Saturday, February 17, 2007

கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்.

கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்

சனி, 17 பெப்ரவரி 2007

காஷ்மீரத்து ரோஜாக்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது புதிதல்ல. ஆனால், இப்போது இதயம் இடிந்து விடும் அளவிற்கு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
எல்லை தாண்டி வரும் எதிரிகளோடு நேருக்கு நேர் மோதுவது ராணுவத்தின் கடமை. ஆனால், பரிசுகளும் பதவி உயர்வுகளும் பெறுவதற்காக அப்பாவி மக்களையே 'என்கவுன்ட்டர்' என்ற பெயரால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

என்கவுன்ட்டர் என்ற பெயரால் காஷ்மீரத்துக் குருத்துக்கள், முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட போதெல்லாம் அதனை மறுத்தனர். கொல்லப்பட்டவர்கள் கொடூர பயங்கரவாதிகள் என்று கதை கட்டினர்.

ஆனால், அண்மையில் இரண்டு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவர், அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. எனவே, கந்தகக் குழம்பாக இருந்த காஷ்மீர் மக்கள், எரிமலைச் சிதறலாக வெடித்து எழுந்தனர். அதனைத் தொடர்ந்து 'என் கவுன்ட்டர் புலிகள்' பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளோடு காஷ்மீர் காவல் துறை அதிகாரிகளும் இணைந்து, மனித உயிர்களைக் காய்ந்த சருகுகளாகக் கருதி சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பயங்கரவாதிகளைப் பந்தாடுவதற்காக அனுப்பப்பட்ட அவர்கள், காக்கிச் சட்டைகளுக்குள் புகுந்த காட்டுமிராண்டிகள் என்பதனை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

தங்கள் கிராமத்து இளைஞரைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்தது. அதன் மீது ஸ்ரீநகர் தென்பகுதி போலீஸ் எஸ்.பி. உத்தம் சந்த் விசாரணை நடத்தினார். அதற்கு மேல்நிலை அதிகாரிகள் துணை நின்றனர். ஏன்? உண்மை வெளிச்சத்திற்கு வந்தால், காஷ்மீர் வெடிக்கும் என்பதனை முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவார். ஆனாலும் அவரும் நியாயமான, நேர்மையான விசாரணை வேண்டும் என்றார்.

விசாரணை கல்லறைகளுக்குள்ளும் புகுந்தது. காணாமல் போனது ஒருவர் அல்ல, ஐவர் என்ற உண்மை வெளி வந்தது. அவர்கள் எல்லை கடந்து பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் அல்ல. அந்தக் கிராமத்துக் குடிமக்கள்தான் என்பதும் அம்பலமானது.

இந்தப் படுகொலைகள் நாட்டையே தலைகுனிய வைத்து விட்டன. மனிதாபிமானம் கடும் சோதனையைச் சந்திக்கிறது. மனித உரிமைகளை ராணுவத்தின் கறுப்பு ஆடுகளே மேய்ந்தால், யாரிடம் போய் முறையிடுவது?

என்கவுன்ட்டர் என்ற பெயரால் நடைபெறும் இந்தப் படுகொலைகள், பயங்கரவாதம் வளர்வதற்குத்தான் துணை செய்யும். 'மனித உரிமைகளைக் காப்பதில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால், கழுவ முடியாத களங்கத்தை ராணுவத்தின் கறுப்புக் குல்லாய்கள் தேடிக் கொடுத்திருக்கின்றன.

படிப்படியாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஜனநாயக முறையில் தேர்தல்களைச் சந்திக்கின்ற மக்கள், மெதுவாக தேசிய நீரோட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன பயங்கரவாதிகளின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர். குலாம் நபி ஆசாத் தலைமையில் செயல்படும் இன்றைய கூட்டணி அரசு, தமது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்யப் போகிறது.

பயங்கரவாதத்தைப் பயிர் செய்த பாகிஸ்தான், இன்றைக்கு அந்தப் பயங்கரவாதத்திற்கே பலியாகின்ற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீர் தங்களுக்கே சொந்தம் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஓசையின்றிக் கைகழுவிக் கொண்டிருக்கிறது.

போர், நாட்டின் முன்னேற்றத்தையே பொசுக்கி விடும் என்பதனை பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப் உணருகிறார். 'ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரிலும் ராணுவம் வேண்டாம். இந்தியாவின் அங்கமான காஷ்மீரிலும் படைகள் வேண்டாம். அங்கே மக்களே அரசாளட்டும்' என்று அவர் அண்மையில் கூறினார்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேசச் சமுதாயம் பாகிஸ்தானை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் பிரச்னைக்காக எந்த இஸ்லாமிய நாடும் இந்தியாவின் நட்புறவை இழக்க விரும்பவில்லை.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்தியா _பாகிஸ்தானில் அமைதி என்பது வானத்தில் போடப்பட்ட கோலமாகத்தான் இருக்கும்.

