Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

புதன், 01 ஆகஸ்ட் 2007

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை குற்றவாளிகளாக தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு, இன்று (1/8/2007) வழங்கப்பட்டது. கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில், அப்துல் நாசர் மதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று கேரள அரசு கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கேரள அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மதானிக்குக் கடும் சர்க்கரை நோய் பாதித்ததால் காலில் கேங்ரீன் எனும் கட்டி வந்திருந்தது. அதற்கான சிகிச்சை பெற பிணையில் வெளியில் வர நீதிமன்றத்தை அவர் தரப்பினர் அணுகியபோது அவர் வெளிவருவதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

கேரள அரசு மட்டுமல்லாது பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான நீதி விசாரணையின் போது மதானியைக் குற்றமற்றவர் என்று வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

ஒரு நிரபராதி அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது ரொம்ப ஜாஸ்தி தான். கிட்டதட்ட ஆயுள் தண்டனைக்கு நெருக்கமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார் மதானி.

நாம் என்ன குற்றங்கள் செய்தோம்? என்ன குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறோம்? என்பது கூட தெரியாமல் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் - அனுபவித்த பலரில் மதானியும் ஒருவர்.

அரசு, நீதி, காவல் ஆகிய துறைகளின் பொடு போக்குத் தனத்தால் ஒருவரை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்ய ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

மதானிக்கு, வாழ்க்கையில் இழந்த அந்த ஒன்பது ஆண்டுகள் போனது போனதுதானே!

ஒரு நிரபராதியை ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைத்துப் பராமறிக்க தேவையான செலவுகள், வழக்குகள் நடந்ததற்கான செலவுகள் மககளின் வரிப்பணத்திலிருந்து எடுத்து வீண் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

சோம்பேறிகள்!

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு: போனில் லோன்-கிரடிட் கார்ட் தொல்லை குறையும்

ஜூலை 31, 2007

டெல்லி: லோன் வேண்டுமா, கிரடிட் கார்டு வேண்டுமா, லைப் இன்சூர் பாலிசி போடுங்க என போனில் வரும் தொல்லைகளில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது.

பல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செல்போன் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் டெலிபோன் எண்களை பெற்று, தங்களது டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கொடுத்து நேரம், காலம் பார்க்காது லோன், கிரடிட் கார்டு வாங்க சொல்லி தொல்லை கொடுத்து வருகின்றன.

அதே போல பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றி வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. அவை தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பி.பி.மல்ஹோத்ரா கூறுகையில்,

வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை அழைக்காதீர் என்ற சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அந்த எண்களை பயன்படுத்த முடியாது.

தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த பட்டியலை பராமரிக்கும். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து யாருக்கெல்லாம் அழைப்பு தேவையில்லையோ அவர்கள் முதலில் தங்களது செல்போன் நிறுவனத்துக்கு தகவல் தர வேண்டும். அதன் பின்பு அந்த நிறுவனங்கள் தேசிய தகவல் மையத்துக்கு அந்த லிஸ்ட்டை கொடுத்துவிடும். அதன்படி "அழைக்காதீர்" பட்டியலில் அந்த எண்கள் சேர்க்கப்பட்டு இந்த சேவை வழங்கப்படும்.

இந்த புதிய முறைப்படி இனிமேல் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் கட்டாயமாக தங்களை பற்றிய விவரங்கள தொலை தொடர்பு துறையில் பதிவு செய்ய வேண்டும். அழைக்காதீர் பட்டியலில் பதிவு செய்தவர்களை இவர்கள் அழைக்கவே கூடாது என்றார்.

மத்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் (ட்ராய்) தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில்,

இதனையும் மீறி டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பொது மக்களை தொந்தரவு செய்தால் முதலில் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும். 2வது முறையாக அழைப்பு வந்தால் அந்த எண்ணுக்கு தொடர்புடைய டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்புக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறி 3வது முறையாக அழைப்பு விடுத்து தொந்தரவு செய்தால் அந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நெட்வொர்க் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

நன்றிங்க

ஸ்ஸ்ஸ்... அப்பாடா!!!

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

காஸ்னி : ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தென்கொரியர்களை மீட்க உதவுமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த 23 பேர் கொண்ட உதவிக்குழு, ஆப்கனுக்கு சென்றிருந்தது. இவர்களில் 16 பேர் பெண்கள். இவர்கள் கடந்த மாதம் 19ம் தேதி காந்தகாரில் இருந்து காபூலுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்த போது, தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதற்கு முதல்நாள் ஜெர்மனி இன்ஜினியர் ஒருவரையும் பிணைக்கைதியாக தலிபான் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் எட்டு பேரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கு முன் இது போன்று தலிபான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், இம்முறை அவர்களை விடுவிப்பது இல்லை என்று ஆப்கன் அரசு உறுதியாக உள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளில் விடுவிக்க கோருவோரில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் முகாம் அமைக்கப்பட்டுள்ளள பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கெடு விதித்து வருகின்றனர். முதல் இரண்டு கெடுக்கள் முடிந்த போது, தென்கொரியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அடுத்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்க உதவ வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது தென்கொரியா.

நன்றிங்க

தாலிபான் இயக்கம் பொது மக்களை பிடித்து வைத்துக்கொண்டு,அரசுக்கு கோரிக்கை வைப்பதும், கோரிக்கையை அரசு செவி மடுக்கவில்லையென்றால் பிடித்து வந்த பொதுமக்களைக் கொல்லும் இந்த ஈனச்செயல் முஸ்லிம்கள் வெட்கமும், வேதனையும் படவேண்டிய விஷயம்.

அட சண்டாளர்களா!