Sunday, May 06, 2007

நாடி சோதிட மோசடி.

நாடி சோதிட மோசடியை எதிர்த்து வழக்கு

நாடி சோதிட மோசடிகளைத் தடை செய்யக் கோரி, சீர்காழி, குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகாலமாகவே நடைபெற்று வரும் இந்த மோசடியை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இது பற்றிய செய்தி விவரம்:

நாகை மாவட்டம் - மயிலாடு துறைக்கு அருகே உள்ளது வைத்தீஸ்வரன் கோயில் என்ற சிற்றூர். வைதீசுவரன் கோயில் வியாதிகளைப் போக்கும் திருத்தலமாக பக்தர்களால் நம்பப்படுவதால் இங்கு பக்தர்கள் கூட்டமாக வருகிறார்கள். இந்த சிற்றூரில் 'நாடி சோதிடம்' என்ற மோசடி வியாபாரமும் நடந்து வருகிறது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலம் முழுதும், ஓலைகளில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதாம். நாடி சோதிடம் பார்க்கிறவர்களிடம் பெயரைச் சொன்னால், உடனே அவர்கள், அவர்களுக்கான ஓலையைக் கண்டுபிடித்து, அவரது கடந்த காலத்தையும், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் அப்படியே சொல்வார்கள். இப்படி இந்த ஊரில் சுமார் 50 பேர் நாடி சோதிடம் பார்ப்பதாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் நாடி சோதிடம் பார்க்க வருகிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் பிறகு தெரிந்து கொண்டு, வாய் மூடி மவுனம் சாதித்து விடுகிறார்கள்.

சீர்காழியைச் சார்ந்த கோபால கிருட்டிணன் என்ற தோழர் - இப்போது இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நாடி சோதிடம் பார்க்கச் சென்றபோது முதலில் அவரது கைரேகையைப் பதிவு செய்தார்கள். கைரேகையின் அடிப்படையில் அவருக்கான ஓலையைக் கண்டுபிடிப்பதாக, நாடி சோதிடர் கூறி, ஒரு ஓலையைக் கொண்டு வந்தார். அவருடைய கடந்த காலம், எதிர்காலத்தை, ஓலைச் சுவடி மூலம் "கண்டறிந்து", எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தார்.
ஒலி நாடாவிலும் இதைப் பதிவு செய்து கொடுத்துள்ளார். கோபால கிருட்டிணனின் தாயார் உயிருடன் உள்ளார்.

ஆனால் நாடி சோதிடரோ, தாயார் இறந்துவிட்டதாகக் கூறினார். கோபாலகிருட்டிணன் விவசாயத் தொழில் செய்கிறார். நாடி சோதிடரோ அவர் மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுவதாக, ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கோபாலகிருட்டிணன், செங்குட்டுவன் என்ற தனது நண்பரின் ரேகையை கொடுத்து பலன் கேட்டார். செங்குட்டுவனுக்கு நல்ல ஆயுள் இருப்பதாகவும், 75 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்று, அவரது ஓலைச் சுவடியில் குறிப்பு இருப்பதாக, சோதிடர் கூறினார். உண்மையில் செங்குட்டுவன் ஏற்கனவே இறந்து விட்டார், அவருக்கான ஓலைச் சுவடியை கோபாலகிருட்டிணன் சோதிடருக்குத் தெரியாமல் ரகசியமாக படம் பிடித்துக் கொண்டு, அதை தஞ்சை சரபோஜி கல்லூரிக்கு எடுத்துச் சென்றார். ஒலைச் சுவடியின் எழுத்துகளைப் படிக்கக் கூடிய கம்ப்யூட்டர் - தஞ்சை சரபோஜி நூலகத்தில் இருக்கிறது. அதில் படம் பிடித்து வந்த ஓலைச் சுவடியைப் போட்டுப் பார்த்த போது, சோதிடர் கூறியதற்கும், ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.

இவை எல்லாமுமே - நீதிமன்றத்தில் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர் வேலு குபேந்திரன், சீர்காழி சோமசுந்தரம் உள்பட 5 வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முடிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிகளுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் களம் இறங்கியுள்ளது.

பண பலம், அடியாட்கள் பலத்துடன் நாடி சோதிடர்கள் வசதியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கு வந்தவுடன், மிரட்டல் படலமும் தொடர்ந்தது. காவல்துறை அதிகாரியிடம், வழக்கு தொடர்ந்த கோபாலகிருட்டிணனும், வழக்கறிஞர்களும் புகார் கொடுத்தனர். காவல்துறை பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்துள்ளது.

