முஸ்லிம்களில் சிலர் துரோகியென்ற சொல்லின் ஆழம் தெரியாமல் முஸ்லிம்களில் சிலரை 'இனத்துரோகிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாம் கண்டிக்கும் இந்த செயல் வெறுக்கதக்கது என்பதை இவர்கள் உணரவில்லை. அடுத்தவரை குறிவைத்து பேசப்படும் வார்த்தைகள் அந்தவார்த்தைக்கு அவர் தகுதியில்லாதவராயிருந்தால் குறிவைத்து பேசிய வார்த்தை மீண்டும் பேசியவரை நோக்கி திரும்பிவிடும் என்பதை இந்த இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்களா?
அறிந்திருந்தால் இந்த அவதூறு சொல்லை சொல்லியிருக்கமாட்டார்கள். தனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத ஒன்றை பற்றி எந்த முஸ்லிமும் பேசமாட்டான். அப்படி பேசியவன் வெறும் பெயர்தாங்கியாக இருப்பான். யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. 41:46 என்ற இறைவாக்கின்படி அடுத்தவருக்கு தீமை செய்பவர் தீமையை எண்ணுபவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். தனக்கே தீமையை எண்ணுகிறார்.
அவதூறு பேச்சின் சுடு சொல் தாளாமல் கலங்கி நிற்பவர்களின் கலக்கத்துக்கும் மனஉளச்சலக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் புண்ணியவான்களே(!?) உங்கள் இறைவனிடம் இதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறீர்கள்? எவரும் செய்யாத ஒன்றை அவதூறாக சொல்லி அவரை நோவினைப்படுத்துபவர் வெளிப்படையான பாவத்தை சுமக்கிறார் 33:58 என்ற இறைவனின் எச்சரிக்கை உங்களுக்கு விளங்காமல் போய்விட்டதா?
யாரோ முகம் தெரியாதவர் கூறிய செய்தியை சிந்திக்காமல் தீர்க்க ஆராயமல் அதை அப்படியே மறு செய்தியாக அதனினும் (இனத்துரோகிகள் என) கடுஞ்சொல்லாக வார்த்து விட்டீர்களே இதை செவியேற்றபோது இது பற்றி பேச நமக்கு தகுதியில்லை என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா 24:16
சொல்வதற்கு நிறைய இருப்பினும் சிந்திப்பவர்களுக்கு இது போதும். அவதுறு சுமத்தியவர்களே அவதூறுக்கு பரிகாரமாக என்ன செய்யப்போகிறீர்கள்? கேட்டு விடைபெறுகிறேன்.
இப்படிக்கு
முஸ்லிம்களில் ஒருவன்.
7 comments:
சோதனை + சோதனை
நிதானமான சிந்தனை.
பதிவாளரின் பெயருக்கு ஏற்றபடி.
நிறைய எழுதுங்கள். நிறுத்தாமல் எழுதுங்கள்.
இந்த பதிவிற்கு நன்றி!
//நிறைய எழுதுங்கள். நிறுத்தாமல் எழுதுங்கள்//
நஜ்லாவின் தந்தையே உங்கள் வரவுக்கு நன்றிங்க
நான் ஒரு இணைய ஆண்டி இதுலே நிறைய எங்கே எழுதுறது? போக வேலையும் இருக்கு.
//இந்த பதிவிற்கு நன்றி!//
வழக்குரைஞரய்யா உங்கள் நல்வரவுக்கும் நன்றி.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஸ்லீம் சமூகத்தில் ஆராயமல் பிறர் மீது குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது.
அன்புள்ள
அப்துல்லாஹ்
முஸ்லிமீன்
உங்கள் வரவுக்கு நன்றி.
- முஸ்லிம்
Post a Comment