02.அண்ணனை திருமணம் செய்த தங்கை பீகாரில் "கலி முத்திப்போச்சு'
ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பிழைப்புக்காக போயிருக்கிறார். அதனால், தன் நண்பர் யாதவ் வீட்டில் என்னை பாதுகாப்பாக தங்க வைத்துச் சென்றுள்ளார்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
வாக்குமூலத்தை வாங்கிக் கொண்ட போலீசார், ரீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முன், ரீனா வாக்குமூலம் தந்தார். ரீனா விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.ரீனா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமுன், அவர் பெற்றோரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டார். சூரத்தில் உள்ள அவரது அண்ணனை தேடிக் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.பீகார் மாநிலத்தில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றிங்க, DINAMALAR 24/10/2007
என்னத்த சொல்ல...!
1 comment:
அண்ணன் என்னடா.தம்பி என்னடா..
அவ்சரமான உலகத்திலே- என்ற கவிஞரின் பாடல் நிணைவுக்கு வருகிறது..
Post a Comment