Wednesday, December 06, 2006

2.சேதியைக் கேட்டியளா?

குடியரசுத் தலைவர் பதவி: கலாமுக்கு பா.ஜ. ஆதரவு

30 நவம்பர் 2006

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக அந்த பதவியில் தொடருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அவர் குடியரசு தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. மாணவ அமைப்புகள் சில, இதற்காக ஆதரவு திரட்ட தனி இணையதளம் துவக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.

எனினும் முக்கிய அரசியல் கட்சிகள், குடியரத் தலைவர் தேர்தல் தொடர்பாக மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் உட்பட சிலர் அந்த பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் மீண்டும் தொடர பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மிகப் பெரிய விஞ்ஞானியான கலாம், தனது பதவி காலத்தில் சிறப்பாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் செயல்படுவதாக கருத்து தெரிவித்தார்.

நாட்டுக்கு கலாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராக தொடர பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும். முஸ்லீம்களுக்கு தங்கள் கட்சி விரோதி அல்ல என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.


நன்றிங்க

அடடா..... முஸ்லிம் சமுதாயத்தின் மீது இந்த பாஜக தலைவருக்குத்தான் எவ்வளவு அக்கறை புல்லரிக்குது போங்க.

இப்போ அடுத்த செய்தியை பாருங்களேன்.

பாபர் மசூதி : மக்களவை ஒத்திவைப்பு

06 டிசம்பர் 2006

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 14வது ஆண்டு தினமான இன்று மக்களைவில் பிஜேபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று காலை அவை கூடியதும், பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.

மேலும் முகமது அப்சாலை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியது.

இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
நன்றிங்க

ஒரு முஸ்லிம் அப்துல் கலாம் மீது அக்கறை கொண்டவர்களாக பாஜக கட்சி காட்டி கொண்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் எப்படி அல்வா கிண்டுறாங்கன்னு பாருங்களேன். முதல் செய்தியில் நாங்கள் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல என்று வாயாற சொல்லிவிட்டு இரண்டாவது செய்தியில் நாங்க மட்டும்தான் முஸ்லிம்களின் விரோத கட்சி என்று வாய்கூசாமல் சொல்லி பாதகையில் எழுதி காட்டுறாங்களே இந்த பாஜாக கட்சிக்காரங்க என்னமா புளுகுறாங்கப்ப.

-முஸ்லிம்

No comments: