Monday, June 18, 2007

அந்தோ பரிதாபம்

காந்தி பிறந்த நாள்-உலக அகிம்சை தினம்: ஐ.நா.

ஜூன் 16, 2007

டெல்லி: மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி, உலக அகிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காந்தியடிகளுக்கும், இந்தியாவுக்கும் உலக அளவில் கிடைத்துள்ள கெளரவமாக இது கருதப்படுகிறது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த தீர்மானம் தற்போது பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த நாளில் அமைதி, அகிம்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அமைதி, அகிம்சை குறித்த பாடங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.நா. பொதுச் சபையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அனந்த் சர்மா பேசுகையில்,

தீர்மானம் நிறைவேற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நன்றிங்க

காந்தியைப் படுகொலை செய்த இயக்கத்தினர் அந்தோ பரிதாபம்!

2 comments:

நல்லடியார் said...

காந்தி பிறந்த நாள்-உலக அகிம்சை தினம் என்று ஐ.நா. அறிவித்தற்குப் பாரட்டலாம். அக்டோபர்-2 ஆம் தேதி மட்டுமாவது ஈராக்கிலும் ஆப்கனிலும் அப்பாவி மக்களை 'ஹிம்சை' படுத்தாமல் இருக்க அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டால் நல்லது :-)

//காந்தியைப் படுகொலை செய்த இயக்கத்தினர் அந்தோ பரிதாபம்!//

காந்தியைப் படுகொலை செய்தவர்கள் லஷ்கரே தோய்பா அல்லது அல்காயிதா பயங்கரவாத இயக்கத்தினர் என்று LKG வரலாற்றுப்பாட புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். :-))

வரலாறு தெரியாமல் பதிவெழுத வந்துள்ள முஸ்லிமுக்குத்தான் தலைப்பு பொருந்துகிறது!

முஸ்லிம் said...

நல்லடியார் உங்க வரவுக்கு நன்றி

//வரலாறு தெரியாமல் பதிவெழுத வந்துள்ள முஸ்லிமுக்குத்தான் தலைப்பு பொருந்துகிறது!//

நான் படிக்கிறச்சே LKG எல்லாம் கிடையாதுங்க அதனல எனக்கு தெரியாம போச்சு. ம்ஹூம்... (ஒன்றுமில்லை வெறும் பெருமூச்சு)