விமானத்தில் புகுந்த 'எலி'!: போர்ட்பிளேர் விமானம் 4 மணி நேரம் 'லேட்'!
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007
சென்னை:
போர்ட்பிளேர் செல்லும் விமானத்திற்குள் புகுந்த எலியால், நான்கு மணி நேரம் தாமதமாக விமானம் போர்ட்பிளேர் புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து போர்ட்பிளேர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 6.15 மணிக்கு, 108 பயணிகளுடன் கிளம்பத் தயாராக இருந்தது.
அப்போது விமானத்திற்குள் ஒரு எலி சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயணிகள் பீதியடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து விமானம் கிளம்புவது தடைபட்டது.
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு எலியைப் பிடிக்கும் முயற்சியில் விமான ஊழியர்கள் இறங்கினர். விமானம் முழுவதையும் அலசிப் பார்த்தும் அந்த எலி சிக்கவில்லை.
இதையடுத்து எலியைல கொல்ல மருந்து அடிக்கப்பட்டது. இதில் அந்த எலி செத்து விழுந்தது. இதையடுத்து எலியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து எலியால் வயர்கள் ஏதேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை ஊழியர்கள் சோதிட்டனர்.
அதன் பின்னர் நான்கு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் 10 மணிக்கு போர்ட் பிளேருக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
சமீபத்தில்தான் ஒரு எலியால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிச் செல்வது பாதிக்கப்பட்டு, எலி கண்டுபிடிக்கப்படாததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு வேளை இந்த எலிதான் அந்த எலியோ என்னவோ?
நன்றிங்க
//ஒரு வேளை இந்த எலிதான் அந்த எலியோ என்னவோ?//
இருக்கும்.. இருக்கும், எப்படியோ அந்த எலிப் போல இருந்த இந்த எலியை கொன்று பயணிகளை காப்பாற்றி விட்டனர். :)
No comments:
Post a Comment