Wednesday, February 08, 2006

வாருங்கள் நண்பரே!

வாருங்கள் அரவிந்தன் நீலகண்டன்!

தமிழோவியத்தில் நல்லடியாரின் கட்டுரையில் பின்னூட்டப் பெட்டியில் இருவரும் கருத்துக்களை இட்டு வந்தோம். சம்பந்தப்பட்ட பின்னூட்டப் பெட்டியில் திடீரென்று தமிழோவியம் பெரிய பூட்டாகப் போட்டு நிரந்தரமாக மூடிவிட்டது. இப்படித்தான் நமது பின்னூட்டங்கள் துண்டிக்கப்பட்டன.

நிற்க!
திரட்டியில் இல்லாத உங்கள் வலைப்பூவை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?. சிந்தித்துப் பாருங்கள் நவம்பர் 11.2005லிருந்து, நவம்பர் 12.2005வரை சிலமணித்துளி நேரங்களே கால வித்தியாசம் இருக்கும், இதை பெருங்குறையாக எடுத்துக்கொண்டு, நவம்பர் 12வரை.. பதிலளிக்கவில்லை என்ற ஆர்ப்பாட்டம் தேவைதானா?.

முஸ்லிம்களை விட, இஸ்லாத்தின் மீது உங்களுக்கு அக்கறை அதிகம் அதனால் தமிழ்மணம் வலைப்பூவின் திரட்டிக்கு கண்டிப்பாக மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

கணினிப் பொறியோடு எனக்குள்ள தொடர்பு, அள்ளி சாப்பிடுவது போல் இல்லை, தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். நேரம் கிடைக்கும்போது தமிழோவியப் பின்னூட்டங்களின் கருத்துக்களை மீண்டும் இங்கே புதுப்பித்துக்கொள்ளலாம் சரிதானா நண்பரே?

அன்புடன்,
முஸ்லிம்

2 comments:

அட்றா சக்கை said...

வலைப்பதிய வந்திருக்கும் அன்பருக்கு வரவேற்பு.. நீங்கள் அழைத்து அவர் வருகிறாரோ இல்லையோ, தமிழ்மண முகப்பில் இப்பதிவு தெரிந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே - குத்துகள் விழுந்துள்ளன.. புரிந்து கொள்ளுங்கள் அவர்களின் உண்மையான மனநிலையை

முஸ்லிம் said...

அட்ற சக்கை உங்கள் வருகைக்கும் வரவேற்பிக்கும் நன்றி!

தமிழ் கமாண்ட்ஸ் உங்க வாழ்த்துக்கும் யோசனைக்கும் நன்றி!