Thursday, March 15, 2007

நக்சலைட் தாக்குதலில் 55 காவலர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி

வெள்ளி, 16 மார்ச் 2007

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தரித்த நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் பிற 39 பேர் சிறப்புக் காவல் அலுவலர்கள் (Special Police Officers)

பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணி போத்லி என்ற கிராமம் அருகில் நடைபெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்ற 12 காவலர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த அதிகாலை இருட்டு வேளையில் கிட்ட தட்ட 400 முதல் 500 மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் எளிதில் சென்றடைய முடியாத ராணி போட்லி காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த முறையில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில், காவல் துறையினர் இருந்த வளாகத்தை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. நாட்டு பெட்ரோல் குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த இடம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

அந்த வளாகத்தில் 20 காவல்துறையினரும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் ஆயுதக் குழுவினரும் தங்கியிருந்தனர். இந்த தாக்குதலின் போது தப்பித்து வெளியேற முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல ஆயுதங்களை பறிமுதல் செய்து கொண்டு காடுகளுக்கு தப்பிச் சென்றனர். சத்தீஸ்கர் மாநிலம் உருவானபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து இந்தியாவின் உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இதனைக் கடுமையாக கண்டனம் செய்ததுடன், மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

நன்றிங்க

தாக்குதலுக்கு இஸ்லாமே காரணம் என்று ஜல்லியடிப்பவர்கள் தொடங்கலாம்.

Thursday, March 01, 2007

ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை

ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கம்
வியாழன், 01 மார்ச் 2007

ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் வசிக்கும் ரிதா ஸியாம் எனும் 47 வயதான தந்தை ஒருவர் தனக்குப் பிறந்தகுழந்தைக்கு ஜிஹாத் எனப் பெயரிட்டுள்ளார். அந்நாட்டு சட்டப்படி இப்பெயரைப் பதிவுசெய்ய அவர் அரசின்உள்துறையை அணுகிய போது அங்கிருந்த அலுவலர்கள் குழந்தையின் பெயரை ஜிஹாத் எனப் பதிவு செய்ய
மறுத்துப் பெயரை மாற்றும் படி கோரியுள்ளனர்.

ஆனால் இது அந்நாட்டுச் சட்டப்படி தனக்கு அளிக்கப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும் என்று அவர்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்த அவர், அதிகாரிகள் ஏன் இப்பெயரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என விசாரித்தபோது ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுதல் என்று ஓர் அலுவலரும், ஜிஹாத் என்றால் பயங்கரவாதம், போர் என்று இன்னோர் அலுவலரும் விளக்கம் (?) அளித்து அதனால் இப்பெயரைப் பதிவு செய்ய மறுப்பதாகத் தெரிவித்தனர்.

அவர்களுக்கு விளக்கம் அளிக்க முயன்று தோற்றுப் போன அவர் இறுதியில் அந்நாட்டின் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் திரு ஸியாம் தன் குழந்தைக்கு ஜிஹாத் என்று பெயரிட முழு உரிமை இருப்பதாகத் தீர்ப்பளித்து உள்துறையை அப்பெயரைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் 18 மாத காலம் ஜெர்மனியின் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜெர்மானிய உள்துறை தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் குழந்தைகளுக்குப் பெயரிடுவதற்கென்று பல விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு இணங்காத பெயர்களை அரசு பதிவு செய்ய மறுத்துவிடுகிறது என்பது தனித் தகவலாகும். எடுத்துக்காட்டாக ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் என்ற பெயர்கள் பதிவுசெய்யப்படமாட்டா.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிரபல மனித உரிமை ஆர்வலர் கேரன் ஆம்ஸ்ட்ராங், மேற்கத்திய ஊடகங்களின் திட்டமிட்ட அயராத பொய்ப்பிரச்சாரத்தால் ஜிஹாத் என்ற சொல்லின் உண்மையான பொருள்களில் ஒன்றான 'கடுமையாக முயற்சி செய்தல்' என்பது பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட ஒன்றாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

நன்றிங்க

''ஜிஹாத்'' என்ற சொல்லின் உணமையான பொருள் தெரியாமல் வலைப்பூவிலும் சிலர் அதைத் திரித்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.