Tuesday, December 05, 2006

பாதுகாப்பு தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் கடும் பாதுகாப்பு

03 டிசம்பர் 2006

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 3 தினங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தீவிரவாதிகள் நாசவேலையில் இறங்கலாம் என்பதால் பொது இடங்கள், முக்கிய கட்டிடங்கள், கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது வழக்கம்.

தற்போது மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் 6ம் தேதி வருவதை ஒட்டி, சபரிமலையில் கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் 5ம் தேதி தொடங்கி, 7ம் தேதிவரை 3 தினங்களுக்கு பாதுகாப்பு கருதி புதிய கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். இதன்படி, 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி அதிகாலை வரை 18ம் படி மீது பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6ம் தேதியன்று 18ம் படியைத் தவிர வேறு வழியில் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு
அனுமதி கிடையாது.

மேலும், இருமுடியைத் தவிர வேறு எந்த உடைமைகளையும் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களிடம் 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

நன்றிங்க

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். அல்குர்ஆன் 22:40.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரின் வழிபாட்டுத்தலங்களைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபடாத வரை அனைவரின் வழிபாட்டுத்தலங்களும் பாதுகாக்கப்படும். கோவில் ஒன்றை இடித்தால் தங்கள் பள்ளிவாசலுக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உடைத்து விட்டார்கள். பள்ளிவாசல் ஒன்றை இடித்தால் தங்கள் கோவில்களுக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உடைத்து விட்டார்கள்.

தாம் வழிபடும் ஆலயம் பத்திரமாக இருக்க வேண்டுமானால் பிற சமயத்தினரின் ஆலயங்களும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

-முஸ்லிம்

No comments: