Wednesday, February 07, 2007

அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!

ஈராக்கிற்கான தென்கொரிய அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!

திங்கள், 05 பெப்ரவரி 2007

வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற குர்திஷ் நகரத்திற்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட தென்கொரிய படைவீரர்களில் 37 பேர் அடங்கிய ஜைத்தூன் என்ற படைப்பிரிவு கூறிய கூற்றுக்கள் இவை: "மற்ற எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக மனித நேயத்தையும் அமைதியையும் போதிக்கும் காரணத்தாலேயே நாங்கள் இஸ்லாத்தைத் தழுவினோம். பயங்கரவாதம் பெருகி விட்ட ஈராக்கில் அமைதியை நிலை நாட்ட வரும் எங்கள் முயற்சிக்கு இஸ்லாமிய அடிப்படையிலான அமைப்புகள் மூலம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது"

தென்கொரியாவின் சியோல் நகரத்தின் ஹன்னம்டாங் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈராக்கிற்கான பிரத்தியேகப்படை ராணுவ உயர் அதிகாரியான ஸன் ஹியோன் ஜூ உள்பட 37 பேர் கலந்து கொண்ட ஜைத்தூன் குழு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படைவீரர்கள் இஸ்லாத்தைத் தங்கள் மார்க்கமாக தேர்ந்தெடுத்துள்ளதாக உறுதியுடன் கூறினர்.

முஸ்லிம் அல்லாத ஒரு நபர் முஸ்லிம் ஆக ஆவதற்கான இஸ்லாமிய அடிப்படை விதிகளின் படி, முதலில் தங்களைக் குளித்துப் பரிசுத்தமாக்கிக் கொண்ட படைவீரர்கள் பள்ளி இமாமின் வழிநடத்தலின் பெயரில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்" எனப் பொருள்படும், "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" என்று மொழிந்து இஸ்லாத்தைத் தழுவினர்.

இமாமைப் பின் தொடர்ந்து அனைத்து கொரிய படை வீரர்களும் தோளோடு தோள் சேர்த்து ஓரணியில் நின்று ஏகத்துவ அடிப்படையை முழங்கிய தொனியும் அந்நேரம் அவர்களின் முகங்களில் தென்பட்ட பூரிப்பும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை தந்தன.

இந்நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருகை தந்திருந்த மாற்றுமதத்தினர் சிலரும் அங்கே கண்ட சகோதரத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவ உறுதிபூண்டதை அங்கு பார்க்க நேர்ந்தது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே தாங்கள் இஸ்லாத்தைத் தழுவக்காரணமாய் அமைந்தது என்று இப்படைக்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். குழுவில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற படை வீரர் ஒருவர் கூறுகையில், "போர் சமயத்தில் கூட பெண்கள் கொல்லப்படக் கூடாது என்ற இஸ்லாத்தின் மிக உயரிய நெறியே தன்னைக் கவர்ந்தது" என்று கூறினார்.

"கல்லூரியில் அரபி மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருந்த நான், குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்த கணத்திலேயே இஸ்லாத்தின் பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அப்போதே இஸ்லாத்தினைத் தழுவுவது என்று முடிவு செய்து விட்டேன்" என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் பேக் ஸியோங்க் என்ற 22 வயது படைவீரர்.

பரவசத் துடிப்புடன் தம் எண்ணத்தை விவரித்த இவர், தான் ஈராக்குக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டால், அங்குள்ள இஸ்லாமிய குடிமக்களுடன் சகோதரத்துவம் கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட கொரியப் படைவீரர்கள் ஈராக்கை ஆக்கிரமிக்க வரவில்லை, மாறாக மனித நேயத்துடனான உதவிகளைச் செய்வதற்காகவே வந்துள்ளோம் என்ற எங்களின் குறிக்கோளை இஸ்லாம் கூறும் அழகிய போதனைகள் கொண்டு அறிவுறுத்துவோம் என்றும் கூறி முடித்தார்.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

நன்றிங்க

//இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.//

No comments: