Tuesday, December 05, 2006

06.12.1992

பாபர் மசூதியும்

நாங்களும் ஒன்றுதான்!

இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!


-முதிர்கன்னிகள்

14 comments:

மரைக்காயர் said...

:-(

கோவி.கண்ணன் [GK] said...

நன்றாக இடித்துச் சொன்னீர்கள் !
பாராட்டுக்கள் !

பாபு said...

These lines are from Prof.AbdulKader (Agada vigadam)

நல்லடியார் said...

சீதையின் கரம்பற்ற
இராமன்
வில்லை உடைத்தார்!
இவர்கள்
யாரருடைய
கரம்பற்ற
பள்ளிவாசலை
உடைத்தார்கள்?

வாசகன் said...

இடிக்கப்பட்டது
பள்ளிவாயில் மட்டுமா?
இந்தியநாட்டின்
இறையாண்மையுமல்லவா!
சிதைந்துவிட்ட
நல்லிணக்கத்தை
கட்டிஎழுப்புவது எந்நாள்?

தோண்டப்பட்ட வரலாற்றின்
துலங்காத
தொல்பொருளிலிருந்து
எழுந்து ஆடியது
மதவெறிப் பேய்
மக்களின் இரத்தம் குடிக்க!

முஸ்லிம் said...

அன்று சொன்னது

பிற மதத்தினரின் வழிபாட்டு இடங்களை உடைத்தால் நாம் இந்துக்கள் தானா?.....

அதுபோல இஸ்லாம் மதமும் ஆக்ரமிப்பாளர்களால் பரப்பப்பட்டது அல்ல. ஆக்ரமிப்பாளார்கள் வருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது.

இந்து மத நூல்கள் பெரியவர்கள் கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதாகக் கூறும் போது இந்த இடத்தில்தான் இறைவன் இருக்கிறான் என்று கூறி ஓரிடத்தைப் பிடிக்க வன்முறையில் நாம் எப்படி ஈடுபடலாம்?

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் R. வெங்கட்ராமனின் உரை - (தினமணி 14.12.1993)

Anonymous said...

நியாமான முதிர்க்கண்ணிகளின் கண்ணீர்.

கடலினுள்ளிருந்து கரைந்தால் அறிபவார் யாரோ?.

இடிக்கப்பட்ட கட்டிடத்தின் துகள்கள் மழை வெள்ளத்தால் கரைந்து தண்ணீரோடு கலப்பதுபோல் கடல்நீரோடு இக்கண்ணீரும் கரைந்துபோகுமே!.
:(((((

முஸ்லிம் said...

அன்று கேட்டது

கேள்வி: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்டக்கூடாது என்று காஞ்சி சங்கராச்சாரி கூறியுள்ளார். இதைப்பற்றி தங்கள் கருத்தென்ன?

பதில்: இந்த சங்கராச்சாரிகள் தான் நாட்டைத் துண்டாடுகிறவர்கள். தேச ஒற்றுமையிலோ ஒருமைப்பாட்டிலோ இவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது.

('இனி' சனவரி 93 மாத இதழிலிருந்து ராம்விலாஸ் பஸ்வன் பேட்டி)

லக்கிலுக் said...

//இந்த சங்கராச்சாரிகள் தான் நாட்டைத் துண்டாடுகிறவர்கள். தேச ஒற்றுமையிலோ ஒருமைப்பாட்டிலோ இவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது.//

வாஸ்தவம் தானே?

முஸ்லிம் said...

//வாஸ்தவம் தானே?//

லக்கி லுக் சார் இது உங்களுக்கு தெரிஞ்சா சரி. உங்கள் வரவுக்கு நன்றி.

மரைக்காயர்
கோவி. கண்ணன்
தமிழ் மகன்
நல்லடியார்
கருத்து
ஸயீத்
உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றிகள்.

-முஸ்லிம்

tamilreber said...

That poem insults women.Are you not ashamed to praise it.

முஸ்லிம் said...

//இதனைப் பிரசுரிக்க நீர் வெட்கப்படவில்லையா?//

வெட்கம் மட்டுமில்லீங்கண்ணா வேதனையுடனும் பிரசுரித்தேன்.

1) செவ்வாயிலிருந்து சனி வரை தோஷங்களை காரணம் சொல்லி தகுதியுள்ள பெண்ணின் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாக்கிட சம்பந்தப்பட்டவர்கள் வெட்கப்படவில்லை.

2) வரதட்சணை சீர் கேட்டு அலையும் கையூட்டு கூட்டமும் பெண்ணாக பிறந்த பாவத்திற்காகவும் பெண்ணைப் பெற்ற பாவத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் பிடுங்கி தின்னும் கணவன் மாமானார் மாமியார் நார்த்தானார் கொழுந்தன்கள் வெட்கப்படுவதில்லை.

3) பெண்குழந்தையை பெற்றெடுத்தால் பீடை என்று திட்டி, தன்னைப் பெற்றவளும் ஒரு பெண்ணே என்பதை மறந்து சதாகாலமும் இழிவுபடுத்தும் ஆண்கள் வெட்கப்படுவதில்லை.

4) சானியா மிர்சா தொடை தெரிய ஆடினால் பெண்ணுரிமை என்று போலி சித்தாந்தம் பேச சிலர் வெட்கபடுவதில்லை.

5) கல்லானாலும் கனவன் புல்லானாலும் புருஷன் என்று கணவன் கொடூரனாக இருந்தாலும் அவனோடே வாழ்ந்து இறந்த பின் சதி எனும் உடன்கட்டை ஏறச் சொல்பவர்கள் வெட்கப்படுவதில்லை.

இதுக்கெல்லாம் மேலாக வெள்ளி திரையிலும் விளம்பரங்களிலும் பேர்வழிகள் மாதரை அரை குறையாக்கிட வெட்கப்படவில்லை.

இப்படி வெட்கப்பட ஆயிரம் விஷயங்கள் இருக்குங்கண்ணா. எடுத்து சொன்னா ஆண் வர்க்கமே வெட்கத்தால் தலை குனியனும்.

ஆமா..... வெட்கப்படும்படியா அப்படி என்ன ஓய் இந்த வரிகளில் இருக்கு?

உங்க கேள்விக்கு நன்றிங்கண்ணா.

-முஸ்லிம்

ஜும்பலக்கா said...

//tamilreber said...
That poem insults women.Are you not ashamed to praise it.//

தமிழ் ரெபர் அப்படின்னு பேர வச்சுக்கிட்டு ஒரு தமிழ் வலைப்பதிவுல ஆங்கில மொழியில பின்னூட்டம் எழுத இந்த அம்பிக்கு வெக்கமா இல்லயாக்கும்!

அட்றா சக்கை said...

//Are you not ashamed to praise it. //

Tamilreber னு பேர் வெச்சிக்கிட்டு இங்கிலீஸ்ல பினாத்தும் உமக்கு வெட்கமாக இல்லை?