சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.
'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!
நன்றிங்க - இந்தவார ஆனந்த விகடனில் டாக்டர் டி. நாராயண ரெட்டி
முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து, முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும் பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ''சுதந்திரம்'' எனும் பெயரில் மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.
முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில் நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும் மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில் மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.
நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் - நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளுங்கள்!
3 comments:
உண்மைதான். சகோதரிகளோ அல்லது மற்ற உறவினர்களோ யாராக இருந்தாலும் டிரஸ் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது மிக்க நல்லது. சொந்த கணவர் மாத்திரம் இருக்கும் தனி குடும்பத்தில் அந்த பிரச்னை இல்லைதான். இருந்தாலும் போஸ்ட்மேன்,பால்காரன்,இஸ்திரிமேன் இப்படி நாலாவது ஆட்கள் வரக்கூடிய சந்தர்பத்தில் பெண்கள் நைட்டியில் அவர்கள் முன் சென்று வருவது, அவர்களையும் வசீகரிக்கத்தான் தோன்றும். பிரச்னைகள் உருவாக காரணமாக நாம் இருக்க கூடாது அல்லவா?
நன்றி
அசலமோன்
அசலமோன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
alhamdulillah. nice article. :)
nanum oru kaalathil idhe pondru matravargalai kavaruvadharkaaga aadai alangaaram seidhaval dhaan. tharpodhu Allah nervazhi kaatti vittaan. tharpodhu hijab ai penugiren alhamdulillah :)
ennai pol matra pengalukkum Allah nervali kaatuvaanaaga. ameen :)
Post a Comment