகளில், டாக்டர் என்று சொல்லிக் கொள்ளாமல், ஒரு "வைத்தியர்' இருக்கிறார். அவரிடம் நோயாளி சென்றால், நாடியை பிடித்து பார்த்து, நோயை பற்றி சொல்கிறார். அதற்கு 10 ரூபாய் தான் கட்டணம்.பலவீனம், தலைசுற்றல், வாந்தி பேதி, வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற சாதாரண பாதிப்புகளுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போவது போன்ற பாதிப்புகளுக்கும் சர்வசாதாரணமாக மருந்துகளை தருகின்றனர்.

இந்த "டென்ட்' வைத்தியர்கள்."நீங்கள் டாக்டருக்கு படித்தவர்களா?' என்று கேட்டால், "நாங்கள் டாக்டர் அல்ல; இமயமலையில் இருந்து மூலிகைகளை திரட்டி வந்து எங்கள் குரு தருவார். அதைத்தான் உங்களுக்கு தருகிறோம். நம்பினால் வாங்குங்கள்; இல்லாவிட்டால் நடையை கட்டுங்கள்' என்று சொல்லி, பகிரங்கமாக தொழில் செய்கின்றனர்.இவர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இப்படிப்பட்ட, "டென்ட்' போட்டு கிளினிக் நடத்தும் சிலர், ஆயுர்வேத மருத்துவம் என்று போர்டு போட்டு மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால், சிலர், பணத்தை குறிவைத்து, நோயாளிகளுக்கு இன்ஜெக்ஷன் கூட போடுகின்றனர்.சிக்பல்லபூர் பகுதியில், சில நாள் முன், இந்த போலி டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை பெற்ற இரு குழந்தைகள் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு, போலி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் போட்டதால், உடல்நிலை மோசமானது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், அந்த குழந்தைகள் இறந்துவிட்டனர். இப்படிப்பட்ட போலி டாக்டர்கள் பற்றி, கர்நாடக மருத்துவ கவுன்சிலுக்கு பல புகார்கள் வந்துவிட்டன. நடவடிக்கை எடுக்க, சட்டமும் உள்ளது. ஆனால், அதில் ஓட்டைகள் இருப்பதால், பலரும் சிக்குவதில்லை. இதனால், புது சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.பதிவு செய்யப்படாத அலோபதி டாக்டர்கள், தனியாக மருத்துவம் பார்க்க தடை விதித்து, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டம் அமையும்.

நன்றிங்க, தினமல்ர் 28/10/2007

தினமலர்லே ராசி பலன் என்றொரு பகுதி உள்ளதே அதுவும் இதே அவலத்தை சேர்ந்தது தானே! இல்லையா பின்னே!!

No comments: