Wednesday, January 31, 2007

இஸ்லாத்தை அழிக்க பால்தாக்கரே!!!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் - பால்தாக்கரே

புதன், 31 ஜனவரி 2007

மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.

மேலும் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தாக்கரே கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, கட்சியின் பலமான இருதூண்களான அவரின் இரு மகன்களும் சிவசேனாவிலிருந்து விலகிய பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

சிவாஜி பார்க்கில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும் பொழுது மேற்கண்டவாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை லட்சியத்தில் உறுதியான ஹிந்து என்றும் சிலாகித்துப் பேசினார். இந்த பேரணியில் வாழ்த்துரை வழங்க நரேந்திரமோடியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் தாணேயில் நடந்த மற்றொரு பேரணியில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் அவர் செய்த விமர்சனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி எனக்கருதப்படும் முஹம்மத் அஃப்ஸல் குருவிற்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத்தலைவருக்கு எதிராக குற்றம்சாட்டிய தாக்கரே தொடர்ந்து தன்னிடம் பரிசீலனைக்கு வந்த அஃப்ஸல் குருவின் கருணைமனுவை அவர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

தனது தலையில் இருக்கும் பெருமளவு முடியின் காரணமாக கருணைமனுவில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தை கலாமால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று அவரை நையாண்டி செய்த தாக்கரேயின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் குற்றம் கூறியது.

தாக்கரே நாட்டைத் துண்டாட முயல்வதாக முதிர்ந்த காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்தார். தாக்கரேயின் இந்த விமர்சனம் பைத்தியக்காரத்தனமானதும் தள்ளப்படவேண்டியதுமாகும் என NCP தலைவர் ஷரத்பவாரும் கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பவர் ஒரு தனிமனிதன் அல்லர் என்றும் அவர் இந்நாட்டின் தலைமைக் குடிமகன் என்றும் CPM தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

இந்திய இறையாண்மையின் கீழ் வசிக்கும் எவரும் அப்பதவியை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தாக்கரேயின் கலாமுக்கு எதிரான இந்த விமர்சனத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என BJP தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். அஃப்ஸல் குருவின் தண்டனையை தாமதப்படுத்துவதற்கு எதிராக தனது எதிர்ப்பை தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தான் கருதுவதாகவும் நாயுடு கூறினார்.

தேசிய அளவில் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதத்தில் தாக்கரே வெளிப்படுத்தி இருக்கும் இஸ்லாத்தை அழிக்க ஹிந்து ஒற்றுமை, ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான், குடியரசுத்தலைவருக்கு எதிரான விமர்சனம் போன்றவை அவரின் கட்சியை தேசிய அளவில் வளர்த்து எடுக்க முயலும் அவரின் அடுத்த கட்ட நாடகத் தந்திரமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. சிவசேனாவின் ஆரம்பகால கொள்கை மும்பையையும் பின்னர் மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. மஹாராஷ்டிர மாநிலத்தவர்கள் தவிர மற்ற அனைவரும்
அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து, ஹிந்துக்கள் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக படுபயங்கர அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு சிவசேனா வளர்ந்த வரலாறு உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அன்று சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே மஹாராஷ்டிர மாநிலத்தவர்களை தவிர, ஹிந்துக்கள் உட்பட மற்றவர்களை மஹாராஷ்டிராவிலிருந்து அடித்து விரட்டப்படுவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். இன்று அதே சிவசேனாவின் தலைவர் தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக மொழி-பிரதேச எல்லைகளை மறந்து ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றிங்க

அமைச்சர் அம்பிகா சோனி சொன்ன மாதிரி பால்தாக்கரேயின் விமர்சனம் பைத்தியக்காரத்தனந்தான். பைத்தியக்காரர் பத்தும் சொல்வார் இது பால்தாக்கரேயிக்கு பொருத்தமாவே இருக்கு.

ஒரு பேச்சுக்கு, இஸ்லாத்தை அழிக்க என்றே ஹிந்துக்கள் ஒன்று பட்டால், முஸ்லிம்கள் என்ன புளியங்கா பறிச்சிக்கிட்டா இருப்பாங்க...?

19 comments:

மரைக்காயர் said...

//..பால்தாக்கரேயின் விமர்சனம் பைத்தியக்காரத்தனந்தான். பைத்தியக்காரர் பத்தும் சொல்வார் இது பால்தாக்கரேயிக்கு பொருத்தமாவே இருக்கு..//

நான் சொல்லனும்னு நெனைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. நன்றி முஸ்லிம் அவர்களே.

சவூதி தமிழன் said...

இதே பால் தாக்கரே தான் சிறிது ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி இறந்ததும் தான் வணங்கும் கடவுளே வேஸ்ட் என்று பிதற்றித் திரிந்தார்.

இப்போ இப்படிப் பேசறதப் பாத்தா,'பொழக்கத் தெரிஞ்ச மனுசன்' னு தான் தோணுது.

அழகு said...

இதுக்கெல்லாம் போயி உணர்ச்சி வசப் படாதீங்க முஸ்லிம்!

பாலுதா கரே, மராத்தி பேசும் சுப்ரமண்யசாமி என்பது தெரியாதா?

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கு நன்றி

யார் சொன்னா என்னங்க?
பைத்தியம் பைத்தியந்தான்

Anonymous said...

//ஒரு பேச்சுக்கு, இஸ்லாத்தை அழிக்க என்றே ஹிந்துக்கள் ஒன்று பட்டால், முஸ்லிம்கள் என்ன புளியங்கா பறிச்சிக்கிட்டா இருப்பாங்க...?//

நல்ல கேள்வி. இதற்காகவே பால்தாக்கரேக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

நன்றி முஸ்லிம் சகோதரரே.

விரைவில் பால்தாக்கரேக்கு வயிற்றில் பால்(!)வார்க்க ஒரு பதிவிடுகிறேன்.

இறை நேசன்

முஸ்லிம் said...

சவூதி தமிழன் உங்கள் வரவுக்கு நன்றி

//இப்போ இப்படிப் பேசறதப் பாத்தா,'பொழக்கத் தெரிஞ்ச மனுசன்' னு தான் தோணுது.//

அப்போ காரிய பைத்தியம்னா சொல்றீங்க?

முஸ்லிம் said...

அதி உங்க வரவுக்கு நன்றி

//இதுக்கெல்லாம் போயி உணர்ச்சி வசப் படாதீங்க முஸ்லிம்!//

உணர்ச்சியெல்லாம் படலீங்க நேர்மையாத்தான் சொன்னேன்.

பிற மதத்தை அழிக்கத் துடிக்கும் மத வெறியரை தலைவராக்கி கொண்ட இயக்கமெல்லாம் பிறமதத்தை குத்தம் சொல்றது...

முஸ்லிம் said...

இறைநேசன் உங்கள் வரவுக்கு நன்றி

//விரைவில் பால்தாக்கரேக்கு வயிற்றில் பால்(!)வார்க்க ஒரு பதிவிடுகிறேன்.//

நல்லா குடங்குடமாய் தண்ணீர் கலக்காத பாலை மொண்டு ஊற்றுங்கள் உங்கள் ஸ்டைலில்:)

மாசிலா said...

இஸ்லாம் உலகலாவிய மதம். கிறித்துவத்தைப்போல். இதை யாராலும் அழிக்க முடியாது. இன்னும் ஆயிரம் பால் தக்கரேக்கள் பிறந்தாலும் எதையும் 'ஆட்ட' முடியாது. ஏந்தான் நீங்கள் அலட்டிக்கொள்கிறீகள் தெரியவில்லை. இது போன்ற தலைப்புகளை போட்டு பீதியை கிளப்புகிறீர். இந்தியா எந்த மதத்தினருக்கும் சொந்தமானதல்ல.

கரு.மூர்த்தி said...

// "இஸ்லாத்தை அழிக்க பால்தாக்கரே!!!"//

அப்படியாவது ஒழிஞ்சா குண்டு வைக்கராதாவது ஒழியுமே ?

( கவனிக்க , ஒழியனும்ன்னு சொன்னது மதத்தையே , மனிதர்களையல்ல )

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி

//இந்தியா எந்த மதத்தினருக்கும் சொந்தமானதல்ல.//

உங்களுக்கு தெரிஞ்ச இந்த சின்ன உண்மை கூட ஒரு இயக்க தலைவருக்கு தெரியலியே பின்னே எப்படி இவரெல்லாம் ஒரு தலைவர் அவருக்கு பின்னே ஒரு கூட்டம்?

முஸ்லிம் said...