நாடி சோதிட மோசடி: அரசுக்கு வேண்டுகோள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை:

மக்களின் மடைமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு... குட்டி சாத்தான், பேய், பில்லி சூனியம், ஏவல் விடுதல், கைரேகை, சோதிடம், வாஸ்து, யோகம், தியானம், ஆன்மீகம் என பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.

கல்வியறிவு, சாதிய படிநிலைகளின் ஏறு வரிசையில் மேற்கண்ட வற்றில் ஏதேனும் ஒன்றில் ஏமாறுகிறார்கள். ஆனால் பணக்காரன், படிப்புக்காரன், பதவிக்காரன் என எல்லா தரப்பினரும் ஏமாறும் துறை ஓலைச் சுவடி நாடி சோதிடம் ஆகும்.

சீர்காழியை அடுத்த வைதீசுவரன் கோயிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த ஏமாற்றுத் தொழில் முதல்முறையாக நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாகியுள்ளது.

சீர்காழியைச் சார்ந்த கோபாலகிருட்டிணன் என்பவர் நாடி சோதிட புரட்டை அம்பலப்படுத்தும் நோக்கில் உயிரோடிருக்கும் தனது தாயார், முதிராச் சாவெய்திய உறவினர் செங்குட்டுவன் ஆகியோரின் ரேகையைக் கொடுத்து பலன் கேட்க உயிரோடிருக்கும் தாயாரை இறந்துவிட்டதாகவும், இறந்து போன செங்குட்டுவன் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார் என்றும் சொன்னதை எழுதி வாங்கியுள்ளார்; ஒலிப்பதிவு செய்துள்ளார்; ஒளிப்படம் எடுத்துள்ளார்.
அவற்றை ஆதாரமாகக் கொண்டே சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரை அடியாட்களைக் கொண்டு மிரட்ட போய் காவல்துறைக்கும் இவ்வழக்கு போயுள்ளது.

அவைகள் ஒருபுறம் இருக்கட்டும்!

இந்த ஓலைச்சுவடி நாடி சோதிடர்கள் அனைவருமே தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் ஓலைச்சுவடிகளைப் பார்த்தே தாங்கள் பலன் கூறுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அவ்வாறு ஏதேனும் ஓலைச்சுவடிகள் தங்கள் நூலகத்தில் உள்ளனவா? அவை வைதீசுவரன் கோவில் நாடி சோதிடர்களால் அவ்வப்போது ஒப்பு நோக்கப்படுகிறதா? என்ற விவரங்களை வெளியிட வேண்டிய சமுதாயக் கடமை (மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் இயக்குநர்) அவர்களுக்கு உண்டு.

மக்களின் அறியாமையையும், ஆர்வத்தையும் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் இம்முயற்சியில் பெரியார் திராவிடர் கழகமும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

எவ்வாறாயினும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தார் இது குறித்த விளக்கங்களை உடனே வெளிப்படுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறோம்.

நன்றிங்க

என் கைரேகையை பதிவு செய்து ஓலை சுவடியில் பலன் பார்த்தப்ப, இந்த செய்தியை விமர்சித்தால் ரத்தம் கக்கி போய் சேர்ந்து விடுவாய்னு சோதிடம் சொன்னதால்... இதை விமர்சிக்க தில்லு இல்லீங்க :)

Saturday, May 05, 2007

எம்மதமும் சம்மதங்க!

திருமண வரன் விளம்பரங்களில் "மதம் ஓர் தடையில்லை!" "எம்மதமும் சம்மதம்" என்று சிலர் குறிப்பிடுவார்கள். இந்த பாலிசியைக் கடைபிடித்து சீனிவாசன் என்ற இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஏமாற்றுக்காரன் பற்றிய செய்தியப் பாருங்க!



முஸ்லீம் பெண்ணை மணந்த இந்து வாலிபர்
கிறிஸ்தவ பெண்ணை ஏமாற்றி திருமணம்!!


மே 04, 2007

சென்னை: முஸ்லீம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட இந்து வாலிபர், அதை மறைத்து விட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன். செல்போன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் ரஸியா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் கடந்த 2001ம் ஆண்டு காதல் மலர்ந்தது. ரஸியா பேகம் ஆசிரியையாக உள்ளார்.

இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இருவரது வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்து முறைப்படி ரஸியா பேகத்தை கல்யாணம் செய்து கொண்டார் சீனிவாசன். அதன் பின்னர் இருவரும் தனி குடித்தனத்தை ஆரம்பித்தனர்.

இருவரது குடும்பத்தினரும் இவர்களை ஏற்றுக் ரொள்ளவில்லை. இருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருவரும் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை நாளாக நாளாக கசக்க ஆரம்பித்தது.

அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டார் சீனிவாசன். ரஸியா பேகமும் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில்தான் தனது செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த மைதிலி என்ற பெண் மீது காதல் கொண்டார் சீனிவாசன். மைதிலியிடம் தனக்கு திருமணம் ஆன விவகாரத்தை மறைத்து அவரைக் காதலிக்க ஆரம்பித்தார் சீனிவாசன்.

மைதிலியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டனர். மைதிலி கிறிஸ்தவப் பெண் என்பதால் அவரது கல்யாணம் பிராட்வேயில் உள்ள கிறிஸ்தவ பேராலாயத்தில் நடந்தது.

இந்த நிலையில் இதுகுறித்துக் கேள்விப்பட்டார் ரஸியா பேகம். அதிர்ச்சி அடைந்த அவர் தேவாலயத்திற்கு விரைந்தார். ஆனால் அதற்குள் கல்யாணம் ஆகி விட்டது. மண்ணடியில் உள்ள கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ரஸியா பேகம். பின்னர் அங்கு விைரந்தார். போலீஸாரும் மண்டபத்திற்கு விரைந்து வந்தனர். நடந்ததை அறிந்து மைதிலி குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

இதையடுத்து மைதிலியின் தந்தையும் ஒரு புகார் கொடுத்தார்.

ரஸியா பேகம் மற்றும் மைதிலியின் தந்தை கொடுத்த புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனைக் கைது செய்தனர்.

இந்து வாலிபர் இரு மதத்தைச் சேர்ந்த பெண்களை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்கிறார்கள் என்று ஒப்பாரி வைப்பவர்கள் அனேகமாக தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் இனி சொல்ல வேண்டும். அதிக பட்சம் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மார்க்க அனுமதி இருந்தாலும் முஸ்லிம்களில் 99% ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ்கிறார்கள் .

ஐயா,
இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஏமாற்றியவர் இந்துவாக இருந்தாலும் கைது செய்யப் பட்டுள்ளாரே! ஆகவே இதை பெரியமனசு பண்ணி பெரிசு படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று நடுநிலையாளர்கள் சொல்லலாம்.

விபச்சாரம் + ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களாகக் கருதப்பட்டு பொதுவில் வைத்து தண்டிப்பதன் மூலம் இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் உருவாகாமால் இருக்க ஒரு சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது இஸ்லாம்.

ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன் எப்படியும் பதினைந்து நாட்களுக்குள் வெளிவந்து மீண்டும் தன் கைவரிசையைக் காட்டுவார். அப்போதும் நமது பத்திரிக்கைகள் மூன்று பெண்களை ஏமாற்றியவன் XXXX ஆவது பெண்ணை ஏமாற்றும்போது கைது! என்று ஏமாற்றுபவர்களுக்கு புகழாரங்களுடன் ஊடக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் பல ஏமாற்றுக்காரர்களை உருவாக்குவார்கள்!

ஏமாற்றுக்காரர்களை நம் நாட்டு சட்டத்தால் தண்டிக்க முடியாது!

ஏன் தெரியுமா?

அவர்கள் சட்டத்தையும் ஏமாற்றத் தெரிந்தவர்கள்!

**************************************
இதே மாதிரி ஒரு செய்தியை (இதில் மோசடி இருப்பதாக தெரியல) வைத்து காவி பரிவாரக் கும்பல்கள் கும்மியடிப்பதை இங்கே பாருங்க.

இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது.

Wednesday, May 02, 2007

வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொலை

மே 02, 2007  

அகமதாபாத்: குஜராத் போலீஸாரால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொராப்தீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இன்ஸ்பெக்டர் ஒருவர் கற்பழித்து பின்னர் விஷம் வைத்துக் கொலை செய்து விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி மனைவி கெளசர் பீபியுடன் அமகதபாத்திலிருந்து சாங்க்லி நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஷேக்கையும், கெளசர் பீபியையும் போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிக் கார் ஒன்றில் கடத்திச் சென்றனர்.

 இருவரையும் அகமதாபாத் அருகே திஷா என்ற இடத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் சிறை வைத்தனர். பின்னர் ஷேக்கை மட்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று 26ம் தேதி போலி என்கவுண்டர் மூலம் கொன்று விட்டனர்.

கெளசர் பீபியை, பாஜக கவுன்சிலர் சுரேந்திர ஜிரவாலாவுக்குச் சொந்தமான கோபா என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள அர்ஹாம் பங்களாவுக்கு கொண்டு சென்று சிறை வைத்தனர். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு இன்ஸ்பெக்டர் நிறுத்தப்பட்டார்.

அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபியை கற்பழித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கெளசர் பீபி, அனைத்தையும் வெளியில் சொல்லப் போவதாக கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டது.

இன்ஸ்பெக்டரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குஜராத் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால், அவர் தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் என்று மட்டும் தெரிய வந்துள்ளது. சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது இத்தகவல்களை குஜராத் அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புகார் குறித்து ஜிரவாலா கூறுகையில், கெளசர் பீபி எனது இல்லத்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நான் சபர்மதியில் வசித்து வருகிறேன். எப்போதாவதுதான் கோபாவில் உள்ள பங்களாவுக்கு வருவேன். எனது வீட்டின் காவலரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டதாக புதிதாக வெளியுள்ள தகவல் குஜராத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

நன்றிங்க

பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட இந்த கொடுமையான நிகழ்ச்சி மதம் சார்ந்த, சாராத ஜாதி மத வேற்றுமையின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Tuesday, May 01, 2007

சரத் சார்!

ஓரிரு மாதத்தில் புதிய கட்சி-சரத்குமார்

மே 01, 2007

சென்னை: அரசியல் எனக்கொன்றும் புதியதல்ல, அரசியல் சாக்கடை, ஊழல் நிறைந்து என ஒதுங்கியிருப்பவர்களை

ஓரிரு மாதத்தில் நான் தொடங்கும் கட்சியில் இணைத்து மக்களுக்காக பாடுபடுவேன் என நடிகர் சரத்குமார் கூறினார்.

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா முடிந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பெருந்தலைவர் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது 2 ஆண்டு காலமாக சிந்தித்து, அரசியல் கட்சிகளிலிருந்து விலகிய பின் இப்போது அந்த பணியை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த மணிமண்டபம் என் தனிப்பட்ட பெயரில் அமையாது. காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை என்ற பெயரில் அமையும். இந்த மணி மண்டபம் எப்படி அமைய வேண்டும் என ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. 6 மாதத்திற்கு பிறகு ஆய்வு முடிவுப்படி மண்டப பணிகள் தீவிரமடையும்.

மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவின் போது ஏற்பட்ட சம்பவங்கள், அரசியல் கட்சி துவங்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டன. அதற்காக முயற்சியில் இறங்கிவிட்டோம். இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிடுவோம்.

இன்னமும் இரண்டு மாதத்திற்கு கட்சி தொடங்கப்பட்டுவிடும். எங்கள் தனித்துவத்துடன் விளங்கும். மக்களாட்சியாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும்.

எனக்கு ஒன்றும் அரசியல் புதிதல்ல. நாங்கள் தொடங்கும் அரசியல் கட்சி யாருக்கும், விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் கூட போட்டியாக இருக்காது.

அரசியல் சாக்கடை என ஒதுக்கியுள்ளவர்களை இந்த கட்சியில் இணைப்போம். காமராஜர் வழியை பின்பற்றுவோம்.

அவருடைய ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு மக்களிடம் கேட்போம். மக்களுக்காக இந்த கட்சி பாடுபடும்.

எந்த இயக்கமும் அரசியல் கட்சியாக மாறுவது இயல்பு, எங்கள் அமைப்பும் அரசியல் கட்சியாகும்.

மக்களுக்கு என்ன தேவை, இளைஞர்களுக்கு எப்படி நம்பிக்கையோடு இருப்பது என்பது குறித்து விவாதித்து அவர்களுக்காக பாடுபடும் வகையில் தன்னலமற்ற கட்சியாக இது இருக்கும்.

புதிய கட்சி ஆரம்பிப்பதால் என்னுடைய சினிமா சம்பந்தப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாது.

காமராஜர் மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு நிர்பந்தம் காரணமாக மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்ணான்டஸ் வரவில்லை.

சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவரும் யாதவ சமூகத்தின் தலைவருமான கோபாலகிருஷ்ணன் மணிமண்டபம் கட்டுவதற்கும், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு என்ற நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நன்றிங்க

//அரசியல் சாக்கடை என ஒதுங்கியிருப்பவர்களை இந்த கட்சியில் இணைப்போம்.//

//எந்த இயக்கமும் அரசியல் கட்சியாக மாறுவது இயல்பு, எங்கள் அமைப்பும் அரசியல் கட்சியாகும்.//


சரத் சார்,

உங்கள் கொள்கை விளக்கம் சூப்பர்!!!!!

அரசியலை சாக்கடைன்னு எண்ணி ஒதுங்கியவர்களை விடாமல் துரத்தி உங்கள் கட்சியில சேர்த்து மீண்டும் அரசியலெனும் சாக்கடையில் வலிய புகுத்துவோம்னுதானே சொல்ல வாரீங்க :)