லண்டன் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007
லண்டன்:
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இரு விமானங்கள் ரன் வே அருகே மோதிக் கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டாக்சி வே பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இலங்கை நாட்டு விமானங்கள் மோதிக் கொண்டன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சிங்கப்பூருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதே போல இலங்கையின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ340 விமானம் கொழும்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.
டேக்-ஆப் செய்வதற்காக விமானங்கள் வரிசையாக ரன்வே நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது இந்த இரு விமானங்களின் இறக்கைகளும் மோதிக் கொண்டன. இலங்கை விமானத்தில் 286 பயணிகள் இருந்தனர். பிரிட்டிஷ் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்று தெரியவில்லை.
டாக்சிவேயில் நடந்த இந்த மோதலையடுத்து இரு விமானங்களும் பயங்கரமாக அதிர்ந்தன. அச்சத்தில் பயணிகள் கூச்சலிட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து இரு விமானங்களின் பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இச் சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பின் பகுதியும் ஒரு பக்க இறக்கையும் சேதமடைந்துவிட்டது.
நன்றிங்க
வர வர கார் விபத்துகள் மாதிரி விமான விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
No comments:
Post a Comment