Monday, December 25, 2006

வேண்டாம் குடும்பக் கட்டுப்பாடு.

"கு.க. வேண்டாம், விட்டுடுங்க' * ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் சொல்கிறார்

சண்டிகார்: "இந்துக்களே, நீங்கள் இனி, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை பின்பற்ற வேண்டாம். இந்துக்கள் ஜனத்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. அதனால், கு.க. திட்டங்களை கைவிட்டு விடுங்கள்'யார் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் தெரியுமா, "ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க்' என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் சுதர்சன்.

ஏற்கனவே, சமீபத்தில் பல்வேறு தரப்புகள் மூலம் எடுத்த சர்வேக்களில், குடும்பக் கட்டுப்பாட்டு முறையை இந்துக்கள் தான் அதிகம் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இது தான் ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இந்து அமைப்புகளின் அச்சத்துக்கு காரணம்.

இப்போதே, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று இன்னொரு சர்வே கூறுகிறது. ஒரு குழந்தை, இரு குழந்தை பெறுவதை கண்டிப்பாக பின்பற்றுவது இந்துக்களில் பலரிடம் உள்ளது.

இப்படியே போனால், இந்துக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்போது தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில், 25 ஆண்டுகளில் கணிசமான அளவில் இந்துக்கள் எண்ணிக்கை பெரும் ஆபத்தான் நிலைக்கு போய்விடும் என்றும் இந்த அமைப்புகள் அஞ்சுகின்றன.

இதை வலியுறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. கடந்த வியாழன் அன்று சண்டிகாரில் சுதர்சன் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களால், இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று வருத்தப்பட்டு பேசினார்.

அவர் பேசியதாவது: இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், வரும் 2060ம் ஆண்டுகளில் இந்துக்கள், இந்தியாவில் சிறுபான்மையினராக வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் இப்போதுள்ள நிலையை வைத்து கணிதத்தில் இந்த அதிர்ச்சிதரத்தக்க கணிப்பு கிடைத்தது.

"நாம் இருவர், நமக்கு இருவர்' என்ற பிரசாரம், இந்துக்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் எல்லாருக்கும் தான். ஆனால், சமீபத்தில் சர்வேக்களில் பார்த்தால், முஸ்லிம்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை என்பது இதில் தெரிகிறது.

ஜனத்தொகை வளர்ச்சி வீதம் என்று எடுக்கப்பட்ட கணக்கில், இந்துக்கள் 21 சதவீதம் என்றும், முஸ்லிம்கள் 29 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது. அப்படியானால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக வேண்டிய ஆபத்து உள்ளது.

இந்து குடும்பங்களில் உள்ளவர்கள், இனி நீங்கள் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை பின்பற்ற வேண்டாம். "நாமிருவர், நமக்கிருவர்' என்ற பிரசாத்தை பின்பற்றாமல், நீங்கள் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளை பெற வேண்டும்.

மத்திய அரசு, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை போடும் போதே, எல்லா சமூகத்தினரும் இதை பின்பற்றும்படி செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால், இப்படி ஒரு ஆபத்தான வளர்ச்சி வீதம் தெரியவந்தபோதாவது, திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு சுதர்சன் கூறினார்.

நன்றிங்க-தினமலர்

வறுமை பஞ்சம் இவைகளுக்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்பது சுத்த அசட்டுத்தனமான பிரச்சாரம். மக்கள் தொகைப் பெருகி அதிகரிக்கும்போது தேவைகளும் அதிகரித்து, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய மனிதன் புதிய கண்டு பிடிப்புகளில் இறங்குகிறான். அதில் வெற்றியும் பெற்று வருகிறான்.

மக்களிடையே குடும்ப அங்கத்தினர் அதிகரித்து விட்டால் உணவு நெருக்கடி ஏற்படும் என்று அஞ்சி, தம் மக்களை கொன்று விடும் பழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பாக இறை மறையின் கட்டளை இறங்கியது. 'வறுமையை பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவு வழங்குகிறோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது மாபெரும் பாவமாகும்.' அல் குர்ஆன் 17:31

இறை மறையின் இந்த அறிவிப்பு வருங்காலத்தில் எவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கமும் பூமியில் உணவு நெருக்கடியைத் தோற்றுவித்து விட முடியாது. மக்கள் தொகைக்கிற்கேற்ப உணவு பெருக்கமும் என்றும் எப்போதும் பொருத்தமாக ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்ற வாதமம் கூட.

முஸ்லிம்கள் இறை மறையின் அறிவிப்பின் உண்மையை எல்லாக் காலத்திலும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். அதனால்தான் இன்றைய காலத்திலும் கூறப்படும் கருத்தடை குடும்பக் கட்டுப்பாடு என்ற உணர்வு முஸ்லிம்களிடம் ஒரு போதும் தோன்றுவதில்லை. அவர்கள் இறைவனின் உணவு வழங்கும் ஆற்றலின் மீது பூரண நம்பிக்கை கொண்டு உணவுப் பிரச்சனையை அவனிடமே ஒப்படைத்து விட்டனர்.

சகோதரர்களே நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் நிறைய மக்கள் செல்வங்களை பெற்றெடுங்கள் யார் கண்டது அதில் பலர் ஜீனியஸாக விளங்கலாம்.

3 comments:

வாசகன் said...

//சகோதரர்களே நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் நிறைய மக்கள் செல்வங்களை பெற்றெடுங்கள் யார் கண்டது அதில் பலர் ஜீனியஸாக விளங்கலாம்.//

"அய்யோ, அய்யோ இந்த முஸ்லிம் அதிகப் பிள்ளைங்கள பெத்துக்கறானே" என்று புலம்பி அடிவயிற்றில் அடித்துக்கொள்ளும் சுதர்சனங்களுக்கும் முஸ்லிமுக்கும் மனப்பான்மையில் உள்ள வித்தியாசமாக மேற்கண்ட வரிகள்.

முஸ்லிம் said...

ராஜா உங்கள் வரவுக்கு நன்றி.

Sirajudeen said...

அன்று அத்வானி கற்பழிப்புக்கு அரபு நாட்டு சட்டத்தை (மரணதண்டனை) கொடுக்க வேண்டும் என்றார். இன்று சுதர்ஸன் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை இந்துக்கள் செய்யாதீர்கள் என்கிறார். இப்படியே இஸ்லாத்தின் எல்லா சட்டங்களையும் அங்கிகரிப்பார்கள் போல் தெரிகிறது. ஆனால் இஸ்லாத்தை எதிர்ப்பதாக சொல்லி முஸ்லீம்களை கொல்லவும் உத்தரவு விடுகிறார்கள். இவர்களுடைய செயல்பாடு புரியாத புதிர்.