Wednesday, October 31, 2007

01. "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.

கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்

சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்கவிடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி புகார் கொடுத்தார். சென்னை வியாசர்பாடி மூன்றாவது கீழத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (35). இவரது மனைவி தமீம் நிஷா (31). இவர்களுக்கு 1995ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமீம் நிஷா நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

அப்புகாரில் கூறியிருப்பதாவது: "பாஸ்ட் புட்' நடத்தும் என் கணவர் விடியற்காலையில் வேலைக்கு சென்று விட்டால் நள்ளிரவு தான் வீடு திரும்புவார். திருமணமான நாள் முதலே கணவரோடு பேசவும், தனியறையில் படுக்கவும் என் மாமியார் அனுமதிக்கவில்லை. திருமணத்தின் போது எனக்கு 45 சவரன் நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை என் பெற்றோர் கொடுத்தனர். ஆனால், மாமியார் தினந்தோறும், "உனது வீட்டில் இருந்து பணம் வாங்கிவா? அப்போது தான் கணவரோடு சேர்த்து வைப்பேன்' என்று மிரட்டுவார். வாங்கி வரவில்லை என்றால் "மலடி' என்று பட்டம் சுமத்தி திட்டுவார்கள். இப்படியே என் வீட்டிலிருந்து பல லட்சம் வாங்கி கொடுத்து விட்டேன். அப்படி இருந்தும் கணவருடன் சேர அனுமதிக்கவே இல்லை. நான் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்று கேட்டால், "உனது கர்ப்பப் பையில் கோளாறு இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்' என்று கூறினர். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் எனக்கு எந்த குறையும் இல்லை.

கடந்த டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் மலடி என்று திட்டி அடித்து உதைத்தனர். இவர்களின் தொல்லையால் மனமுடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்நிலையில், எனது கணவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர்.கணவரோடு ஒன்று சேரவிடாமல் தடுத்துவிட்டு "மலடி' என்று பட்டம் சுமத்தி, துரத்திய மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரதட்சணையாக நான் கொடுத்த நகைகளை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர் 31/10/07

எங்கும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

ஏன்...
கணவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிறீர்களா...?

அதுவும் நியாயம் தான்!

No comments: