Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Friday, August 01, 2008

பெண்மைக்குப் பெண்ணே எதிரி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
 
இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

நன்றிங்க - இந்தவார ஆனந்த விகடனில் டாக்டர் டி. நாராயண ரெட்டி

முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து, முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும் பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ''சுதந்திரம்'' எனும் பெயரில் மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில் நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும் மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில் மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.

நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் - நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளுங்கள்!

ஜனநாயக நாடகம்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக" தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே படித்துக் கொண்டிருப்பதை நக்கீரன் இதழ் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தம்மைக் "காவல் துறை வலைவீசித் தேடி" வருவதாக அன்று காலைச் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழை அதே மாலையில் சென்னை மண்ணடியில் மாநகரக் காவல் துறை ஆணையரது அனுமதி பெற்று, நூற்றுக் கணக்கான காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பழனி பாபா படித்துக் காட்டினார்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களது பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் தொலைக் காட்சியிலும், "தீவிரவாதி கைது!" என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தால் நீங்கள் சிரிப்பீர்களா? அழுவீர்களா?

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீலுக்கு அதுதான் நடந்தது.

கடந்த 29 ஜூலை 2008 செவ்வாய்க்கிழமை "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி காவல்துறையின் பிடியில்" என்ற கைரளி மக்கள் தொலைக் காட்சிச் செய்தியை அதே இஸ்மாயீல் தன் குடும்ப சகிதம் தன் வீட்டில் அமர்ந்து தன் வீட்டிலுள்ள தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறார்.

அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

மறுநாள் 30 ஜூலை 2008 புதன்கிழமை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தியனுப்பி, தன் மனைவி, குழந்தைகள் சகிதம், "நிம்மதியாக வாழ முடியவில்லை; வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்சியளித்தார்.

இவ்வாறு அவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கூட்டி அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம் உண்டு.

கைரளி மக்கள் தொலைக் காட்சியின் "கைது"ச் செய்தியை உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் அச்செய்திக்குக் கண்ணும் காதும் வைத்துத் தன்னை தீவிரவாதியாகவே சித்தரித்து விட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான நாளிதழ்கள் - கேரளத்தை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான 'தேசாபிமானி' உட்பட அனைத்து நாளிதழ்கள் - மீதும் தன் உள்ளக் குமுறலை அவர் கொட்ட வேண்டியிருந்தது.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை தன்னைத் தீவிரவாதியாக்கியக் கதையையும் பத்திரிகைகள் பொய் செய்திகளைப் பரப்பித் தன்னை அவமானப் படுத்தியதையும் அவர் விவரித்தார்.

"கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருக்கும்போது கைரளி பீப்பிள்ஸ் தொலைக் காட்சியில் என்னை பெங்களூர் காவல்துறை கைது செய்து, கஸ்டடியில் எடுத்திருப்பதாகச் சொன்ன செய்தியினைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை ஜென்மபூமி உட்பட பல முக்கிய பத்திரிகைகளும் நான் பெங்களூர் காவல்துறையில் பிடியில் உள்ளதாகச் செய்தி வெளியிட்டன. அவர்களைத் தொடர்பு கொண்டு, அச்செய்தி பொய் என நான் தெரிவித்த பின்னரும் எந்தப் பத்திரிகையும் என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியைத் திருத்தவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. எனவே உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்ட முயன்றேன்" எனக் கூறும் பொழுது இஸ்மாயீலின் முகத்தில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவனின் வேதனை தெரிந்தது.

1990இல் கேரள மாநிலக் காவல்துறையில் இணைந்த பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீல், காவல்துறையில் சிறப்புக் கமாண்டோ பயிற்சி பெற்றவர்.

அப்துல் நாசர் மஅதனியைக் கொலை செய்யும் நோக்கோடு அவர் மீது சங் பரிவாரத்தினரால் வீசப் பட்ட வெடி குண்டு வெடித்து, அவர் ஒரு காலை இழந்த பின்னர், 1992இல் மஅதனியின் சுய பாதுகாப்புக்காக அவர் உருவாக்கிய 'பூனப் படை'யினருக்கு இஸ்மாயீல் பயிற்சி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுதான் அவர் எதிர் கொள்ளும் தொல்லைகளின் தொடக்கம். தம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருந்த சகப்பணியாளர்களில் சிலரே இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடங்கி வைத்தவர்கள் என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இவர் மீது விசாரணை நடத்திய பொழுது அக்குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெளிவானது.

அதன் பின்னரும் அவர் காவல்துறை பணியில் இருந்து கொண்டே தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் எழும்பியிருந்தன. இதனால் எதிர்கொள்ள வேண்டி வந்த பல விசாரணைகளில் மனம் வெறுத்துப் பணிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல இயலாமல் இருந்தார். அதைக் காரணம் காட்டி, 1996இல் இஸ்மாயீல் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

"காவல்துறை பணியிலிருந்து மனரீதியாகத் என்னைக் கொடுமைப் படுத்தி வெளியேற்றியவர்கள்தான் இப்பொழுதும் எங்காவது எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் அதற்கும் எனக்கும் எந்தவித முகாந்திரமோ தொடர்பு ஆதாரமோ இல்லா விட்டாலும் அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தி, மேன்மேலும் கொடுமைப் படுத்த முயல்கின்றனர்" என்று காவல்துறையின் 'லின்க்' கொடுக்கும் தந்திரத்தை அம்பலப் படுத்தி குற்றம் சுமத்துகிறார் இஸ்மாயீல்.

காவல்துறை பணியிலிருந்து வெளியேறிய பின்னர் கேரளத்தில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் காவல்துறை தம்மைத் தேடி வருவது வழக்கமாகவே ஆகி இருந்தது என்று இஸ்மாயீல் நினைவு கூர்ந்தார். காலடி என்ற ஊரில் மக்கள் ஜனநாயக் கட்சி அணிவகுப்பில் நடைபெற்றத் தாக்குதலில் தம்மைக் காவல்துறை அநியாயமாக எதிரியாகச் சேர்த்து வழக்குத் தொடுத்து, தற்பொழுது அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புல்வெளி என்ற ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருந்துகளைத் தீயிட்ட வழக்கிலும் இஸ்மாயீல் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த தம்மை அநியாயமாகப் பிடித்துக் கொண்டு போய் இவ்வழக்கில் சேர்த்தக் காவல்துறை, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பஸ் எரிக்கப்பட்ட புல்வெளியில் கொண்டு போய் போட்டு, பொய் ஆதாரங்களை உருவாக்கியது என்றும் பின்னர் இவ்வழக்குப் புனையப் பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தம்மை விடுவித்ததையும் விளக்கினார்.

இதே போன்று களமச்சேரி என்ற ஊரிலும் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்றைத் தீயிட்ட வழக்கிலும் ஈ.கே.நாயனாரைக் கொல்ல முயன்றதாகப் புனையப் பட்ட வழக்கிலும் தம்மைக் காவல்துறை இணைக்க முயன்றதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த நாட்களில், "பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக ஊடகங்களில் செய்தி வந்த பின்னர் என்னைக் காவல்துறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரிலும் தொந்தரவு செய்து வருகின்றது. பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பொய்ச் செய்தி; நான் வீட்டில்தான் இருக்கின்றேன் என்ற விவரத்தை அறிவித்தப் பின்னரும் எந்த ஊடகமும் அதனை வெளியிட்டு நடந்த தவறில் திருத்தம் வெளியிட முன்வரவில்லை. காவல்துறையும் ஊடகங்களில் சிலவும் என்னைக் குறி வைத்துத் தொடர்ந்து செய்யும் இத்தகைய தொந்தரவுகளால் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இயலா நிலை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்" என அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் சேர்ந்து இஸ்மாயீலுடைய வேதனையைப் போக்குமா?

அதிரடிப்படை வீரராகப் பணியாற்றிய கமாண்டோ இஸ்மாயீலுக்கே இந்த கதி என்றால், "தீவிரவாதிகள் உருவாகக் காரண கர்த்தாக்கள் காவல் துறையும் ஊடகங்களும்தாம்" என்ற பரவலான குற்றச் சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியதுள்ளது.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் தம் மீது படிந்துள்ள கறைகளை நீக்குமா?

காத்திருப்போம்!

நன்றிங்க

Monday, July 28, 2008

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!

சகுந்தலா நரசிம்ஹன்

'ஹிஜாபை அணிந்தால்தான் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் Ghoonghat எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

நன்றிங்க

Tuesday, March 25, 2008

மதம் மாறிய இஸ்லாம் தலைவர் (!?)

Sunday, 23 March, 2008 11:10 AM
.
வாடிகன், மார்ச் 23: இத்தாலியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்ட வாடிகனில் நடைபெற்ற விழாவில் மதம் மாறிய அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.
.
மக்தி அல்லாம் என்ற அந்த இஸ்லாமிய தலைவர் பத்திரிகை ஒன்றில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விமர்சித்து அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதன் காரணமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் வாடிகனில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறினார். அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.

அல்லாமுடன் சேர்ந்து மேலும் 6 இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
எகிப்தில் பிறந்த அல்லாம் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க

//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.//

ம்ம்ம்...

ஆள் யாருன்னு இப்போ வெளங்குது!

Sunday, November 25, 2007

தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை!

சர்ச்சை எழுப்பக் கூடாது - தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

கொல்கத்தா: தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், லஜ்ஜா என்ற நூலை எழுதி வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, 1994ம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த அவரை வெளியேற சொல்லி முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் கலவரம் அங்கு வெடித்தது.

இதனை தொடர்ந்து அவர் வெளியேறி ராஜஸ்தானுக்கு சென்றார். ஆனால் அம்மாநில அரசு தஸ்லிமாவுக்கு தங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதால், அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் லாலு தஸ்லிமாவுக்கு புது எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி, தேவையில்லாமல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டார்.

முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லீம் மதத்தை பற்றி அவதூறாக சித்தரித்து எழுதியதற்காக அவரை கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், விசா நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்று சில முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு கூடி ஆலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் லாலு.

நன்றிங்க

//முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

நல்லாத்தான் சொல்லியிருக்கார், அம்மணிக்கு உரைக்குமா...?

Wednesday, October 31, 2007

தூண்டிவிட்ட மோடி.

04.11.07 மற்றவை

சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். 'தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்' என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.

அப்படியே 'முதல்வன்' படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.

மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.

ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி 'செயல்பட்ட' ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் 'கரசேவகர்கள்' ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.

'அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் ''வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.' அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'

இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. 'இந்துத்வா பரவும்' என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?

ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:

'கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, 'நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்' என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.'

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:

'முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.'

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

'வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.'

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:

'எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.'

பிரகாஷ் ரத்தோட்:

'பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். 'முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்' என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.'

சுரேஷ் ரிச்சர்ட்:

'முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.'

அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:

'கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.'

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:

'மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!'

மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.

விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?

நன்றிங்க, KUMUDAM REPPORTER

"அரசியல் அரக்கர்கள்"