Tuesday, October 16, 2007

01. "ஹாய்... ஹாய்... குதிரை தான்!

01. பைக்... காரை உதறினார்; இப்போது, "ஹாய்... ஹாய்... குதிரை தான்!' : கேரள ரியல் எஸ்டேட் உரிமையாளரின் புரட்சி இது

திருவனந்தபுரம் : பல்லாங்குழி சாலைகளைக் கடந்து, ஆபீஸ் சேருவதற்குள், போதும் போதுமென்றாகி விடுகிறது என்று சலித்துப்போன, கேரளவாசி ஒருவர், பைக், காரை உதறி, இப்போது, குதிரைக்குத் தாவி விட்டார்.ஆம்!

திருவனந்தபுரம் எம்.ஜி.,ரோடில் தினமும் இவர், "பிரீப்கேஸ்' சகிதமாக, குதிரையில் சவாரி செய்து, ஆபீஸ் போவதை காணலாம்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நூருதீன் மத்தார். பைக்கில், தினமும், நான்கு கி.மீ., கடந்து, ஆபீசில் உட்காருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. எம்.ஜி., ரோடில், பல இடங்களில், வெட்டிப் போடப்பட்ட பள்ளங்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பைக்கை விட்டு, காருக்கு தாவினார்.

ஒரு நாள், பள்ளத்தில் கார் சிக்கி, பெரும்பாடாகி விட்டது. அதனால் காரையும் விட்டார். மீண்டும் சில நாள் பைக்கில் சென்று வந்தார். சமீப மழையில், சாலையில் ஆங்காங்கு அரிப்பு. குண்டு, குழிகளுக்கு பஞ்சமில்லை. பைக்கை ஓட்டிச்செல்வதே சிரமம். இந்த லட்சணத்தில், சாலையில் சேறு "அபிஷேகத்தையும்' சகிக்க வேண்டிய நிலை. பார்த்தார் நூருதீன்; ஒரு அதிரடி முடிவுக்கு வந்தார்.

ஏற்கனவே, குதிரை சவாரியில் விருப்பமுள்ள அவர், பெங்களூரு நகரில் 40 ஆயிரம் ரூபாய் தந்து, ஒரு குதிரையை வாங்கினார். ஒரு பயிற்சியாளரை அமர்த்தி, சாலையில் குதிரை சவாரி செய்ய, தேவையான பயிற்சியை பெற்றார். ஒரு வாரத்தில், அவர் குதிரை சவாரியில் தேறி விட்டார். இப்போது, தினமும், குதிரையில் ஆபீசுக்கு செல்கிறார் நூருதீன். "நான்கு சக்கர' வாகனத்தைவிட, "நான்கு கால்' வாகனம், செலவும் வைப்பதில்லை; குறித்த நேரத்திலும் போய்ச் சேருகிறது' என்று பெருமிதப்படுகிறார்.

"குதிரையில் சவாரி செய்து, ஆபீஸ் போகும் போது, முதல் நாள் மட்டும் தான் தயக்கமாக இருந்தது. சிலர் கேலியாக பார்த்தனர்; சிலர் என் துணிச்சலை பாராட்டினர். எனக்கோ, குறித்த நேரத்தில், ஆபீஸ் போக முடிகிறது. பெட்ரோல் செலவும் மிச்சம். பள்ளங்களில் விழுந்தெழ வேண்டியதும் இல்லை' என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் நூருதீன்.

நன்றிங்க

இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் தான் செலவு.

நான்கு கால் குதிரையை ஓட்டினாலும் ஓட்டாமல் நிறுத்தினாலும் தீனி போட்டாகனும்.

வாகனம் நிறுத்தமிடங்களில் எத்தனை நாள் வேண்டுமானலும் வாகனத்தை நிறுத்திவிட்டு பிறகு எடுத்துக்கொள்ளலாம். நான்கு கால் குதிரையை வாகன நிறுத்துமிடத்தில் அனுமதிப்பாங்களா? அப்படியே அனுமதிச்சாலும் அதற்கு சாப்பாடு வசதி செய்வது எப்படி? அது போடும் சாணத்தை சுத்தம் செய்வது யார்? என்ற சிக்கலெல்லாம் ஏற்படுமே.

எப்படியோ, வாகனம் நிறுத்துமிடம் மாதிரி, நாளை குதிரைகள் பெருகினால் ''குதிரைகள் நிறுத்திமிடம்'' என்று தோன்றாமலாப் போய்விடும்.

No comments: