Friday, December 08, 2006

சிலைகள் திறப்பு விழா.

பெரியார் சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை - கருணாநிதி

07 டிசம்பர் 2006

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இந்த சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி தமக்கு காலையிலேயே வந்தது என்று கூறினார்.

பெரியார் சிலை மட்டுமின்றி பெரும் தலைவர்களுடைய சிலைகளிலும் அந்த தலைவர் சொன்ன கருத்துக்களிலும் வேறுபாடான நிலை சிலருக்கு இருக்கலாம் என்றும், அதற்காக சிலையை உடைப்பதை ஒரு போதும் இந்த அரசு அனுமதிக்காது என்றார்.

பெரியாரின் சிலை என்பது அதை சேதப்படுத்தியவரையும் சேர்த்து மனிதராக்கியவரின் சிலை என்றும், அதை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.

கருத்துக்கு கருத்து, எண்ணங்களுக்கு எண்ணம், கொள்கைக்கு கொள்கை என்று மோதல் இருக்க வேண்டுமே தவிர, சிலைகளை உடைப்பதையோ அதை சீரழிப்பதையோ ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தப் பிரச்சனையை யாரும் மேலும் வளர்த்து பூதாகாரமாக்க வேண்டாம் என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

நன்றிங்க

நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு

08 டிசம்பர் 2006

நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சரும் திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாாறன் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற அதிமுக நிறுவனரும் மறைந்த தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை திறப்பு விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மையார், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா, அவரது மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

நன்றிங்க

மத்திய, மாநில அரசியலில் மாற்றம் வரும் - ஜெயலலிதா

07 டிசம்பர் 2006

மத்தியிலும் மாநில அளவிலும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா எனினும் அதுபற்றி விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்த உடனேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார். இரு மாநிலங்களின் பொதுப் பணித் துறை அமைச்சர்கள் பேசுவதில் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

சக்தி வாய்ந்த பல பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரின் சிலை திறப்பு விழாவை திமுக புறக்கணித்ததை கண்டித்த போதிலும், இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காதது பற்றி அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது சோனியா காந்தியிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா மற்றும் பெரியாரின் சிலைகளை திறக்க முயற்சிகள் மேற்கொண்டதும் அதிமுகதான் என்று ஜெயலலிதா கூறினார்.

நன்றிங்க

அரிய வாய்ப்பை நழுவவிட்டவர் ஜெயலலிதாதான் - கருணாநிதி

08 டிசம்பர் 2006

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் அரிய வாய்ப்பை தவற விட்டது ஜெயலலிதா அரசுதான் என்று முதலமைச்சர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுவையில் இவ்வாறு கூறினார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதாதான் என்றும் எனவே வாய்ப்பை நழுவ விட்டது அவரது ஆட்சிதான் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இரு மாநில அமைச்சர்களும், கலந்து பேசவிருப்பதாகவும் அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் மீண்டும் இரு மாநில முதலமைச்சர்களும் அடுத்த கட்ட பேச்சு நடத்த ஏற்பாடுகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.

அந்த முயற்சியிலும் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

எம்ஜிஆர் சிலை திறப்பதை தாமதிக்க தாம் குறுக்கிட்டதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவதூறு வழக்கு போடுவதற்குரிய வாசகம் என்றும் கருணாநிதி கூறினார்.

நன்றிங்க

தென் தமிழ் நாட்டில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும் சாதிக் கலவரங்களுக்கு சிலைகள் சேதப்படுத்தப் படுவதுதான் காரணியாக இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் சிலைகள் இரும்புக் கூட்டுக்குள் வைக்கப்படும் அவலத்தை பார்க்கிறோம்.

சிலை வைப்பதற்காக போராட்டம் சிலை வைக்கக்கூடாது எனவும் போராட்டம். வழக்கு வம்பு அடிதடிகள் உயிர் சேதங்கள் தண்டனைகள் இதையெல்லாம் மறைந்த தலைவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த வன்முறை போக்குகளை விரும்ப மாட்டார்கள்.

-முஸ்லிம்

2 comments:

புதுச்சுவடி said...

கருணாநிதி சிலைப் பித்தர் என்றால் மிகையாகாது.

சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது கடற்கரையில் எட்டு சிலைகளை வைத்தார்.

ஆஸ்தான ஜ்யோதிஷனின் ஆலோசனையால் கண்ணகி சிலையைக் கடற்கரையிலிருந்து ஜெயலலிதா அகற்றியபோது அலறிப் பாய்ந்தார்.

தாம் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாய் அச்சிலையை நிறுவினார்.

தமிழகத்தில் சுனாமியால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததைப் பற்றிக் கவலைப்படாத கருணாநிதி, கன்னியாகுமரியில் தாம் வைத்த "அய்யன் வள்ளுவன்" சிலை உயிரோடிருக்கிறதா என்றே கவலைப் பட்டார்.

இந்துக்கள் தாம் கடவுள் என நம்பும் சிலைகளுக்கு மாலை போடுவதை மூட நம்பிக்கை எனச்சொல்லும் கருணாநிதியும் அவரது கழகத்தவரும் "அண்ணா" வின் சிலைக்கும் "அய்யா"வின் சிலைக்கும் மாலை போடுவதில் வெடகம் கொள்வதில்லை.

கடற்கரையில் எட்டு சிலைகள் திறக்கப்பட்டபோது ஒரு புதுக்கவிஞன்

BIRDS' EYE VIEW எனும்தலைப்பில்


" கடற்கரையில்

எட்டு லட்ரீன்கள்"

என்று ஒரு கவிதை சொன்னான்.

சிலைகள் பறவைகளுக்கு 'அதுக்கு'ப் பயன் படுகின்றனவோ இல்லையோ, இந்தியாவில் கலவரங்களைத் தூண்டப் பயன்படுகின்றன.

முஸ்லிம் said...

//நானும் சிலையாகி விட்டேன்! :-)//

ஹாபிழ்

எதுக்கும் கை காலை ஆட்டி கொள்ளுங்கள் இல்லேன்னா உண்மையில் சிலைதான்னு உடைச்சிடுவாங்க