நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்.
ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி. சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன். புலிகள் நடத்திய 'துன்பியல் சம்பவத்தை' நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்.
அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன். காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி. இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.
நன்றி-ஜூனியர் விகடன் 24/12/2006
ம்ஹும்... பொது வாழ்வில் சம்பவிக்கும் முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாக இல்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருந்தாலும் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று மூன்றாவது முத்திரையும் குத்தப்படுகிறது.
No comments:
Post a Comment