Wednesday, April 11, 2007

பாரம்பர்யச் சின்னம்.

ராமர் பாலம் இடிப்பை தடுக்க பாஜக போராட்டம்

ஏப்ரல் 11,2007

சென்னை: சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதை தடுக்க மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவோம் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம நடத்தி வருகிறது. இதை இல.கணேசன் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியாசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கணேசன்,

ராமர் பாலம் தமிழகத்தின் பழமையான பாரம்பரிய சின்னம். உலக நாடுகள் தங்கள் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க கோடிக் கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் அதை அழிக்க முயன்று வருவதை அனுமதி முடியாது .

இந்த திட்டத்தை நிறைவேற்ற பாரதீய ஜனதாவும விரும்புகிறது. ஆனால் இதன் மூலம் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

இதை தடுக்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு ராமர் பால பாதுகாப்பு இயக்கத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்து இயக்கங்களும் முழு ஆதரவு கொடுக்கும் என்றார்.

நன்றிங்க

அடடா...! பாரம்பர்ய சின்னத்தைப் பாதுகாப்பது பத்தி இவங்கெல்லாம் பேசலாமா? பாரம்பர்ய சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமுமாகிய பாபர் மஸ்ஜிதைக் காக்கவும் போராடுவீங்களா சாமி?

1 comment:

நல்லடியார் said...

முஸ்லிம்,

நீங்க ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எது கலாச்சாரம்? எது பாரம்பர்யம்? எது தேசபக்தி என்றெல்லாம் தீர்மானிக்கும் ஏகபோக ஜனநாயக உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு! உதாரணமாக,

1) எங்கள் நாக்பூர் தலைமையகத்தில் கடந்த 4-5 வருடங்களாக காவிக்கொடியுடன் தேசியக் கொடிக்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். அதேபோல், முஸ்லிம்களாகிய நீங்களும் வணக்கம் செலுத்தி பெரும்பான்மை இந்துக்களின் நன்மதிப்பைப் பெற்று நாங்கள் எப்போதாவது கொடுக்கும் மானியங்களைப் பெற்றுக் கொண்டு விருப்பப்பட்டால் இங்கு இருக்கலாம். அல்லது பாகிஸ்தானுக்குப் போகலாம் என்ற உரிமை மட்டுமே உங்களுக்கு உண்டு!

2) இந்திய முஸ்லிம் பெண்களை பர்தா போன்ற அநாகரிகச் சின்னங்களால் அடக்கப்படுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! அதனால்தான் தேசபக்தி வீறிட்டு எழுந்த எங்கள் குஜராத் பரிவாரங்கள் இந்தக் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் அப்பெண்களை உயிருடன் எரித்துக் கொன்றார்கள். பெண்ணை தெய்வமாக வணங்கும் இந்தியக் கலாச்சாரத்தில் முஸ்லிம் பர்தா போட்டு மூடிவைப்பதை ஏற்க முடியாது.

3) ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தவிஹார்களை மதசகிப்புத்தன்மையற்ற தாலிபான்கள் இடித்துத் தள்ளினார்கள். இந்தியராகிய புத்தர் முஸ்லிம் தாலிபான்களால் இழிவுபடுத்தப்பட்டதை மறக்க முடியுமா? அதனால்தான் தேசபக்தி முற்றிய எமது பரிவாரங்கள் இந்தியாவின் அவமானச்சின்னமாகிய பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.

4) ராமர் பாலத்தால் இந்தியராகிய புத்த பெருமானை தெய்வமாக வணங்கும் சிங்களர்களுடன் கலாச்சார, பாரம்பர்ய உறவை வலுப்படுத்த முடியும். அகண்ட பாரதக் கனவு நினைவாக வேண்டுமென்றால் ராமர் பாலம் மூலம் இலங்கையை இணைப்பது அவசியம். அசுரர்களின் வாரிசுகளாகிய தமிழர்களும், தமிழ்நாட்டு திராவிட அரசியல்வாதிகளும்தான் ராமர் பாலத்தைப் பற்றிய கவலையின்றி சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அவசரப்படுகின்றனர்.

இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்களைக் காக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு பாரம்பர்யக் காலாச்சார, பண்பாடுகளின் ஒரே காவலர்களாகிய எங்களுக்கு இருப்பதால்தான் சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்க்கிறோம்.

இவற்றைப் புரிந்து கொண்டு இந்துக்களின் நன்மதிப்பைப் பெற்று இந்தியாவில் இருப்பதாக இருந்தால் இருங்கள். இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள்!

இப்படிக்கு
அகில உலக & பிரபஞ்ச பாரதிய ஜனதா