Sunday, February 04, 2007

பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை.

பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை, கலாம் மீது தாக்கரே தாக்கு.

மும்பை பிப்,4
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நடத்தை அவரது பதவிக்கு ஏற்றதாக இல்லை என சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டினார்.

மும்பை மநாகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சி தலைமையகத்தில் பத்திரிகையாளர்களிடம் தாக்கரே சனிக்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முகமது அப்சல் குருவுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், அதை நிறைவேற்றுவது தொடர்பான கோப்பு இன்னும் கலாம் மேஜையில்தான் கிடக்கிறது.

மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றி: மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனைக்கு கிடைத்த வெற்றி என்னைத் திகைப்படையச் செய்து விட்டது. இந்த வெற்றிக்கான பெருமை கட்சி நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேயையும் அவரது குழுவினரையும் சாரும் என்றார் பால் தாக்கரே.

நன்றிங்க

அட பைத்திக்காரத்தனத்துக்கும் ஒரு அளவு இல்லையா?

கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்களும் வாக்களித்தோம் என்கிறதைச் சொல்லி அதுக்காக முகமது அப்சலுக்கு உடனே தூக்குத் தண்டனை கொடுன்னு சொன்னா! மரண தண்டனை பத்தி மத்திய அரசும் சேர்ந்துல்ல முடிவெடுக்கெனும். அதுக்கு கலாம் என்ன செய்வாரு?

என்னமோ அப்சலுக்கு முந்திய வழக்குகளெல்லாம் முடிஞ்சி போயி அப்சல் வழக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்படாமல் மிஞ்சியிருக்கிற மாதிரி இந்த பைத்தியம் புலம்புதே அப்படியே கொஞ்சம் குஜராத்துக்கும் சேர்த்து புலம்பினால் பைத்தியத்திடம் உள்நோக்கம் எதுவுமில்லை என்பதையாவதை நம்பலாம்.

3 comments:

Sirajudeen said...

இதை பைத்தியம் என்று விடமுடியாது சகோதரரே. ஏன்னா இந்த பைத்தியம் மத்தவங்களை அதோட பைத்தியத்திற்கு கொண்டு வரும் வரை சும்மா இருக்காது. இதை சீக்கிரம் நம்ம கீழ்பாக்கம் ஆஸ்பத்தியில சேர்க்கனும்.

முஸ்லிம் said...

sirajudeen உங்கள் வருகைக்கு நன்றி.

வாசகன் said...

ஒரு குடியரசுத்தலைவரை பதவிக்கேற்ற நடத்தை இல்லை என்று சொல்கிற பால் தாக்கரேவுக்குத்தான் வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லை. இவரெல்லாம் நாட்டுக்கேற்ற அரசியல்வாதி இல்லை.

இத்தகைய வெறி பிடித்த அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க 'பொறுப்புள்ள' அனைவரும் முன்வர வேண்டும்.
மிடையங்கள் இத்தகைய பைத்தியக்காரத்தனமான அரசியற்போக்கை வலுவாகக் கண்டிக்கவேண்டும்.