மனிதன் ஆன்மீக சமயத் தேர்வுகளை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறான். இதற்கு இஸ்லாம் முழுமையான சுதந்திரம் வழங்கியிருக்கிறது. 21ம் நூற்றாண்டின் அரசியல்வாதிகள் அரசியல் தலைவர்கள் மதமாற்றம் தண்டிக்கப்படும் குற்றமென்று சட்டமியற்றினார்கள்.
மதமாற்றத்தை கண்டித்து நிறைவேற்றிய சட்டத்தை ஆன்மீகவாதிகளும் மதத்தலைவர்களும் சரிகண்டு ஆதரவளித்ததோடு மதமாறுவது மாபெரும் அபாயம் என்பதாவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒருவருக்கு விருப்பமான சமய நெறியை பின்பற்றவும் ஏற்று கொண்ட மதநெறியை எண்ண எழுத பிரச்சாரம் செய்யலாமெனவும் இந்திய அரசியல் சாசனம் அடிப்படை உரிமை வழங்கியிருந்தும் அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் சர்வாதிகாரத்தை கையிலெடுத்து தனியொரு மனிதனின் அடிப்படை உரிமையில் மூக்கை நீட்டினார்கள்.
இந்த நூற்றாண்டிலும் மதமாற்றத்தால் 'வானம் இடிந்து தலையில் விழுந்து விடும்' என்கிற மாதிரி பூச்சாண்டி காட்டியவர்கள் மத்தியில் மத சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும்?
'உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன். அவனையன்றி நீங்கள் விரும்பியதை வணங்கிக் கொள்ளுங்கள்.' அல்குர்ஆன் 39:14-15.
இதுதான் சமயத் தேர்வு சுதந்திரம்.
-முஸ்லிம்
3 comments:
நச்!
பூச்சாண்டி காட்டிகள் இனி திருந்தட்டும்
சகோதரர் முஸ்லிம்,
அழகாகச் சொன்னீர்கள். பூச்சாண்டி காட்டுவோர் இனியாவது திருந்தட்டும்.
அல்லது அவர்கள் பிழைப்பே இது தான் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தோழன்
அட்றா சக்கை
உங்கள் வரவுக்கு நன்றி.
-முஸ்லிம்
Post a Comment