கரு. மூர்த்தி உங்கள் வரவுக்கு நன்றி

//(கவனிக்க , ஒழியனும்ன்னு சொன்னது மதத்தையே , மனிதர்களையல்ல )//

கரு நீங்க குருவுக்கேத்த சிஷ்யருங்க :)

கரு.மூர்த்தி said...

//கரு நீங்க குருவுக்கேத்த சிஷ்யருங்க //

யாருங்க என் குரு ? (அப்சல் குரு அல்ல)

நான் ஒழியனும்னு ஆசை பட்டது பயங்கரவாத இஸ்லாமே , பால்தாகரே அல்ல .

nagoreismail said...

ஒரு காலத்தில் பேர் சொல்ல கூடாத ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் இஸ்லாத்தை ஒழிக்க (மதத்தை தான் மனிதர்களை அல்ல - என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை) திட்டம் தீட்டப்பட்டது, அப்பொழுது இஸ்லாத்தை அழிக்கவே முடியாது என்பதற்கு மூன்று காரணங்களை கண்டுபிடித்தார்கள், ஒன்று - வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை- பெரிய ஆச்சரியம் ஒரு விளம்பரம் கிடையாது, ஒரு போஸ்டர் கிடையாது, ஒரு துண்டு சீட்டு கூட கிடையாது, எங்கேயிருந்து தான் கூடுகிறார்களோ தெரியாது, அவ்வளவு அழகாக ஒன்று கூடி விடுவார்கள். இரண்டு -குரான் ஷரீஃப் - குரானை எப்படி ஒழிப்பது? இன்றைக்கு இருக்கின்ற குரான் ஷரீஃபின் அத்தனை பதிவுகளையும் அழித்து விட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு அடி கூட பிறழாத இன்னொரு பிரதி தயாராகி விடும், இல்லையா பின்னே எத்தனை ஹாபிஸ்கள் (குரான் ஷரீஃபை மனனம் செய்தவர்கள்) இருக்கிறார்கள், அவர்களை அழிக்க முடியாது (கரு.மூர்த்தி அவர்களின் கருத்துப்படி) - மூன்றாவது - ஹஜ் யாத்திரை (என்று நினைக்கிறேன்) - இதை தடை செய்ய முடியுமா? இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து விட்டு இஸ்லாத்தை ஒழிக்க முடியாது என்று முடிவிற்கு வந்தார்களாம். பால் தாக்கரே ஹிந்துக்களை ஒன்று படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை ஒழிக்கலாம் என்கிறார் - ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து பால்தாக்கரேயை ஒழித்தால் நல்லது - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

கோமாளியை மனிதனாக்க ஒரு அழைப்பு விடுத்துள்ளேன். வந்து பார்த்து அழைப்பில் ஏதாவது கூடுதலாக சேர்க்க வேண்டுமெனில் கூறுங்கள்.

அன்புடன்
இறைநேசன்

முஸ்லிம் said...

//ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும்//

//நான் ஒழியனும்னு ஆசை பட்டது பயங்கரவாத இஸ்லாமே , பால்தாகரே அல்ல//

கரு
எப்படி உங்க இருவர் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கிறது?

முஸ்லிம் said...

நாகூர் இஸ்மாயில் உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க

செங்கோடன் said...

தலைவரும், தொண்டர்களும் தினமும் சிலேட்டில் நூறு தடவையாவது இஸ்லாம் இஸ்லாம்னு எழுதி அழித்து, மறுபடி மறுபடி எழுதி அழித்துக் கொள்ளட்டம். ஒரு மண்டலம் இப்படி எழுதி வந்தால் எல்லா எரிச்சலும் குறைந்து காணப்படும்.

மரைக்காயர் said...

//செங்கோடன் said...
தலைவரும், தொண்டர்களும் தினமும் சிலேட்டில் நூறு தடவையாவது இஸ்லாம் இஸ்லாம்னு எழுதி அழித்து, மறுபடி மறுபடி எழுதி அழித்துக் கொள்ளட்டம். ஒரு மண்டலம் இப்படி எழுதி வந்தால் எல்லா எரிச்சலும் குறைந்து காணப்படும்.//

அப்படிங்கிறீங்க? தினமும் நூறு தடவை எழுதினா அதுவும் அப்படியே சிலேட்டில பதிஞ்சு போய், பிறகு அந்த எழுத்தைக்கூட அழிக்க முடியாம ஆகிடப்போகுது..