Wednesday, July 18, 2007

வாழ்க பாரதம்!மதசார்பற்ற பாரதநாடு வாழ்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

06.சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் "கிடா' வெட்டி பூஜை: விபத்து, கொலையை தவிர்க்க "கிடா ரத்தம்' தெளிப்பு

சங்ககிரி: சங்ககிரி போலீஸ் எல்லைக்குள் அடிக்கடி நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர்.

சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், சமீப காலமாக கொலை, வாகன விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. 15க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதை தடுக்க எண்ணிய சங்ககிரி போலீசார், கிடா வெட்ட ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவில் போலீஸ் ஸ்டேஷன் முன் மஞ்சள், அருகம்புல், கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். அங்கு கிடா வெட்டி, வாசலில் ரத்தத்தை விட்டு, அதன் மீது மண்ணை தூவி மறைத்தனர். கிடா ரத்தம் ஸ்டேஷனை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கிடாவை சமையல் செய்து, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விருந்து பரிமாறினர். இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, எஸ்.ஐ., வெங்கடேசன், பன்னீர்செல்வம், ஏட்டுகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், கிடா விருந்து உண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

------------------------------------------

மொத்த இந்தியாவிலும் காவல் துறையை சுத்தமாக தூக்கி, துடைத்தெறிந்து விட்டு, பேசாமல், ஆட்டு ரத்தத்தைத் தெளித்தே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாமே என்ன நாஞ்சொல்றது?

10 comments:

Senthil Alagu Perumal said...

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை எந்த மதத்தில் தான் இல்லை. இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் இதோ

1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.
2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!
3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க‌ கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.
5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!

இவைப் போன்ற பல மூட நம்பிக்கைகள் உள்ளன.

இப்படி பல மூட நம்பிக்கைகள் உள்ள நீங்கள் (இஸ்லாமியர்கள்) இந்து மதத்தின் மூட நம்பிக்கைப் பற்றி சொல்ல எந்த தகுதியும் கிடையாது!!

மரைக்காயர் said...

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்பட்டது தமிழக காவல்துறை என்பார்கள். ஸ்காட்லாந்திலும் இப்படித்தான் கிடா வெட்டி 'குற்றத் தடுப்பு விழா' நடத்தியிருப்பாய்ங்களோ..?

மறத்தமிழன் said...

நீங்க மெஜாரிட்டியா இருந்த உடனே அது முஸ்லிம் நாடு....மைனாரிட்டினா உடனே மதசார்பற்ற நாடு... இதுவல்லவோ முஸ்லிம்களின் மதசார்பின்மை கொள்கை!!!!

முஸ்லிம் said...

அன்பர் செந்தில் அழகு பெருமாள் உங்கள் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துக்கு விளக்கம் இங்கே எழுதியிருக்கிறேன். அதையொட்டி சில எதிர் கேள்விகளும் கேட்டிருக்கிறேன் படித்து விட்டு பதில் எழுதுங்கள்.

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கு நன்றி

//ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்பட்டது தமிழக காவல்துறை என்பார்கள்.//

இப்பொது தமிழக காவல்துறை வெத்திலையில் மை தடவி குற்றவாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் said...

மறத்தமிழன் உங்கள் வரவுக்கு நன்றி

//நீங்க மெஜாரிட்டியா இருந்த உடனே அது முஸ்லிம் நாடு.... மைனாரிட்டினா உடனே மதசார்பற்ற நாடு... இதுவல்லவோ முஸ்லிம்களின் மதசார்பின்மை கொள்கை!!!!//

மறத்தமிழன் நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மறந்த தமிழன்!

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று முஸ்லிம்களாகச் சொல்லவில்லை. இந்தியா மதசார்பற்ற நாடு என்று இந்திய அரசியல் சட்டம் அறிவிக்கிறது.

ஆனாலும் உங்கள் போன்றவர்கள் இந்தியாவை என்னவோ உங்களுக்கு பட்டா போட்ட சொத்தாக எண்ணிக்கொண்டு உறங்கி பகற்கனவில் மிதக்கிறீர்கள்.

நன்றாக கண் விழித்துக்கொண்டு இ.பி.கோ சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள். இல்லேன்னா விபரம் தெரிந்தவர்களிடமாவது கெட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

முஸ்லிம் said...

//இல்லேன்னா விபரம் தெரிந்தவர்களிடமாவது கெட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!//

எழுத்துப்பிழையை, ''கேட்டுத் தெரிந்து கொள்ளங்கள்!'' என்று வாசிக்கவும்.

மறத்தமிழன் said...

கோபிக்காதீர் ஐயா,

நீங்கள் படமும் கமெண்டும் போட்டு இந்தியாவின் மதசார்பின்மை குறித்து விளக்கினீர்...நான் ஓரிரு வரிகளில் முஸ்லிம் நாடுகளின் மதசார்பின்மை குறித்து சொன்னேன்...தப்பா சார்???

முஸ்லிம் said...

இதில் கோபப்பட என்ன இருக்கிறது அய்யா?

//நீங்கள் படமும் கமெண்டும் போட்டு இந்தியாவின் மதசார்பின்மை குறித்து விளக்கினீர்...நான் ஓரிரு வரிகளில் முஸ்லிம் நாடுகளின் மதசார்பின்மை குறித்து சொன்னேன்...தப்பா சார்???//

ஒருவர் அறியாமையால் சொல்வதை யாரும் தப்பா எடுத்துக் கொள்வதில்லை.

மறத்தமிழன் said...

நன்றி ஐயா,

என் ஞானகண்ணை திறந்து விட்ட அறிவின் ஊற்றே நீர் வாழி!

--விவரங்கெட்டவன்