அரசியல் பாடம் கற்க வேண்டும்: விஜயகாந்துக்கு கருணாநிதி பதில்
03 டிசம்பர் 2006
நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களூக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கக் கூடாது என மத்திய அரசு வழிமுறை வைத்துள்ளது என்று, விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிறு அன்று கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசில் நீர்வளத்துறையை கேட்டு பெறவேண்டியது தானே என்று விஜயகாந்த் கூறுகிறார். நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களுக்கு அந்த துறையை ஒதுக்குவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு கொண்டுள்ளது. இதனால் தான் 2 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அந்த துறை ஒதுக்கப்படவில்லை. இந்த அரசியல் பாடத்தை விஜயகாந்த் முதலில் கற்க
வேண்டும் என்று கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யத்தயாரா என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படத்தில்,
'டைட்டிலுக்கு' பிறகு 'கிளைமாக்ஸ்' காட்சி வந்துள்ளதா? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இலவச சமையல் எரிவாயு அடுப்பு வழங்குவது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம், சத்துணவில் வாரம் 2 முட்டை, வண்ணத் தொலைக்காட்சி உட்பட அரசின் பல திட்டங்களுக்கு அவர் எதிர்ப்பு காட்டி வந்துள்ளார். இது ஜெயலலிதாவின் நல்லெண்ணத்துக்கு அடையாளம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
நன்றிங்க
சபாஷ் சரியான போட்டி
-முஸ்லிம்
No comments:
Post a Comment