ரஜினிகாந்த் அவ்வப்போது எதையாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிக்கிறது.
நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் 'சொல்லி அடிப்பேன்' என்ற படத்தின் ஆடியோ கேசட் விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, ''விவேக் அரசியலும் பேசுவார், ஆன்மிகமும் பேசுவார், கம்ப்யூட்டர் பற்றியும் தெரியும், பூகோளம் பற்றியும் தெரியும். இவ்வளவு அறிவுஜீவியான விவேக் ஒரு பிராமணராக இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது'' என்று ஆச்சரியப்பட்டுப் பேசியிருந்தார்.
விவேக் பற்றி ரஜினி கூறியுள்ள இந்த கமெண்ட்தான் பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. தேவர் இனத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவரை பிராமணர் என்று சொல்லியதன் மூலம் ஒட்டுமொத்த தேவர் இனத்தையே ரஜினி அவமானப்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசினார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்சேதுராமன். ''தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விவேக் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. தேவர் இனத்தில் மட்டுமின்றி எல்லா சமுதாயத்திலும் அறிவாளிகளும், நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுபோல் பிராமண சமுதாயத்தில் வன்முறை எண்ணம் கொண்டவர்களும், முட்டாள்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் ரஜினி.
நன்றிங்க - 21/12/2006 குமுதம்
அடுத்தவங்க எழுதிக் கொடுப்பதை வெள்ளித்திரையில் நோகாமல் பேசி கைத்தட்டல் வாங்கிடும் ''ஹீரோக்கள்'' நிஜவாழ்க்கையில் எங்கே எப்படி பேசணும் என்கிறது கூட தெரியாமல் ஜீரோவாகி விடுகிறார்கள். ரஜினி பேசாமல் நிஜவாழ்க்கையிலும் பேசுவதற்கு டயலாக் எழுத யாரையாவது வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.
21 comments:
//ரஜினி பேசாமல் நிஜவாழ்க்கையிலும் பேசுவதற்கு டயலாக் எழுத யாரையாவது வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.//
அப்பவாவது ஒழுங்கா ஜாதி சர்டிபிகேட் எல்லாம் வாங்கிப் பார்த்து பிராமணரா இல்லையா என்று செக் பண்ணுன பிறகு வேலைக்கு வைக்கச் சொல்லுங்க.
விழாவில் ரஜினி பேசியது இது தான்.
-----------------------------------------------------------------------------------
டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.
இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.
`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.
எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.
இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.
விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.
புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------------
உண்மையான விஷயம் தெரிய
http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_17.html
மரைக்காயரே உங்கள் வரவுக்கு நன்றி.
//அப்பவாவது ஒழுங்கா ஜாதி சர்டிபிகேட் எல்லாம் வாங்கிப் பார்த்து பிராமணரா இல்லையா என்று செக் பண்ணுன பிறகு வேலைக்கு வைக்கச் சொல்லுங்க.//
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.
வெங்கட்ராமன் உங்கள் வரவுக்கு நன்றி.
//விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.//
இதான் வாய் கொழுப்பு.
ஏனைய தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய ஒரு புகழ் பெற்ற தமிழ் நடிகர் படங்களை இருட்டடிப்பு (boycott) செய்ய வேண்டும். தான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.
கொஞ்சமும் பொறுப்பில்லா சிறுபிள்ளை தனமான பேச்சு.
இவருடைய இரசிகாமணிகள் இதற்கு என்ன சொல்கிறார்கள்? இதுகளை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டுயது தமிழனின் சாபக்கேடு!
//நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது.//
அப்டின்னாக்கா வேற சாதியினரின் நடை உடை பாவனை எப்படியிருக்கும்.... விவேக்கை அவ்வளவு பாராட்டி விட்டு அவர் நடை உடை பாவனை பிராமனன் மாதிரி இருக்கீறது என்று சொன்னால் அதன் அர்த்தம் பாராட்டத் தகும் அறிவாளிகள் எல்லாம் ப்ரமனர்தான் என்கிற ரஜினியின் உள்மன விகாரத்தை குறீக்கிறது....
