இணைந்து செயல்படுவோம்: பாக்.கிற்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு
20 டிசம்பர் 2006
கடந்த காலங்களை மறந்துவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட இதுவே தக்க தருணம் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இன்று அமிர்தசரசில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.அனைத்து புதிய யோசனைகளையும் நான் திறந்த மனதுடன் வரவேற்கிறேன்.பரஸ்பர ஆலோசனைகள் மூலம் நாம் ஒரு அமைதியான சூழ் நிலையை உருவாக்குவோம். இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த காலங்களை மறந்துவிட்டு, புதிய எதிர்காலத்திற்காக சிந்தித்து இணைந்து செயல்பட இதுவே தக்கதருணமாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. ஆனால் அது சாத்தியமாவதற்கு இரு நாடுகளிடையே அமைதி, நட்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படவேண்டும். அதற்கு இடையூறாக உள்ள சிறிய தடைகளை ஒதுக்கி வைத்தால், அது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமானதுதான் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது.
இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதிகளில் அமைதி ஏற்பட இது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது மிக அவசியமானது.
இவ்வாறு மன்மோகன் கூறினார்.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்குவது உட்பட நான்கு அம்ச யோசனைகளை பாகிஸ்தான் அதிபர் முஷ்ரப் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றிங்க
பாரதப் பிரதமரின் கனவு நிறைவேறட்டும்.
No comments:
Post a Comment