Sunday, November 18, 2007

பாஜக ஆட்சி தப்புமா?

நாளை வாக்கெடுப்பு: பாஜக ஆட்சி தப்புமா? -கெளடாவின் நிபந்தனையால் புது
சிக்கல்


ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

பெங்களூர்: நாளை கர்நாடக முதல்வர் எதியூரப்பா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். இதனால் பாஜக ஆட்சி தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஆட்சியை நடத்துவதற்கான 12 விதிமுறைகளை வகுத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா, அது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கி அதில் பாஜக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

மேலும் பெங்களூர் நகர மேம்பாட்டுத்துறையையும் கனிம வளத்துறையையும் தனது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என கோரி வருகிறார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பாஜக கையெழுத்திடாமல் இருந்து வருகிறது. இதையடுத்து இன்று வரை (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு கெடு விதித்தார் கெளடா. ஆனால், அதையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட முடியாது என எதியூரப்பா கூறினார். அப்படியென்றால் ஆதரவு வாபஸ் என கெளடா அறிவித்தார்.

இதையடுத்து சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக எதியூரப்பா கூறி வருகிறார். ஆனால், இதை ஏற்க கெளடா தயாராக இல்லை.

இந் நிலையில் தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கெளடா இன்று அவசரமாகக் கூட்டியுள்ளார். இதையடுத்து கெளடாவை ஒதுக்கிவிட்டு அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை சந்திக்க எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இதை கெளடா விரும்பவில்லை. இதனால் நாளை (19ம் தேதி) சட்டமன்றத்தில் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் பாஜக கூட்டணி அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒப்பந்த விஷயத்தில் பாஜக இன்றைக்குள் வளைந்து கொடுக்காவிட்டால் நாளைய ஓட்டெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தளம் காலை வாரி விடும் சூழல் எழுந்துள்ளது.

இதையடுத்து நிலைமை குறித்து விவாதிக்க இன்று பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தை எதியூரப்பா கூட்டியுள்ளார். மேலும் கெளடாவின் மிரட்டல் குறித்துப் பேச மூத்த கர்நாடக பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி விரைந்துள்ளனர்.

சிக்கல் மோசமாகியுள்ளதையடுத்து மூத்த பாஜக தலைவரான யஸ்வந்த் சின்ஹா இன்று பெங்களூர் வருகிறார். அவர் கெளடா-குமாரசாமி தரப்புடன் பேசி நிலைமையை சரி செய்துவிட்டால் பாஜக ஆட்சி தப்பும்.

நன்றிங்க

மதில் மேல் பூனைகள்...!

1 comment:

பிறைநதிபுரத்தான் said...

பா.ஜ.க விடமிருந்து கர்நாடகம் தப்புமா? என்பதுதான் தலைப்பாக இருந்திருக்கவேண்டும்.