எல்லாத் துறைகளிலும் இந்தியா _ பாகிஸ்தான் உறவு அரும்பத் தொடங்கி இருக்கிறது. எல்லைகளால் பிரிக்கப்பட்ட ரத்த உறவுகள், இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வளைந்து கொடுக்காத எல்லை வேலிகள் வழிவிடுகின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரத்தப் பூக்கள் மலர்ந்த காலம் மறைந்து வருகிறது. அமைதிப் பூக்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன. இந்த அருமையான சூழ்நிலையை நாசப்படுத்தும் ராணுவத்தின் சில கரும்புள்ளிகள், 'என்கவுன்ட்டர்' என்று நாடகமாடுகின்றன. அவர்கள் செய்த மாபாதகச் செயலுக்காக நாடு தண்டனையை ஏற்க வேண்டியிருக்கிறது.

இந்தியா மீது என்ன பழிபோடுவது என்று தீவிரவாதக் குழுக்கள் காத்துக் கிடக்கின்றன. அந்தச் சக்திகளுக்குத் தீனி போடுகின்ற காரியங்களை ராணுவத்தின் ஓநாய்கள் செய்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் சில கறுப்புக் குல்லாய்களும் அவர்களுக்குத் துணை நின்றிருக்கின்றன. ராணுவத்திலும் காவல்துறையிலும் எந்த அளவிற்கு ஒழுங்கீனங்கள் ஊடுருவியிருக்கின்றன என்பதனை இந்தப் பச்சைப் படுகொலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

சென்ற ஆண்டு மணிப்பூரின் தலைநகர் இம்பாலில், உலகம் உறையும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்தது. நள்ளிரவு நேரத்தில் ஒரு வீட்டுக் கதவை ராணுவச் சிப்பாய்கள் தட்டினர். ஒரு சகோதரியை அழைத்துச் சென்றனர். தீவிரவாத இயக்கத்திற்கு அந்தச் சகோதரி உதவி செய்வதாகக் குற்றம் கூறினர்.

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சகோதரி, இரண்டு நாட்கÊளுக்குப் பின்னர், கானகத்துப் புதரில் பிணமாகக் கிடந்தார். உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள். பெண்மை பறிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கேள்வியுற்ற மணிப்பூர் மாதரசிகள் பொங்கி எழுந்தனர். தலைநகர் இம்பாலில் உள்ள மன்னர் கால அரண்மனைதான் இப்போது ராணுவத் தலைமையகம். காலைப் பொழுதில் அந்தப் பொன்மேனிச் சகோதரிகள் பிறந்த மேனிகளாய் அந்த முகாமிற்குச் சென்றனர். கதவுகளைத் தட்டினர். 'எங்களையும் கற்பழியுங்கள்' என்றனர். அதிகாரிகள் ஆடிப் போய்விட்டனர். உலகமே அதிர்ந்து போனது.

இத்தகைய கொடுமைகள், முன்னர் காஷ்மீரத்துக் கானகங்களிலும் நடந்தது உண்டு. தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவக் கட்டுப்பாடு தேவை. ஆனால், அந்தக் கட்டுப்பாடு தனிமனித சுதந்திரத்தையும் வாழ்வையும் தட்டிப் பறிப்பதாக இருக்கக்கூடாது.

இத்தகைய கொடுமைகளை விசாரிக்கும் அதிகாரம், மனித உரிமை ஆணையத்திற்கு உண்டு. ஆனால், அந்த அதிகாரம் வரையறுக்கப்பட்டவை. நடந்து போன நிகழ்வுகளுக்கு அந்த ஆணையம் நல்ல தீர்ப்பு வழங்கலாம். ஆனால், பறிக்கப்பட்ட மனித மாண்பினையும் கௌரவத்தையும் அதனால் திருப்பித் தர இயலாது.

பிரச்னைகள் பெரிதாக வெடிக்கும்போது, மணிப்பூரிலும் காஷ்மீரிலும் ராணுவச் சட்டம் தளர்த்தப்படும் என்று உறுதி கூறுகிறார்கள். ஆனால், பதற்றம் தணிந்த பின்னர், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான்.

ஆனால், இம்முறை காஷ்மீர் மக்கள் தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள். அண்மையில் நடந்த என்கவுன்ட்டர் மரணங்கள் அப்பட்டமான படுகொலைகளே என்பது அம்பலமான பின்னர், இதுவரை நடத்தப்பட்ட எல்லா என்கவுன்ட்டர்கள் பற்றியும் விசாரணை வேண்டும் என்று பொங்கி எழுந்திருக்கிறார்கள்.

