Tuesday, March 25, 2008

மதம் மாறிய இஸ்லாம் தலைவர் (!?)

Sunday, 23 March, 2008 11:10 AM
.
வாடிகன், மார்ச் 23: இத்தாலியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்ட வாடிகனில் நடைபெற்ற விழாவில் மதம் மாறிய அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.
.
மக்தி அல்லாம் என்ற அந்த இஸ்லாமிய தலைவர் பத்திரிகை ஒன்றில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விமர்சித்து அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதன் காரணமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் வாடிகனில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறினார். அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.

அல்லாமுடன் சேர்ந்து மேலும் 6 இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
எகிப்தில் பிறந்த அல்லாம் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க

//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.//

ம்ம்ம்...

ஆள் யாருன்னு இப்போ வெளங்குது!

4 comments:

மரைக்காயர் said...

தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று சொல்றவர் எப்படிங்க இஸ்லாமிய தலைவரானாரு? ஒன்னும் வெளங்கலியே!!

Asalamsmt said...

தலைப்பை பார்த்த உடன் சூப்பர் தலைப்பா இருக்கே என்று பார்த்தால் பூ... என்று ஆகி விட்டது. எகிப்து தேசத்தில் ஏறத்தாழ அரபி தாய் மொழி பேசும் கிருத்தவர்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்றும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.//

சூப்பர் அரிவாளை போட்டு உள்ளார்.

புரிந்தது நமக்கும்.

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கு நன்றி.

//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று சொல்றவர் எப்படிங்க இஸ்லாமிய தலைவரானாரு? ஒன்னும் வெளங்கலியே!!//

முதல்ல அவரு எப்படி முஸ்லிமனாருன்னு கேளுங்க...!

யாரோ சாலையில் போன மாற்று மத ஆளைப் பிடிச்சி அவரை முஸ்லிம்னு எண்ணி பேட்டி ஏடுத்திருக்காய்க. அவரு கடைசியில நான் முஸ்லிம் இல்லைன்னு உடைச்சிட்டார்

அவ்வளவு தான் மேட்டர்.

முஸ்லிம் said...

aslam உங்கள் வரவுக்கு நன்றி.

யாரோ ஒரு நஸ்ரானியை முஸ்லிம்னு ஏமாத்தியிருக்காய்ங்க.