
படம்: நன்றிங்க, தினமலர் 05/10/2007
வரும் செய்தி கொஞ்சம் பழசுதான், படத்துக்கு பொருத்தமாகத் தோணுவதால்...
ரம்ஜான் வசூலுக்காக "மேக்கப்' மாற்றம்"பியூட்டி பார்லர்' செல்லும் பிச்சைக்காரர்கள்
குற்றிப்புரம்: கம்பளி அல்லது கறுப்பு போர்வை, கையில் திருவோடு, பரட்டை தலையுடன் கோவில் வாசல்களில் போய் நின்றால், திருவோட்டில் தானாக காசு விழும். எந்த மதக் கோவிலுக்கும் இது பொருந்தும்.
இதை நன்றாக அறிந்து வைத்துள்ள பிச்சைக்காரர்கள், பண்டிகைக்குத் தகுந்தாற்போல் "மதம் மாறி' பிச்சை எடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். எப்படி மதம் மாறுவது?
ரொம்ப சிம்பிள்! "பியூட்டி பார்லர்'களுக்குச் சென்று "மேக்கப்' மாற்றிக் கொண்டால் ஆச்சு! கேரளா மலப்புரம் மாவட்டத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த சீசனில் முஸ்லிம் வேடத்தில் பிச்சை எடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதை அறிந்த அவர்கள் "மேக்கப் மாற' முடிவு செய்தனர்.
குற்றிப்புரம், எடப்பாள், வளாஞ்சேரி, ஆதவ நாடு, பொன்னானி, சங்கரங்குளம், திருநாவாயா போன்ற பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களை தயார் செய்வதற்காகவே, குற்றிப்புரம் பழைய ரயில்வே கேட்டுக்கு அருகில் "பியூட்டி பார்லர்' இயங்குகிறது. தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி, திருச்சி போன்ற இடங்களில் இருந்து ரயிலில் வந்திறங்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் நேராக இந்த அழகு நிலையத்துக்கு சென்று விடுகின்றனர்.
முஸ்லிம் வேடத்திற்காக தலைப் பாகை மாட்டுவதற்கு 12 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஆகிறது. பெண் களுக்கு பர்தா, மப்தா, மக்கனா போன்றவற்றை அணிவித்து முஸ்லிம் பெண்களை போல மாற்றும் பெண் அழகு நிபுணர்களும் இங்கு இருக்கின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்களில் இந்த "முஸ்லிம்' பிச்சைக் காரர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். வேடம் மாற்றி பிச்சை எடுப்பதால், நாள் ஒன்றுக்கு 100 முதல் 800 ரூபாய் வரை இவர்களுக்கு கிடைக் கிறது.
நன்றிங்க, தினமலர் 26/09/2007
2 comments:
vj;jid fhyk;jhd; Vkhw;Wthu; ,e;j ehl;bNy vd;w ghly; tupfs;jhd; Qhgfk; tUfprJ. vj;ju;fSf;F Jid NghFk; nyq;fhu fiyQu;fis vd;d nrhy;tJ?
iqbal உங்கள் வரவுக்கு நன்றி.
உங்கள் மறுமொழி தமிழில்...
//எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிசது. எத்தர்களுக்கு துனை போகும் லெங்கார கலைஞர்களை என்ன சொல்வது?//
Post a Comment