அப்படியே ரஜினியை தேவரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும் அதை பாராட்டும் அளவு என்ன? இதே போல பள்ளர் பறையர் என்று புது மனுநிதி எழுதச் சொல்லுங்கள்...
அசுரன்
அண்ணாச்சி,
நான் நீங்கள் சொன்ன குமுதம் இதழில் தேடிப் பார்த்தேன்; இல்லை. அது வெளியாது குமுதம் ரிப்போர்டரில். அதன் சுட்டிhttp://www.kumudam.com/magazine/Reporter/2006-12-21/pg1.php
//விவேக்கை அவ்வளவு பாராட்டி விட்டு அவர் நடை உடை பாவனை பிராமனன் மாதிரி இருக்கீறது என்று சொன்னால் அதன் அர்த்தம் பாராட்டத் தகும் அறிவாளிகள் எல்லாம் ப்ரமனர்தான் என்கிற ரஜினியின் உள்மன விகாரத்தை குறீக்கிறது....//
பாவம்.. ரஜினியை விட்டுடுங்க.. அவர் மாமியார் வீட்டு பெருமையை பேசியிருக்காரு.
மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி.
''என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா''
யாரோ எழுதி யாரோ பாடியதற்கு வாயசைத்து அபிநயம் செய்தவர் வைச்ச ஆப்பு மாதிரி உலகத்தில் கிடையாதுங்க.
அசுரன் உங்கள் வரவுக்கு நன்றி.
//நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது.//
இதான் உள்ளே விகாரமும் வெளியே அல்வாவும் கொடுக்கிற சூப்பரு ஸ்டாரு.
ரஜினி என்ற கழிசடைக்கு (நன்றி: அசுரன்) காவடி தூக்கும் தமிழர்கள் இனியாவது திருந்த வேண்டும்.
மாமியார் வீட்டுப் பெருமை பேசுவதை வீட்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மறத்தமிழர்கள் இனி இந்தப் பார்ப்பன அடிவருடி கூத்தாடியைப் புறக்கணிக்க வேண்டும்.
பிறவி பிராமணராக இல்லாவிட்டாலும், ரஜினி 'மாமியார் வீட்டுப் பெருமை'யாக எண்ணி பிராமணியத்தை போற்றி வருகிறார். அதுபோல் கமலஹாசன் பிராமணராக பிறந்திருந்தாலும், நேர்மையாகப் பேசி வருபவர். பாபர் மசூதி பிரச்னையில் 'முன்னூறு வருட பாபரை வெளியே அனுப்பவேண்டுமென்றால், இரண்டாயிரம் வருட ராமரையும் சேர்த்துத் தான் வெளியேற்றவேண்டும்' என்றார்.
வணங்காமுடி உங்கள் வரவுக்கும் வழங்கிய சுட்டிக்கும் நன்றி.
அப்பாவி தி.ராஸ்கோலு உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
கலையரசன் உங்கள் வரவுக்கு நன்றி.
சிவாஜி ராவ் பிறவியில் ராவ் ஆகவோ பிராமணர் இல்லாதவராகவோ இருந்துட்டு போகட்டும். அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது நமக்கு தேவையில்லை.
//சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது.//
இதான் ஒரு நடிகரை சக நடிகராக பார்க்காமல் அவரின் வர்க்க பேத கண்ணோட்ட பார்வை அவரை படுபாதாளத்தில் தள்ளி விட்டது
//முதன்முறையாக அம்பேத்கர் அவர்கள் காந்தியை சந்தித்து பல விஷயங்களை பேசிச்சென்ற பின்னர், மற்றவர்கள் காந்தியிடம் அவர் தலித் என்பதை எடுத்துக்கூற காந்தி, 'அப்படியா அவர் புனே பிராமணர் என்றல்லவா நினைத்தேன்' என்று வியந்தாராம்.//
அது கல்வி பிராமணர்கள் மற்றும் உயர்குடியினருக்கே சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலம்.
காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதில் சில ஜாதி பாகுபாடு குறித்தவை.
