குழந்தை பெற்றார் 9-ம் வகுப்பு மாணவி
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9-ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவி, வியாழக்கிழமை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குடியாத்தம் செதுக்கரையைச் சேர்ந்த, கணவனால் கைவிடப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் இந்த மாணவி; வீட்டருகே வசிக்கும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். (தாய், மகள் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)
இந்நிலையில், புதன்கிழமை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இம் மாணவி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 2.7 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.
காதல், கர்ப்பம் குறித்து தாயும் மகளும் யாருடனும் பேச மறுத்து வருகின்றனர். போலீஸில் புகார் கொடுப்பீர்களா, காதலனுடன் வாழ அனுமதிப்பீர்களா என்று கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை.
மிரட்டப்பட்டுள்ளார்களா என்று கேட்டதற்கும் பதில் சொல்லத் தயங்குகின்றனர்.
நன்றிங்க
பெண்ணாக பிறந்தவள் பெண் என்று உடற்கூறு பாலின வேறுபாடு கொண்டவளாகப் பார்க்கப்படுவதில்லை. அழகு சுகம் மென்மை இப்படித்தான் பார்க்கப்படுகிறாள். அதன் அவலம்தான் அன்றாட செய்திகளில் படிக்க முடிகிறது. 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றாள் என்பது அதிசயமில்லை. பெண்கள் பருவமடைந்தால் குழந்தை பெறும் தகுதியை அடைகிறார்கள். வீரம் வலிமை வேகம் என்ற போலி வக்கிரங்களுக்கு மெளனமாக இரையாகி விடுகிறார்கள்.
6 comments:
பதிவில் தவறான ஒரு சொல் இடம் பெற்றிருக்கிறது.
ஒருத்தியை ஆசை காட்டி மோசம் செய்வதற்கு வீரம் என்ன வேண்டிக் கிடக்கு?
தாயில்லாத ஒரு பெருங்குறையும் வேறு கண்காணிப்பு இல்லாமல் போனதும் காரணமாயிருக்கலாம்.
ஊமை வேஷம் போடுவதைப் பார்த்தால் ஒத்துழைப்பு மனப்பூர்வமாக உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
அழகு உங்கள் வரவுக்கு நன்றி.
//பதிவில் தவறான ஒரு சொல் இடம் பெற்றிருக்கிறது.
ஒருத்தியை ஆசை காட்டி மோசம் செய்வதற்கு வீரம் என்ன வேண்டிக் கிடக்கு?//
ஒருத்தியை பலவந்தமாக அடைவதைத்தான் தற்போது வீரம்(!?) என்று சொல்கிறார்கள்.
'மச்சி அவள முடிச்சிட்டியா?
'ஓஓஓ'
'நீ கில்லாடி மச்சி'
வீரம் எங்கே இருக்கிறது பாருங்கள்.
அடுத்தவனை ஏமாற்றுவது அமானித மோசடி செய்வது பிறரை கொள்ளையடிப்பது இதெல்லாம் தற்கால வீரத்தின் இலக்கணம். அதிலும் பாலியல் பலத்காரம் செய்தவன் சுயம்வரத்தில் வென்ற வீரனைப் போல.
பாருங்களேன் பகிரங்கமாக தந்தையை அறியாமல் ஒரு குழந்தையை இந்த உலகுக்கு தந்தவன் வீராதி வீரனல்லவா(!?)
-முஸ்லிம்
மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.
ஏழ்மையையும், பாதுகாப்புமின்மையையும் விடலை பருவத்து அறியாத்தனத்தையும் சந்தர்பமாக பாவித்து .........
கொடுமை.
வார்த்தைகள் இதற்குமேல் வரவில்லை.
மன்னிக்கவும்.
(பகிர்ந்தமைக்கு நன்றி.)
மாசிலா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மிகவும் அதிர்ச்சியாயிருக்கிறது. எங்கு போய்க் கொண்டிருக்கிறது நம் மனித சமூகம்?
என்னத்தைச் சொல்றது. காலம் கலிகாலமா போச்சு.
காதலையும் இது போன்ற காட்டுமிராண்டி ஆண்களையும் நம்பும் பெண்கள் உள்ளவரை இது தொடரவே செய்யும்.
இதைத்தான் கவிஞர் சொன்னார். "ஆணின் தவிப்பு அடங்கி விடும், பெண்ணின் தவிப்பு தொடங்கி விடும்". சரியாகத்தான் உள்ளது.
Post a Comment