Tuesday, November 13, 2007

02.இல்லாத போலீசுக்கு சம்பளம்.

02.இல்லாத போலீசுக்கு சம்பளம்: அசாம் மாநிலத்தில் புதுவகை ஊழல்

கவுகாத்தி: போலீஸ் வேலையில் இல்லாதவர்களின் பெயரில் சம்பள பில் தயார் செய்து 40 கோடி ரூபாய் சுருட்டிய ஊழல் போலீஸ் உயர் அதிகாரிகள் அசாமில் கைது செய்யப்பட்டனர்.அசாம் மாநில போலீஸ் துறையில் புதியவகை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, போலீஸ் பணியில் இல்லாதவர்களையும் போலியாக சம்பளப்பட்டியலில் சேர்த்து போலீஸ் அதிகாரிகளே லட்சம் லட்சமாகக் கொள்ளையடித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ. 40 கோடி ரூபாய் வரை இப்படி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் எஸ்.பி., இந்திரா கோகோய், ஏ.எஸ்.பி., பினோய் ரஞ்சன் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு போலீஸ் எஸ்.பி., கிருஷ்ணதாஸ் தலைமறைவாகவுள்ளார்.மோசடி தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஐ.ஜி., ஜீவன் சிங், டி.ஐ.ஜி., பரேஷ் நியோக் ஆகியோரும் மோசடியில் உடந்தையாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸ் மற்றும் கருவூலத் துறை உயர் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நடத்திய ஊழல் இது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றிங்க, தினமலர் 13/11/2007

அடப்பாவிங்களா...!

3 comments:

மாசிலா said...

//அடப்பாவிங்களா...!//

இது நமக்கே ரிப்பீட்டு!

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி.

//இது நமக்கே ரிப்பீட்டு!//

இருந்தாலும் காவல் துறையில் இப்படி நடக்க கூடாதுங்க!

பிறைநதிபுரத்தான் said...

இல்லாத போலீசுக்கு சம்பளம் - இருந்துவிட்டு போகட்டும்.

ஆனால் செய்யாத குற்றத்திற்கு தண்டனை தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்களே!!