கட்சியை விட்டு யாரும் விலக வேண்டாம் பா.ஜா.க தலைவர் வேண்டுகோள்
Date : 12/18/2006 6:24:00 AM
கருத்து வேறுபாடு காரணமாக இயக்கத்திலிருந்து வெளியேறக் கூடாது என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னை மாவட்ட பாஜக சார்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் குருஜீ கோல்வால்கரின் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் அவர் பேசியதாவது:
பொதுவாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இருப்பினும் பணியில் இருந்து நாம் விலகக் கூடாது.
நம்மை மன வேறுபாடுகள் பிரிப்பதை அனுமதிக்கக் கூடாது. இயக்கத்தை விட்டு வெளியேறும் சிந்தனை நமக்குத் தோன்றக் கூடாது.
அண்மைக் காலமாக பாஜகவில் இத்தகைய போக்கு அதிகரித்துள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
பதவிப் பொறுப்பில் இருப்பது முக்கியம் அல்ல. ஆனால், கட்சிக்கு வேண்டப்பட்டவராக இருக்க வேண்டும்.
கட்சிக்குள் அனைவருக்கும் பொறுப்பும் உண்டு. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் நமது லட்சியங்களை அடைய முடியும்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிரானது அல்ல. ஆனால், இத்தகைய பொய் பிரசாரம் தொடர்கிறது.
ஒரே சிவில் சட்டம்: ஜனசங்கத்தின் பரிணாம வளர்ச்சியே பாஜக.
சீனாவில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் உள்ளன.
இதே போல நம் நாட்டிலும் ஒரே சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. ஆனால், எங்களை வகுப்புவாத சக்திகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றன என்றார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி.
நன்றிங்க
அயோத்தியாவும் பொதுசிவில் சட்டமும் பாஜகவின் இரு ஹெட்லைட். இதை கொண்டு பரிவார வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன எல்லாம் இந்துத்துவ படுத்தும்பாடு.
ஜோக்: //முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிரானது அல்ல. ஆனால், இத்தகைய பொய் பிரசாரம் தொடர்கிறது.//
டூப்: //ஜனசங்கத்தின் பரிணாம வளர்ச்சியே பாஜக.//
No comments:
Post a Comment