ரஜினி ஒருவேளை தனக்கும் தன் மனைவி மற்றும் மனைவி குடும்பத்திற்குமுள்ள அறிவு வேற்றுமையை நினைத்து இப்படி சொல்லி இருக்கலாம்.
அவர் முட்டாள் என்றால், பிராமணன் அல்லாத எல்லோரும் அறிவில் குறைந்தவர்கள் என்று அர்த்தமா?
இங்கே
/***********************************
பிறவி பிராமணராக இல்லாவிட்டாலும், ரஜினி 'மாமியார் வீட்டுப் பெருமை'யாக எண்ணி பிராமணியத்தை போற்றி வருகிறார்
***********************************/
கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. . . . ?
ரஜினி பேசியது தவறென்றால், குமுதம் அதை திரித்து வெளியிட்டது மிகப் பெரிய தவறு.
அததனைப் பிரச்சனைகளுக்கும் குமுதத்தின் வியாபார நோக்கமே காரணம்.
அத வுட்டுட்டு ஏன்யா இப்படி . . . . . . ?
ஜெயக்குமார் சொன்னது : //ரஜினி ஒருவேளை தனக்கும் தன் மனைவி மற்றும் மனைவி குடும்பத்திற்குமுள்ள அறிவு வேற்றுமையை நினைத்து இப்படி சொல்லி இருக்கலாம். அவர் முட்டாள் என்றால், பிராமணன் அல்லாத எல்லோரும் அறிவில் குறைந்தவர்கள் என்று அர்த்தமா?//
நண்டு கொழுத்தால் வலையில் தங்காதாம். அதைபோல்தான் நம்ப ரஜினி வர்கங்களும்.
//கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. . . . ?
ரஜினி பேசியது தவறென்றால், குமுதம் அதை திரித்து வெளியிட்டது மிகப் பெரிய தவறு.//
Mr.Venkatraman,
No Kummi here!
//விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.//
What u defend here? Did Rajni not speak like that?
I wonder, How U people are labling a issue as 'Kummi' when it is against 'Brahmanism' only?
ஜெயக்குமார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
///முதன்முறையாக அம்பேத்கர் அவர்கள் காந்தியை சந்தித்து பல விஷயங்களை பேசிச்சென்ற பின்னர், மற்றவர்கள் காந்தியிடம் அவர் தலித் என்பதை எடுத்துக்கூற காந்தி, 'அப்படியா அவர் புனே பிராமணர் என்றல்லவா நினைத்தேன்' என்று வியந்தாராம்.///
//அது கல்வி பிராமணர்கள் மற்றும் உயர்குடியினருக்கே சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலம்.//
காந்தியும் அம்பேத்கரும் முதன் முறையாக சந்தித்து கொண்டதில் பல விஷயங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அம்பேத்கர் சென்றவுடன் காந்தியிடம் 'அவர் தலித்' என்று ஏன் போட்டு கொடுக்க வேண்டும்? காந்தி ஒரு தலித்திடம் நெருக்கமாக இருப்பதை பொறுக்காதவர்களே இப்படி செய்திருப்பார்கள். அவர்களை திருப்திபடுத்தவாவது காந்தி 'அப்படியா...' என்று சொல்லியிருக்கலாமே.
எப்பவும் ஒரு தவறை இன்னொரு தவறோடு இணைத்து நியாயப்படுத்தலாமோ?
சொல்ல மறந்தது
ஜெயக்குமார் இந்த பதிவை நான்தான் முதலில் பதிகிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்பே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்.
//கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. . . . ?
ரஜினி பேசியது தவறென்றால், குமுதம் அதை திரித்து வெளியிட்டது மிகப் பெரிய தவறு.//
வெங்கட்ராமன்
//ரஜினி பேசியது தவறென்றால்,//
அதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ரஜினி பேசியது தவறு என்று ஒப்புக் கொள்கிறீர்களே அதுவே பெரிது.
கும்மியடிப்பதாக நீங்கள் குறிப்பிட்டது பற்றி ராஜா விளக்கியிருக்கிறார்.
மாசிலா நீங்கள் மீண்டும் வருகை தந்தமைக்கும் மற்றும் ராஜா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment