Saturday, April 21, 2007

மதசார்பின்மையின் வக்கிரம்

மதசார்பின்மையின் 'வக்கிரம்'-இல.கணேசன் தாக்கு

ஏப்ரல் 21, 2007

சென்னை: பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்க முயற்சி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பொதிகை தொலைக்காட்சி ஒரு வேண்டுகோளை விளம்பரப்படுத்தி வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வருகிறது.

போட்டிக்கான தலைப்புகளைப் பாருங்கள்

1. தேசபக்தி பாடல்கள்
2. இஸ்லாமிய பாடல்கள்
3. கிருஸ்துவ மத பாடல்கள்


இதில் இந்து பக்தி பாடல்களுக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை தேசபக்தி என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் என பொதிகை டிவி நினைத்துவிட்டதோ என்னவோ

பொதிகை நிலைய பொறுப்பாளர் எவராவது தனது மத உணர்வை அல்லது மத எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியிருந்தால் அது நடவடிக்கைக்கு உரியது.

அல்லது அரசே இந்த விஷயத்தில் கொள்கைரீதியிலான முடிவை எடுத்திருக்குமானால் அது மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனை என்று தான் கொள்ள வேண்டும்.

நாடு பிளவுபட்டபோது எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் பெருவாரியாக வாழ்கிறார்களோ அந்தப் பகுதி பாகிஸ்தானாக ஆகிவிடும் என்பது அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

ஆனால், சுதந்திர பாரதத்துக்குள் உள்ள பகுதி தனியாகப் போக வேண்டுமானால் அந்தப் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நோக்கோடு சில சக்திகள் பணிபுரிந்து வருகின்றன.

ஏற்கனவே காவல்துறை அத்தகைய பகுதிகளில் இந்து ஊர்வலங்களை, பொதுக் கூட்டங்களை அனுமதிக்க மறுத்து அந்த பகுதிகளுக்கு தனி அந்தஸ்து வழங்கி வருகிறது.

இந் நிலையில் ஒட்டுெமாத்த தேசத்தின் பொருளாதாரம் குறித்து கவலைப்பட வேண்டிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 103 மாவட்டங்களில் புதிய வங்கிக் கிளைகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

இது பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி.

ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.

தேர்தலில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது குற்றம். ஆனால், உபி தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அைமச்சர் சைபுதீன் சோஸ் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதாக உறுதி தந்து வாக்கு கேட்டது மதசார்பின்மையா அல்லது மத சார்பின்மையின் வக்கிரமா

பொது மக்கள் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் இல.கணேசன்.

நன்றிங்க

//இது பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி.//

எபா முடியலப்பா :(((

8 comments:

நண்பன் said...

Muslim,

What Ila.Ganesan had questioned is technically correct!

When Songs can be called for Islam / Christianity, then the same could have been done to Hindu also.

Now, all those Hindus will call their songs as "Patriotic Songs"? That may not be correct. And proper representation should be given to Hindus also and "Patriotic Songs" should have been common to all Indians.

Otherwise, Ila Ganeshan & Co tomorrow will claim that all Hindus are patriotic by virtue of their birth and others need to prove as when they preferred to call us to prove our credentials.

(Again Ekalappai problem - If possible give a translation - or I would do so tomorrow)

முஸ்லிம் said...

நண்பனின் ஆங்கில பின்னூட்டத்தின் தமிழாக்கம்.

முஸ்லிம்,

இல.கணேசன் சொன்னது ஒரு வகையில் சரிதான்.

இஸ்லாமிய/கிறிஸ்தவப் பாடல்களுக்கான அழைப்பு விடப்பட்டபோது, இந்துப்பாடல்களும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம்.

'தேசபக்திப் பாடல்கள்' என சில இந்துக்கள் தமது பாடல்களையே அழைத்துக் கொள்வர். அது சரியன்று. எனவே இந்துப் பாடல்களுக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் தரப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான 'தேசபக்திப் பாடல்களுக்கும்' அழைப்பு விட வேண்டும்.

இல்லையேல் இல.கணேசன் & கோ நாளை எல்லா இந்துக்களும் பிறப்பினடிப்படையில் தேசபக்தி கொண்டவர்கள் என்றும் பிற மதத்தினர் தங்களின் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்றும் சொல்லுவர்.