ஜம்மு_காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார். மைய அரசிற்கு அவர் ஒன்றரை மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப் படவேண்டும். அநியாயச் சாவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். மாநிலம் தழுவிய பந்த்திற்கு அவர் விடுத்த அழைப்பு மகத்தான வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இதுவரை கற்பிக்கப்பட்ட எல்லா என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றியும் விசாரணை நடைபெறும் என்று மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருக்கிறார்.

அதற்கு முதல்படியாக, அண்மையில் ஐவரைப் பலிகொண்ட என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றி உடனடியாக விசாரணை நடைபெற வேண்டும். அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், காஷ்மீர் ஏரி ரத்தத் தடாகமாகத்தான் உருமாறும்.

நன்றிங்க

காஷ்மீர் மக்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.

Sunday, February 11, 2007

ரொம்ப ரொக்கந்தான்?!

ரகுபதி விவகாரம்: கருணாநிதிக்கு ஜெ.சவால்

10 பெப்ரவரி 2007

மத்திய அமைச்சர் ரகுபதியின் செயலாளர் விவகாரத்தில் தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதியும் ரகுபதியும் பதிலளிக்க தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் முகமது ஷகீலை மத்திய உளவுத்துறை விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த நேரத்தில் அவர் தமிழக அரசுப் பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது புகாருக்கு உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டிலோ அல்லது ரகுபதியோ பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, தனது கேள்விக்கு விடை அளிக்காமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க இரண்டு பேரும் முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கருணாநிதியும் ரகுபதியும் தான் அனுப்பி வைக்கு நபரின் கேள்விகளுக்கு தொலைக்காட்சி, பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் பதிலளிக்கத் தயாரா என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.

நன்றிங்க

****************************************************

ரகுபதி செயலாளர் மாற்றம்: ஜெ. புகாருக்கு கருணாநிதி பதில்

11 பெப்ரவரி 2007

திமுகவைச் சேர்ந்த உள்துறை இணையமைச்சர் எஸ். ரகுபதியின் தனிச் செயலாளர் முகமது ஷகீல் அக்தரை இரவோடு இரவாக தமிழக அரசுப் பணிக்கு மாற்றியிருப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டை முதல் அமைச்சர் கருணாநிதி மறுத்திருக்கிறார்.

சென்னையில் இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி-பதிலில், அக்தரை பணியிட மாற்றம் செய்யக் கோரி ஜெயலலிதாதான் கோப்பில் கையெழுத்திட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அதிகாரி இரவோடு இரவாக அழைக்கப்படவில்லை என்றும், ஜெயலலிதா கூறுவது வழக்கம்போல புளுகுதான் என்றும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான உலக மகாப் பொய்யாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமேயானால் அல்லது மத்திய அரசு புகார் கூறுமேயானால் அக்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நன்றிங்க

ஆமாளு...
ரெண்டு பேரும் பேசிக் கொள்வதை பார்த்தால் முன்னாள், இன்னாள் இரு முதல்வர்களும் ரொம்ப ரொக்கந்தான்?!

Wednesday, February 07, 2007

அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!

ஈராக்கிற்கான தென்கொரிய அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!

திங்கள், 05 பெப்ரவரி 2007

வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற குர்திஷ் நகரத்திற்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட தென்கொரிய படைவீரர்களில் 37 பேர் அடங்கிய ஜைத்தூன் என்ற படைப்பிரிவு கூறிய கூற்றுக்கள் இவை: "மற்ற எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக மனித நேயத்தையும் அமைதியையும் போதிக்கும் காரணத்தாலேயே நாங்கள் இஸ்லாத்தைத் தழுவினோம். பயங்கரவாதம் பெருகி விட்ட ஈராக்கில் அமைதியை நிலை நாட்ட வரும் எங்கள் முயற்சிக்கு இஸ்லாமிய அடிப்படையிலான அமைப்புகள் மூலம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது"

தென்கொரியாவின் சியோல் நகரத்தின் ஹன்னம்டாங் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈராக்கிற்கான பிரத்தியேகப்படை ராணுவ உயர் அதிகாரியான ஸன் ஹியோன் ஜூ உள்பட 37 பேர் கலந்து கொண்ட ஜைத்தூன் குழு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படைவீரர்கள் இஸ்லாத்தைத் தங்கள் மார்க்கமாக தேர்ந்தெடுத்துள்ளதாக உறுதியுடன் கூறினர்.

முஸ்லிம் அல்லாத ஒரு நபர் முஸ்லிம் ஆக ஆவதற்கான இஸ்லாமிய அடிப்படை விதிகளின் படி, முதலில் தங்களைக் குளித்துப் பரிசுத்தமாக்கிக் கொண்ட படைவீரர்கள் பள்ளி இமாமின் வழிநடத்தலின் பெயரில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்" எனப் பொருள்படும், "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" என்று மொழிந்து இஸ்லாத்தைத் தழுவினர்.

