Saturday, December 16, 2006

இரட்டைத் தீர்ப்புகள்.

கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜே.பி யைச் சேர்ந்த (யுவமோர்ச்சா) ஜெயகிருஷ்ணன் என்னும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அதன் பேரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு விசாரணை நீதி மன்றமும் மேல் முறையீட்டில் உயர்நீதி மன்றமும் தூக்குத் தண்டனை விதித்திருந்தன.

உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நால்வரது தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டனர். மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனையாகத் தண்டனை குறைக்கப் பட்டது.

கீழ் நீதி மன்றமும் கேரள உயர்நீதி மன்றமும் வழங்கிய தூக்குத் தண்டனை, காவல் துறையின் கதையைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பியதால் ஏற்பட்ட அல்லது திட்டமிட்ட நிகழ்வு. இதை உச்ச நீதிமன்றம் சரியான கண்ணோட்டத்தில் அணுகியதால் ஐவரும் உயிர் தப்பினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் காவல்துறை வழக்குப் புனைந்ததில் "ஒப்பிச்ச தரிகிட பரிபாடிகளை"த் தோலுரித்துக் காட்டிக் காவல் துறையைக் கண்டித்தனர். மேலும் பொய் சாட்சி சொன்ன ஆசிரியர் ஒருவரையும் கண்டித்தனர். பள்ளி மாணவர்கள் அளித்த சாட்சியத்தைக் கணக்கில் கொண்டு நால்வரை விடுதலை செய்தனர்.

(அப்ஸல் வழக்கிலும் இந்தக் கதைதான் நடந்திருக்குமோ?)


இதே செய்தியை 'தினமலரும்' பிரசுரித்துள்ளது கீழே:-

கேரள குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை "ஆயுளாக' குறைப்பு.

புதுடில்லி: கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவருக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் ஜெய் கிருஷ்ணன் என்ற பள்ளி ஆசிரியர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டரான பிரதீபன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தவிர மேலும் நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டுகள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்தன. கேரள ஐகோர்ட்டும் ஐந்து பேர் மீதான மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி.சின்கா மற்றும் மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், பிரதீபனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இது தவிர மீதி நான்கு பேரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
------------------------

மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் உயிர் போகிற சமாச்சாரம். உயிர் போனால் போனதுதான் போன உயிரை திரும்ப கொண்டு வர முடியாது அதில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

4 comments:

வணங்காமுடி said...

விருதுநகர் பாண்டியம்மாளைக் கொன்றதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுத் தீப்புப் பெறும் வேளையில்(க்ளைமாக்ஸில்) பாண்டியமாள் உயிருடன் வந்தார்.

உப்புக்கோட்டை சரோஜாவைக் கற்பழித்துக் கொன்றதாகக் கைது செய்யப் பட்டுச் சிறையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர், சரோஜாவின் வருகையால் உயிர் பிழைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

செரினா மீது கஞ்சா கடத்திய வழக்கு, கள்ள நோட்டு வழக்கு போட்ட காவல்துறை, செரினாவை நீதி மன்றம் இவ்வழக்குகளில் இருந்து விடுதலை செய்ததைக் கண்டு என்ன செய்தது?

நீதி என்பது அதிர்ஷ்ட வசமாகவே கிடைக்கும்போல...

Anonymous said...

அப்சல புடிச்சவுடனே பங்க் குமார் மாதிரி என்கவுண்டர்ல போட்டிருந்தா இத்தை பிரட்சனை உண்டா சொல்லுங்க ?

முஸ்லிம் said...

வணங்காமுடி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கரு.மூர்த்தி உங்கள் வரவுக்கு நன்றி.

\\அப்சல புடிச்சவுடனே பங்க் குமார் மாதிரி என்கவுண்டர்ல போட்டிருந்தா இத்தை பிரட்சனை உண்டா சொல்லுங்க ?//

காக்கி சட்டைக்கு உள்ளேயும் கொஞ்சம் ஈரமில்லாமலா போய்விடும்? அதான் ஒரு அப்பாவியை எப்படி என்கவுண்டர் என்ற பெயரில் கதையை முடிப்பது என்று இளகியிருக்கலாம். உங்களுக்கு புடிச்சவுடனே என்கவுண்டர்ல போட்டு தாக்க முடியாதுங்க.

வணங்காமுடி said...

//அப்சல புடிச்சவுடனே பங்க் குமார் மாதிரி என்கவுண்டர்ல போட்டிருந்தா இத்தை பிரட்சனை உண்டா சொல்லுங்க ? //


பார்லிமெண்ட் அட்டாக்கிற்கு வந்தவர்களை (?!) ஸ்பாட் என்கவுன்டரில் போட்டுத் தள்ளி விட்டார்கள். அப்ஸலை நிதானமாகப் பிடித்து வழக்கில் சேர்த்தார்கள்