(இ-கலப்பை சிக்கல் முடிந்தால் மொழிபெயர்த்துப் போடவும் அல்லது நாளை நானே செய்கிறேன்)

CAPitalZ said...

///ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.///

அட இது உண்மையா?
கட்டாயம் தமிழீழம் இந்தியா மாதிரி வரக்கூடாதுப்பா..

________
CAPitalZ

நல்லடியார் said...

//ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது//

இல.கணேசன் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையாக இருந்திருந்தால் சங்பரிவாரங்கள் சும்மா விடுவார்களா?

விவசாயப் பகுதிகளில் நகைக்கடன்களுக்கு ஒரே மாதிரியாகத்தான் வட்டி வசூலிக்கிறார்கள். விவசாயக் கடன்களுக்கு மற்ற கடன்களைவிட குறைந்த வட்டியே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் நகைக்கடன்கள் எல்லாமே விவசாயக் கடன்களாக (ஆவணங்களின்படி) வழங்கப்பட்ட போதும் பொதுவான வட்டி விகிதமே வசூலிக்கப் படுகிறது.

தேர்தல் சமயங்களில் விவசாயக் கடன்களுக்கு வட்டியையும் சிலசமயம் அசலையும் தள்ளுபடி செய்யும் மத்திய-மாநில அரசுகள் நகை ஈட்டின்பேரில் முஸ்லிம்கள் வாங்கிய விவசாயக் கடன்களுக்கு இச்சலுகை வழங்குவதில்லை.

உண்மையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் விவசாயப் பகுதிகளில் இயங்கும் வங்கிகளில் அதிகமாக முதலீடு செய்வதும், வெளிநாட்டுப் பணத்தை வங்கிப் பரிவர்த்தனை செய்வதும் வெளிநாட்டில் உழைக்கும் முஸ்லிம்களே.வங்கிகள் இவர்களின் முதலீட்டையே கடனாகக் கொடுக்கும் போது அதிக வட்டி வசூலிக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை!

சாதாரண மணல் திட்டுக்களையே ராமர்பாலம் என்று கதைகட்டியவர்கள் இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள்.

//பொதிகை நிலைய பொறுப்பாளர் எவராவது தனது மத உணர்வை அல்லது மத எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியிருந்தால் அது நடவடிக்கைக்கு உரியது.

அல்லது அரசே இந்த விஷயத்தில் கொள்கைரீதியிலான முடிவை எடுத்திருக்குமானால் அது மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனை என்று தான் கொள்ள வேண்டும்.//


மதசார்ப்பற்ற?அரசு அலுவலகங்களில் இந்துமதக் குறியீடுகளை வைத்தும், சரஸ்வதி/ஆயுத பூசை என்று மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் / அலுவலகங்கள் பற்றியும் இல.கணேசன் வாய்திறந்து தங்களுக்கு வக்கிர சிந்தனை இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும்.

pulan said...

நல்லடியார்!

நன்னா ஸொன்னீங்க போங்கோ

முஸ்லிம் said...

நண்பன் உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிகள்.

//இல்லையேல் இல.கணேசன் & கோ நாளை எல்லா இந்துக்களும் பிறப்பினடிப்படையில் தேசபக்தி கொண்டவர்கள் என்றும் பிற மதத்தினர் தங்களின் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்றும் சொல்லுவர்.//

இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே :)

முஸ்லிம் said...

CAPitalZ எங்கள் வரவுக்கு நன்றி.

//ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.//

வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் முஸ்லிம்களுக்கு இந்துக்களை விட வட்டி விகிதம் குறைத்து வசூலிக்கப்படுகிறது என்பது எனக்கும் புதிய செய்தி.

சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கியிருக்கிறோம் என்று நாளை சொல்லிக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களுக்கான
தூண்டிலாகவும் இது இருக்கலாம்.

முஸ்லிம் said...

நல்லடியார் உங்கள் வரவுக்கும் சூப்பர் கருத்துக்கும் நன்றிகள்.

முடிந்த வரை பின்னூட்ட கயமைத்தனம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். :-)

//மதசார்ப்பற்ற?அரசு அலுவலகங்களில் இந்துமதக் குறியீடுகளை வைத்தும், சரஸ்வதி/ஆயுத பூசை என்று மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் / அலுவலகங்கள் பற்றியும் இல.கணேசன் வாய்திறந்து தங்களுக்கு வக்கிர சிந்தனை இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும்.//

வழிமொழிறேனுங்க.