மனைவி சித்ரவதை தாங்க முடியலை போலீசில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி புகார்
மும்பை: சப்இன்ஸ்பெக்டராக உள்ள தன் மனைவி, தன்னை சித்ரவதை செய்வதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில மீன் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் அமிதாப் ஜோஷி; இவரது மனைவி வீணா சாவ்கர். இவர், மகாராஷ்டிர போலீசில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னையும், தன்னுடைய தாயாரையும் வீணா சாவ்கர் அடித்து துன்புறுத்துகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தால், என் மனைவி அதிகாரியாக உள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர், என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அமிதாப் ஜோஷி கூறியுள்ளார்.
அமிதாப் ஜோஷி இக்குற்றச்சாட்டை கூறிய சில மணி நேரங்களில் அவரது மனைவி வீணா சாவ்கர் பேட்டியளிக்கையில், என்னுடைய கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை கொடுமைப்படுத்துகிறார். எனவே, அவர் மீது வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்துள்ளேன். தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரையடுத்து அமிதாப் ஜோஷிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நன்றிங்க, DINAMALAR 19/10/2007
கணவன், மனைவி இருவரும் நன்றாகப் படித்தவர்கள். படிப்பும் பணமும் பதவியும் சமூக அந்தஸ்தும் இவர்களைப் பண்படுத்தவில்லையே என்ன செய்வது?
2 comments:
இஷ்மில்லாத வாழ்க்கையில் விலகி விட நினைத்தாலும், முடியாத சம்பிராதாயங்களே மனைவி மீது கணவரும், கணவர் மீது மனைவியும் மாறி மாறி புகார் செய்து கொள்ளச் செய்கின்றன.
திருமணம் என்பது இருவருக்கிடையேயான ஒரு ஒப்பந்தமே என்பதைப் புரிந்து விவாகரத்து என்பது எளிமையாக்கப்படும் வரை இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான்.
இதில் படித்தவர்களோ பாமரர்களோ விதிவிலக்கல்ல!
அபூ ஸாலிஹா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment