தமிழகத்தில் நாளை ரம்ஜான்
சனிக்கிழமை, அக்டோபர் 13, 2007
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நேற்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் முகம்மது சலாகுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவ்வால் மாதப் பிறை நேற்று தென்படவில்லை. எனவே ரம்ஜான் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் இதர பகுதிகளிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
நன்றிங்க
ரம்ஜான் வாழ்த்துக்கள்!
3 comments:
வாழ்த்துக்கள்!
கனடாவில் இன்று சனி கொண்டாடுகிறார்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ஈதுல் பித்ர் நல் வாழ்த்துக்கள்!!
தமிழ்பித்தன் உங்கள் வரவுக்கு நன்றி.
அபூ ஸாலிஹா உங்கள் வரவுக்கு நன்றி.
Post a Comment