இமாமைப் பின் தொடர்ந்து அனைத்து கொரிய படை வீரர்களும் தோளோடு தோள் சேர்த்து ஓரணியில் நின்று ஏகத்துவ அடிப்படையை முழங்கிய தொனியும் அந்நேரம் அவர்களின் முகங்களில் தென்பட்ட பூரிப்பும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை தந்தன.

இந்நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருகை தந்திருந்த மாற்றுமதத்தினர் சிலரும் அங்கே கண்ட சகோதரத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவ உறுதிபூண்டதை அங்கு பார்க்க நேர்ந்தது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே தாங்கள் இஸ்லாத்தைத் தழுவக்காரணமாய் அமைந்தது என்று இப்படைக்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். குழுவில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற படை வீரர் ஒருவர் கூறுகையில், "போர் சமயத்தில் கூட பெண்கள் கொல்லப்படக் கூடாது என்ற இஸ்லாத்தின் மிக உயரிய நெறியே தன்னைக் கவர்ந்தது" என்று கூறினார்.

"கல்லூரியில் அரபி மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருந்த நான், குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்த கணத்திலேயே இஸ்லாத்தின் பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அப்போதே இஸ்லாத்தினைத் தழுவுவது என்று முடிவு செய்து விட்டேன்" என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் பேக் ஸியோங்க் என்ற 22 வயது படைவீரர்.

பரவசத் துடிப்புடன் தம் எண்ணத்தை விவரித்த இவர், தான் ஈராக்குக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டால், அங்குள்ள இஸ்லாமிய குடிமக்களுடன் சகோதரத்துவம் கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட கொரியப் படைவீரர்கள் ஈராக்கை ஆக்கிரமிக்க வரவில்லை, மாறாக மனித நேயத்துடனான உதவிகளைச் செய்வதற்காகவே வந்துள்ளோம் என்ற எங்களின் குறிக்கோளை இஸ்லாம் கூறும் அழகிய போதனைகள் கொண்டு அறிவுறுத்துவோம் என்றும் கூறி முடித்தார்.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

நன்றிங்க

//இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.//

Tuesday, February 06, 2007

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது??!!

விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!

செவ்வாய், 06 பெப்ரவரி 2007

அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாக அறிவித்துள்ளார். இறைவனின் புறத்திலிருந்து உதவி செய்யப்பட்ட விவேகம் மிக்கவர் என்ற பொருள்படும் "ஹக்கிம் மன்சூர்" என்ற அழகிய பெயரை மேகான் நகர இஸ்லாமிய மையத்தின் இமாம் ஆதம் ஃபோபனா அவர்கள் தேர்ந்தெடுத்து இவருக்குச் சூட்டியுள்ளார்.

வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.

உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.

90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.

ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை
என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.

அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

நன்றிங்க

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா.....? ஆம்??!!
சதாம் ஹுசைன் வாள் முனையில் ஜாக் எல்லிஸை ஹக்கிம் மன்சூராக மதம் மாற்றி விட்டார் - இதையும் நம்புங்கள்.

Sunday, February 04, 2007

பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை.

பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை, கலாம் மீது தாக்கரே தாக்கு.

மும்பை பிப்,4
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நடத்தை அவரது பதவிக்கு ஏற்றதாக இல்லை என சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டினார்.

மும்பை மநாகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சி தலைமையகத்தில் பத்திரிகையாளர்களிடம் தாக்கரே சனிக்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முகமது அப்சல் குருவுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், அதை நிறைவேற்றுவது தொடர்பான கோப்பு இன்னும் கலாம் மேஜையில்தான் கிடக்கிறது.

மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றி: மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனைக்கு கிடைத்த வெற்றி என்னைத் திகைப்படையச் செய்து விட்டது. இந்த வெற்றிக்கான பெருமை கட்சி நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேயையும் அவரது குழுவினரையும் சாரும் என்றார் பால் தாக்கரே.

நன்றிங்க

அட பைத்திக்காரத்தனத்துக்கும் ஒரு அளவு இல்லையா?

கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்களும் வாக்களித்தோம் என்கிறதைச் சொல்லி அதுக்காக முகமது அப்சலுக்கு உடனே தூக்குத் தண்டனை கொடுன்னு சொன்னா! மரண தண்டனை பத்தி மத்திய அரசும் சேர்ந்துல்ல முடிவெடுக்கெனும். அதுக்கு கலாம் என்ன செய்வாரு?

என்னமோ அப்சலுக்கு முந்திய வழக்குகளெல்லாம் முடிஞ்சி போயி அப்சல் வழக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்படாமல் மிஞ்சியிருக்கிற மாதிரி இந்த பைத்தியம் புலம்புதே அப்படியே கொஞ்சம் குஜராத்துக்கும் சேர்த்து புலம்பினால் பைத்தியத்திடம் உள்நோக்கம் எதுவுமில்லை என்பதையாவதை நம்பலாம்.