வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற 'பாசக்கார' கணவன்!
ஜூன் 21, 2007
ஈரோடு: வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார்.
அந்தப் பக்கமாக போனவர்கள் வரதராஜனைத் தடுத்து செல்வராணியைக் காப்பாற்றினர். காயமடைந்த செல்வராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பள்ளிப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து வரதராஜனைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது.
அதாவது, மனைவி செல்வராணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் வரதராஜன். ஆனால் வரதட்சணைப் பணத்தைத் தர முடியாமல் திணறியுள்ளனர் செல்வராணியின் பெற்றோர்.
இதனால் கோபமடைந்த வரதராஜன், மனைவியை கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அவரது சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார்.
இது தொடர்பாகத்தான் வரதராஜனுக்கும், செல்வராணிக்கும் நடுத் தெருவில் சண்டை மூண்டுள்ளது. அப்போதுதான் செல்வராணியை கத்தியால் குத்தியுள்ளார் வரதராஜன்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றிங்க - Thatstamil- today
பணமாக அல்லது பொருளாக வரதட்சனை கொடுக்க இயலாதவர்கள் இனி சிறு நீரகத்தை வரன் தட்சணையாகக் கொடுக்கலாம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே...
1 comment:
முஸ்லிம்,
வரதட்சினையும் மொஹலாயர்கள் கொண்டு வந்தப் பழக்கம்தானான்னு யாராச்சும் பிரதிபா மேடத்திடம் கேட்டுச் சொல்வார்களா?
:-)
Post a Comment