Wednesday, October 31, 2007

02. இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யாணம்!

ஆந்திராவில் இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யாணம்!



புதன்கிழமை, அக்டோபர் 31, 2007

ஹைதராபாத்: ஆந்திராவில் இரு பெண்கள் கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச் சேர்க்கைப் பழக்கமுடைய இந்தப் பெண்கள் கல்யாணம் செய்து கொண்டதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆதரவும், ஆசியும் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த 'தம்பதிகளின்' பெயர் கே.குமாரி (19), வரலட்சுமி (18). சம்பாவரம் என்ற ஊருக்கு அருகே உள்ள லிங்கால திருகுடு கோவிலில் வைத்து கடந்த 16ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வரலட்சுமி கழுத்தில் குமாரி தாலி கட்டினார்.

இந்து முறைப்படி கல்யாணத்தை முடித்துக் கொண்ட இருவரும் அருகில் உள்ள சர்ச்சுக்குப் போய் அங்கு பைபிள்களை மாற்றிக் கொண்டனராம். புதுமணத் தம்பதிகளாக ஒரு வீட்டில் சேர்ந்து வசிக்க ஆரம்பித்துள்ளனர். வீட்டுக்கு அருகே உள்ள நர்சரிப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர்.

பொறுப்பான 'கணவராக' குமாரி நடந்து கொள்கிறாராம். ஆண்கள் அணிவது போல பேன்ட், சட்டை போட்டுக் கொண்டு அசத்துகிறார் குமாரி. வழக்கமான இல்லத்தரசிகளைப் போல புதுக் கல்யாண மெருகோடு நாணத்துடன் வளைய வருகிறார் வரலட்சுமி. கழுத்தில் தொங்கும் குமாரி கட்டிய தாலியைப் பார்த்து பெருமிதப்படுகிறாராம்.

முதலில் இவர்களின் திருமணத்தைப் பார்த்து முகம் சுளித்த சம்பாவரம் பகுதி மக்கள் இப்போது அவர்களை கணவன், மனைவியாக அங்கீகரித்துள்ளார்களாம்.

குமாரிக்கு சொந்த ஊர் அனகாபள்ளி. இவரது பெற்றோர் இறந்தவுடன், தனது அக்காவுடன் சம்பாவரத்திற்கு வந்துள்ளார். அங்கு வரலட்சுமியை சந்தித்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் 'காதல்' மலர்ந்துள்ளது. நெருக்கமாக பழக ஆரம்பித்தனர்.

இருவரும் அருகில் உள்ள சர்ச்சுக்கு போவார்கள். அங்கு சிறு சிறு வேலைகளைச் செய்தனர். அப்போது நெருக்கம் அதிகமாகி, கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இந்த விவரம் சர்ச் ஊழியர்களுக்குத் தெரிய வர அவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

இதையடுத்து தனி வீட்டை எடுத்து குடித்தனம் செய்ய ஆரம்பித்தனர். மகளின் இந்த செயலைப் பார்த்து வரலட்சுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். மகளை கட்டாயப்படுத்தி வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டார். ஆனால் குமாரியை வரலட்சுமியால் மறக்க முடியவில்லை.

சிரஞ்சீவி மகள் ரேஞ்சில், வீட்டை விட்டு வெளியேறி குமாரியை மணந்து கொண்டார். இதில் விசேஷம் என்னவென்றால், கல்யாணத்தின்போது முக்கிய சாட்சிகளாக இருந்தவர்களில் ஒருவர், வரலட்சுமியின் தாயார்.

இந்தக் கல்யாணம் குறித்து குமாரி கூறுகையில், இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. முதலில் இருவரும் நல்ல தோழிகளாகப் பழகினோம். பிறகு காதலர்களாக மாறினோம். இப்போது கணவன், மனைவியாகி விட்டோம் என்றார். 'கணவன்' பேசுவதை ஆவலுடன் வெட்கப் புன்னகை சிந்த அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் வரலட்சுமி.

குமாரியை மணந்துள்ள வரலட்சுமிக்கு ஏற்கனவே ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒருவருடன் (அவர் ஆண்தான்) கல்யாணமாகியுள்ளது. ஆனால் அவரைப் பிடிக்காமல் பிரிந்து வந்து விட்டார் வரலட்சுமி. முறைப்படி அவரிடமிருந்து விவாகரத்து கூட இன்னும் அவர் பெறவில்லையாம்.

குமாரி, வரலட்சுமி தம்பதிக்கு வீடு வாடகைக்கு விட்டுள்ள வீட்டு உரிமையாளர், இந்த வினோத தம்பதிக்கு வீடு கொடுத்திருப்பதற்காக வருத்தப்படவில்லையாம்.

வாடகையை சரியாக கொடுத்தால் போதும், பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும். மற்றபடி அவர்களால் எனக்கோ, என்னால் அவர்களுக்கோ எந்த தொந்தரவும் கிடையாது என்று 'பிராக்டிகலாக' பேசுகிறார்.

கலி காலம் சாமி.. கலி காலம்!

நன்றிங்க

படிச்சி முடிச்சப்பறம் சும்மா 'திக்' ன்னு இருக்கு நெஞ்சு.

No comments: