Tuesday, February 06, 2007

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது??!!

விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!

செவ்வாய், 06 பெப்ரவரி 2007

அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாக அறிவித்துள்ளார். இறைவனின் புறத்திலிருந்து உதவி செய்யப்பட்ட விவேகம் மிக்கவர் என்ற பொருள்படும் "ஹக்கிம் மன்சூர்" என்ற அழகிய பெயரை மேகான் நகர இஸ்லாமிய மையத்தின் இமாம் ஆதம் ஃபோபனா அவர்கள் தேர்ந்தெடுத்து இவருக்குச் சூட்டியுள்ளார்.

வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.

உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.

90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.

ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை
என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.

அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

நன்றிங்க

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா.....? ஆம்??!!
சதாம் ஹுசைன் வாள் முனையில் ஜாக் எல்லிஸை ஹக்கிம் மன்சூராக மதம் மாற்றி விட்டார் - இதையும் நம்புங்கள்.

27 comments:

மரைக்காயர் said...

தகவலுக்கு நன்றி முஸ்லிம் அவர்களே.

//அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும்..//

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் இதுபோல இஸ்லாத்திற்கு எதிரான துவேஷ பிரச்சாரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதயெல்லாம் மீறி ஜாக் எல்லிஸ் போன்ற சகோதரர்கள் சத்தியத்தை அறிந்து கொள்கின்றனர்.

bala said...

//இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது??!! //

முஸ்லிம் அய்யா,
வேறு எங்கேயோ தெரியாது;ஆனால் இந்தியாவில், கண்டிப்பாக வாளால் பரப்பப்படவில்லை அய்யா.கஜ்னி,கோரி போன்ற தாடிக்கார கும்பல் படையெடுத்து வந்து ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தனர்.அப்போது பிறந்த குழந்தைகள் பிறக்கும் போதே தாடியோடு பிறந்து தமது மதத்தை தேர்ந்தெடுத்தன.இது தான் உண்மை.

பாலா

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இதையும் வாசியுங்கள்...

அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!

உலகமெங்கும் தனி மனிதராக குழுக்களாக இஸ்லாத்தில் இணைந்து வருகிறார்கள். இவர்களை வாளால் பணிய வைத்தது யார்???

முஸ்லிம் said...

பாலா அய்யா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

என்ன செய்ய?
உங்க கும்பி கொதிப்பை இப்படித்தான் மண்ணள்ளிப் போட்டு மூடிக் கொள்கிறீர்கள்.

வியாதி said...

முஸ்லிம்..

வாளால் இஸ்லாம் பரவவில்லை என்ற அரிவாளை இங்கே போட்டு அவாள்-களின் வாளில் ஸாரி.. வாயில் மீண்டும் ஆப்படித்ததற்கு நன்றி!

மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்தைத் தழுவுவர்களின் சதவீதம் அதுவும் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கையைக் கண்டு பீதியடைந்திருப்பவர்களுக்கு இப்படியா எரிச்சலூட்டுவீர்கள்?

படையெடுத்து வந்து... போன்ற அரதப்பழசான டயலாக்கெல்லாம் சாயம் வெளுத்து நீண்ட நாள் ஆகிவிட்டது பாலாவுக்கு தெரியாததை நினைத்தால் வாயால் சிரிப்பு வரவில்லை எனக்கு.

கரு.மூர்த்தி said...

என்னது , வாளா ? எந்த காலத்திலிருக்கிறீர்கள் ,

இப்போது வெடிகுண்டுகளால் மட்டுமே இஸ்லாம் பரப்பபடுகிறது .

கரு.மூர்த்தி .

முஸ்லிம் said...

//படையெடுத்து வந்து... போன்ற அரதப்பழசான டயலாக்கெல்லாம் சாயம் வெளுத்து நீண்ட நாள் ஆகிவிட்டது பாலாவுக்கு தெரியாததை நினைத்தால் வாயால் சிரிப்பு வரவில்லை எனக்கு.//

அட... என்னதான் சாயம் வெளுத்து வெளிறிப் போனாலும் மறுபடியும் புது சாயத்தை ஏத்திக்கிறவங்கதானே நம்ம பாலா அய்யா.

வியாதி சார் உங்க வரவுக்கு நன்றி சரியான சுட்டியை தந்ததுக்கும் நன்றிகள்.

முஸ்லிம் said...

கரு உங்கள் வரவுக்கு நன்றி.

//என்னது , வாளா ? எந்த காலத்திலிருக்கிறீர்கள் ,

இப்போது வெடிகுண்டுகளால் மட்டுமே இஸ்லாம் பரப்பபடுகிறது .//

என்னா கரு ஜோக்கடிக்கிறீங்களா?

அன்று வாள் என்று சொன்னதும் உண்மையில்லை.

இன்று வெடிகுண்டுகள்னு சொல்றதும் உண்மையில்லை. ஏன்னா எதற்காக மதமாறினார்கள் என்பதை மாறியவர்கள் தெளிவாக சொல்கிறார்கள் அதனால்.....

இனி உங்கள் புரட்டல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

MOHAMED said...

Ayya ,

Islam enbhathu oru nalla markkamey thavira veru illau......

Regards
Ibrahim...

சுல்தான் said...

//இப்போது வெடிகுண்டுகளால் மட்டுமே இஸ்லாம் பரப்பபடுகிறது//

கரு.மூர்த்தி! குண்டு வெடித்ததால் எத்தனை பேர் பயந்து இஸ்லாத்துக்கு வந்தார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா? இல்லையென்றால் வாலை சுருட்டிக் கொண்டு...ங்கள்.

ஸ்ரீசரண் said...

//படையெடுத்து வந்து... போன்ற அரதப்பழசான டயலாக்கெல்லாம் //

இந்த டயலாக் அரதப்பழசானது தான். உங்கள் குரானும் கூட தான் அரதப்பழசானது.. அதை இன்னும் ஏன் பிடித்து கொண்டிருக்கிறீர்கள்.
அநியாயம் என்றுமே அநியாயம் தாம்.. பழசாகிப்போனதால் அது நியாயமாகி விடாது
இந்தியாவில் இஸ்லாம் கத்தி முனையால் தான் பரப்பப்பட்டது...
இதை மறுப்பவர் யாரேனும் உண்டா???

அபிவிருத்தி said...

தகவலுக்கு நன்றி முஸ்லிம் சகோதரா..

சகோதரர்கள் பாலா, கரு.மூர்த்தி போன்றவர்கள் சுயமாக சிந்தித்து எதையேனும் பேச, செய்ய பழகி கொள்ள வேண்டும். ஆண்டான்டு காலமாக இந்திய முஸ்லிம்கள் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை அப்படியே எதிரொலிப்பது சிந்தனையாளர்களுக்கு அழகல்ல.

ஒரு வாதத்திற்கு வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும் வாளைக்காட்டி இஸ்லாத்தை பரப்பியவர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகும் இஸ்லாத்தை தழுவியவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலேயே இருந்ததற்கான அர்த்தம் என்ன?

மனம் தொடர்பில்லாத மத மாற்றமாக இருந்திருந்தால் மற்றவர்களின் அச்சுறுத்தல்தான் காரணம் என்றிடலாம், இது அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் இல்லாத தெளிவான மன மாற்றமாக இருப்பதனாலேயே இன்றளவும் இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள்/இணைந்திருக்கிறோம்.

பிறப்பின் அடிப்படையில் மனிதனை ஏற்றத்தாழ்வு பார்க்கும் ஒரு சித்தாந்தத்தின் பலவீனத்தை மறைக்க கண்மூடித்தனமாகவும், பிறருடைய பார்வையில் சிந்தனையற்ற ஒரு வாதமாகவும் தெரியும் வன்னம் நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம் said...

சிரீசரண் உங்கள் வரவுக்கு நன்றி.

அல்குர்ஆன் மிக பழசாகிப் போனாலும் உலகின் மூன்றில் ஒருபங்கு மக்களை வழி நடத்தும் வேதநூலாக இன்றும் பிரகாசிக்கின்றது.

குரானை அரதப்பழசானது என்பது ஒருவித காழ்ப்பு. வேண்டுமானல் அல்குரானுக்கு நிகரான இன்னொரு வேதநூலை காட்டலாமே.

மிகவும் சிறுபான்மையினராக இருந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தை கத்தியை காட்டி மிரட்டி மதம் மாற்றினார்கள் என்று சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது. இது நம்பகத்தன்மையான டயலாக் இல்லை.

இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு பொறுக்காத பொறாமை பீடித்தவர்கள் கட்டிய கதை இந்த கத்தி மேட்டர். ஒரு பொய்யை மறுபடி மறுபடி கத்திக் கத்திச் சொன்னாலும் அது உண்மையாகிவிடுமோ

எதுக்கும் வியாதி சார் கொடுத்த சுட்டி மீண்டும் ஒருதரம் படித்து விட்டு விவரமா எழுதுங்கள். அதன் பிறகு ''மறுப்பவர்கள் யாரேனும் உண்டா?'' என பார்க்கலாம்.

முஸ்லிம் said...

அபிவிருத்தி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீசரண் said...

இந்திய நாட்டையே ஆண்டவர்கள் சிறுபான்மையினரான முஸ்லீம் மக்களே. ஆள்பவர்கள் மக்களை மிரட்டுவது மிக சாதாரண காரியம். அற வழியில் பரப்பப்பட்டது புத்த மதம் மட்டுமே. ஒளரங்கசீப்பும் இன்ன பல முஸ்லீம் மன்னர்களும் அன்பின் வழியில் அற வழியில் இஸ்லாத்தை போதித்தார்களா?. பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது அற வழியிலா?

//இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு பொறுக்காத பொறாமை பீடித்தவர்கள் கட்டிய கதை இந்த கத்தி மேட்டர்//

இங்கு வளர்ச்சி என்று எதை சொல்கிறீர்கள்?. பன்றிகள் போல பெற்றுப்போட்டு தன் மதத்தவரின் எண்ணிக்கையை அதிகரிப்பதையா??

முஸ்லிம் said...

//பன்றிகள் போல பெற்றுப்போட்டு தன் மதத்தவரின் எண்ணிக்கையை அதிகரிப்பதையா??//

அருமையாக நிரூபித்துள்ளீர்கள் நீங்கள் பொறாமை பீடித்தவர் என்று.

கரு.மூர்த்தி said...

//இங்கு வளர்ச்சி என்று எதை சொல்கிறீர்கள்?. பன்றிகள் போல பெற்றுப்போட்டு தன் மதத்தவரின் எண்ணிக்கையை அதிகரிப்பதையா??//

உண்மையை செருப்பால் அடித்தது போல் சென்னீர்கள் , நன்றி ஸ்ரீசரண்

கரு.மூர்த்தி

ஸ்ரீசரண் said...

இதற்கு நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்..பொறாமைப்பட வேண்டிய விசயமும் இல்லை. உண்மையில் வேதனைப்பட வேண்டிய விசயம்...

முஸ்லிம் said...

கரு.மூர்த்தி உங்கள் மீள் வரவுக்கு நன்றி.

//உண்மையை செருப்பால் அடித்தது போல் சென்னீர்கள் , நன்றி ஸ்ரீசரண்//

ஆம் உண்மைதான்,
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என ஒப்பாரி வைப்பவர்களை உண்மையிலேயே செருப்பால் அடித்தது போலுள்ளது இந்த பதிவு.

ஸ்ரீசரண் said...

//ஆம் உண்மைதான்,
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என ஒப்பாரி வைப்பவர்களை உண்மையிலேயே செருப்பால் அடித்தது போலுள்ளது இந்த பதிவு.//

நீங்களே உங்கள் பதிவை மெச்சிக் கொள்ள கூடாது. நாங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் மத பாணியில் அல்லாமல் ( வன்முறை ) பதில் சொல்லுங்கள் பார்ப்போம்

முஸ்லிம் said...

//நீங்களே உங்கள் பதிவை மெச்சிக் கொள்ள கூடாது. நாங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் மத பாணியில் அல்லாமல் ( வன்முறை ) பதில் சொல்லுங்கள் பார்ப்போம்//

சிரீசரண்,
உங்களுக்கு எந்த கேள்விக்கு பதில் வேண்டும்?

ஸ்ரீசரண் said...

//சிரீசரண்,
உங்களுக்கு எந்த கேள்விக்கு பதில் வேண்டும்? //

கேள்வி 1: இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டது எதன் அடிப்படையில்??

கேள்வி 2: கடவுள் கொடுத்த கொடை என்று இஷ்டத்திற்கு குழந்தைகளை பெற்று தள்ளுவது எதன் அடிப்படையில்??

கேள்வி 3: உங்கள் மதத்தின் குறைகளை யாராவது சொல்ல நேர்ந்தால் அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது எதன் அடிப்படையில்?? (உ.ம் சல்மான் ருஷ்டி & தஸ்லிமா)

பதில் சொல்ல முடியுமா??

முஸ்லிம் said...

//கேள்வி 1: இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டது எதன் அடிப்படையில்??//

கல்வியில் காவியைப் புகுத்துவது இந்துத்துவ பாசிச கொள்கையாக இருக்கிறது. இந்துத்துவம் ஆட்சியில் இருந்த போது திட்டமிட்டு வரலாற்று பாட நூற்களில் உண்மைகளை மாற்றி திரிபுகளை கையாண்டு கையும் களமாக மாட்டிக் கொண்டது. ''முனைவர் மங்கள முருகேசன்''

சுதந்திர இந்தியாவுக்கு பிறகு கல்விப் பாட நூற்களில் காவித்துவம் தனது கைவரிசையை காட்டியிருக்கிறதே சுதந்திர இந்தியாவுக்கு முந்தியுள்ள வரலாறுகள் இந்துத்துவத்தால் எப்படியெல்லாம் கறைபடுத்தப்பட்டிருக்கும்.

ஐயம்-2: இஸ்லாமியர் படையெடுத்து வந்து இந்து கோயில்களை இடித்து சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் இருக்கின்றதே?

கஜினி முஹமது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்கு பாடநூல்கள் சொல்லியுள்ளன. இல்லையா?

இந்தியாவில் கோயில்கள் என்பது சாமி கும்பிடுகின்ற இடம் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக்களஞ்சியங்களாகவும் அவை திகழ்ந்தன. இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டை மன்னர்கள் நடத்திய போர்கள் பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டவைதான்.

இந்த அடிப்படையில்தான் கஜினிமுஹம்மது படையெடுத்ததும்.

கோயிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னர்களை கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்ணாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த இஸ்லாமிய மன்னனும் தனது எல்லைக்குள் இருந்த இந்து கோயில்களையோ, தனது பாதுகாப்பில் இருந்த இந்து மன்னர்களின் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் அப்படித்தான். அவுரங்கசீப்புக்கு எதிராக சூழ்ச்சிசெய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும்தான் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மத சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்கு சென்று முப்பது ஆண்டுகள் சமய பொழிவும் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப்பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண / புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே! இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களில் இருந்த புத்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி அந்த ஊருக்கு ஜனநாத மங்களம் என்று தனது பெயரைச் சூட்டவில்லையா?

சுபதாவர்மன் (கிபி 1193 1210) என்ற பார்மரா மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமண கோயில்களை கொள்ளையிடவில்லையா?

காஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே தெய்வங்களை நிர்மூலம் செய்கின்ற அதிகாரி (தேவோத்வத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதே?

எனவே கோயில் இடிப்பு என்பதை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

(இதற்கு பதில் எழுதலாமே)

முஸ்லிம் said...

//கேள்வி 2: கடவுள் கொடுத்த கொடை என்று இஷ்டத்திற்கு குழந்தைகளை பெற்று தள்ளுவது எதன் அடிப்படையில்??//

நாமிருவர், நமக்கிருவர், அல்லது நமக்கொருவர் இந்த கு.கட்டுப்பாடு எதன் அடிப்படையில் செய்து கொள்ளப்படுகிறது?

கு.கட்டுப்பாடு அடிப்படை என்ன என்பதை நீங்கள் எழுதினால் சேர்ந்தாற்போல் பதில் சொல்லி விடலாம்.

//கேள்வி 3: உங்கள் மதத்தின் குறைகளை யாராவது சொல்ல நேர்ந்தால் அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது எதன் அடிப்படையில்?? (உ.ம் சல்மான் ருஷ்டி & தஸ்லிமா)//

மதத்தின் குறைகள் - என்ன குறைகள் என்று தெளிவுபடுத்தலாமே.

சல்மான் ருஷ்டி & தஸ்லிமா இவர்கள் இருவரும் தங்களையே விமர்சிக்க பொறுக்காதவர்கள். இவர்களால் எப்படி அவர்களின் மதத்தையே விமர்சிக்க முடிந்தது?

இவர்களுக்கு மரண தண்டனை விதித்து பெரியவர்ளாக்கி விட்டார்கள். அது உங்களுக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது.

ஸ்ரீசரண் said...

பின் வேறு எப்படி இஸ்லாம் பரவியது?.
அறசாலைகள் அமைத்து, ஆன்மீக மையங்களை ஏற்படுத்தியா மதத்தை பரப்பினார்கள்?

சமூக சேவை செய்த ஒரு முஸ்லீம் மத போதகரை கூட வரலாற்றில் காணோம்

//இவர்களுக்கு மரண தண்டனை விதித்து பெரியவர்ளாக்கி விட்டார்கள். அது உங்களுக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது.//

இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது என்ன நியாயம் என்கிறேன்?

இதற்கு பதில் சொல்லுங்கள் பிறகு அவர்கள் பெரியவர்கள் ஆனது எவ்வாறு என விவாதிக்கலாம்

நல்லடியார் said...

முஸ்லிம்,

இஸ்லாம் வாளால் பரவில்லை; அ'வாளால்களின் ஆதிக்கவெறி, அடக்குமுறை,வர்ணபேதம் ஆகியவற்றால்தான் பரவியது என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லித் தொலைத்திருக்கலாம்.

Asalam said...

//என்னது , வாளா ? எந்த காலத்திலிருக்கிறீர்கள் ,

இப்போது வெடிகுண்டுகளால் மட்டுமே இஸ்லாம் பரப்பபடுகிறது .

கரு.மூர்த்தி //.

ஆமா ஐய்யா வாளால் தான் இஸ்லாம் பரவியது என்று பேச்சுக்கு வைத்தாலும், 350 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களுக்கு முழுமை இந்தியாவையும் அந்த வாளால் மாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்து சொல்வீர்களா?